Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-16

16

” அப்பா எங்கே போயிருப்பார் என ஏதாவது உங்களுக்கு தோணுகிறதா அம்மா …? ” சஷ்டியின் கேள்வியில் கோமதியின் கண்கள் சட்டென நிரம்பிக் கொண்டன .

” தெரியவில்லையேம்மா .சிங்கப்பூரில் ஒரு நணபர் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார் .அங்கே வந்தால் நல்ல வேலை வாங்கித் தருவதாக அந்த நண்பர் சொன்னதாக சொல்லியிருந்தார் .உன் அப்பா அந்த வேலையை மறுத்து விட்டார் .காரணம் நான்தான் .என்னை கல்யாணம் செய்து கொண்டு இங்கேயே வாழ விரும்பியதால்தான் வெளிநாட்டு வேலையை வேண்டாமென்று விட்டார் .ஒரு வேளை சிங்கப்பூர் சென்று விட்டாரோ என்னவோ …? ,” கோமதியின் குரல் தழுதழுத்தது .

” போகும் போது உங்களிடம் ஒன்றும் சொல்லிப் போகவில்லையா அம்மா …? ” இந்தக் கேள்வியின் போது சஷ்டி தனது குரலை வெகுவாக குறைத்துக் கொண்டாள் .ஆனாலும் ….

” ஊரில்   கடன் வாங்கி வைத்திருப்பவன்  ஊரை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டா போவான் …? ” பதில் சொன்னது பாட்டியம்மா .இவருக்கு எப்படி கேட்டது …?




அம்மாவும் , மகளும் வேகமாக எழுந்திருக்க , தீச்சுவாலை முகத்துடன் வந்தார் பாட்டியம்மா .” உனக்கிப்போ இங்கே என்னடி கேடு …? என்ன காரியத்திற்கு உன் அப்பனை தேடுகிறாய் …? “

” ஒரு மகள் தன் அப்பாவை தேடுவது தவறா பாட்டி ..? “

” இருபது வருடமாக இல்லாத அப்பா பாசம் இப்போது உனக்கு ஏன் திடீரென வந்த்து …? “

” இந்த ஊர் என் அப்பாவை நினைவுபடுத்துகிறது .அத்தோடு எனக்கு என் அப்பா வாங்கிய கடனின் அளவு தெரிய வேண்டும் ” உறுதியோடு நின்றவளை வெறித்துப் பார்த்தார் பாட்டி .

அன்று என் அப்பாவின் கடனை சொல்லுங்கள் என்று வந்து நின்றவளை பத்திரத்தை தேட வேண்டும் அது …இதுவென   எதையோ பேசி விரட்டி விட்டார் .இன்று திரும்பவும் அதையே சொல்லி நிறகிறாள் .

” உங்களுக்கு தெரியுமா அம்மா ..? ” பதில் சொல்லாமல் நின்ற பாட்டியை தவிர்த்து தாயிடம் கேட்டாள் .

” இல்லையம்மா .நிறைய கடனென்று சொல்லியிருக்கிறார் .எண்ணிக்கை சொன்னதில்லை .”

” பத்திரத்தை தேடிப் பார்த்தீர்களா பாட்டி …? “

பாட்டி தலையை மட்டும் அசைத்து மறுக்க ,” எங்கே இருக்கிறதென சொல்லுங்களேன் .நானே தேடிக் கொள்கிறேன் …”

” பழைய பத்திரங்களெல்லாம் பரண் மேல் மூலையில் கிடக்கும் .அதை எடுக்க முடியாது “

சஷ்டி பாட்டி சுட்டிய பரணை அண்ணாந்து பார்த்தாள் .அந்த அறையின் பாதி அளவிறகு நீண்டு இருந்த்து அந்த மரப்பரண் .அதன் மேல் ஏற மரப்படிகள் இருக்க , ” நானே பார்க்கிறேன் பாட்டி ” பாட்டியின் பதிலை எதிர்பாராமல் படிகளில் ஏறத் துவங்கி விட்டாள் சஷ்டி .

” இங்கே என்ன வேடிக்கை …? எனக்கு கால் உளைச்சலாக இருக்கிறது .கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து கொண்டு வா .போ …” மேலே ஏறும் மகளை அண்ணாந்து பார்த்து நின்ற கோமதியை உள்ளே விரட்டினார் பாட்டி .பின் யோசனையுடன் அங்குமிங்குமாக நடந்தபடி இருந்தார் .

” ஏன் பாட்டி …? என்ன விசயம. …? ” அப்போதுதான் வீட்டிற்குள் வந்த திருமலைராயனுக்கு பாட்டியின் அமைதியற்ற நடை ஏதோ கூற விசாரித்தான் .

” எல்லாம் உன் பொண்டாட்டியால் வந்த்து .என் உயிரை வாங்குவதற்காகவே வந்து சேர்ந்திருக்கிறாள் ” பாட்டி எரிந்து விழுந்தார. .

” சஷ்டியா …? என்ன செய்தாள் பாட்டி …? “

” அவள் அப்பனோட கடன் பத்திரம் வேண்டுமாம் .அப்பா கடனை மகள் அடைப்பாளாம் உளறிக் கொட்டிக் கொண்மிருக்கிறாள்…”

திருமலைராயனின் முகம் இறுகியது .” இப்போது அவளை எங்கே …? “

” பரண் மேலே பத்திரம் தேடிக் கொண்மிருக்கிறாள் .ராயா நீ மேலே போய் அந்த கழுதையை இழுத்துட்டு வாய்யா …”




” ம் …” தலையசைத்துவிட்டு படியேறிய திருமலைராயனின் முகத்தில் தெளிவில்லை .தீவிர சிந்தனை இருந்த்து .

அந்தப் பரண் மேல் நிறைய தட்டு முட்டு சாமான்கள் கிடந்தன .அந்தக் கால பித்தளை பாத்திரங்கள் , மரப்பெட்டிகள்  நிறைய இருந்தன . மேலே ஏறியதும்  நிமிர்ந்து நிறகுமளவு அந்த பரண் உயரம்  இல்லை .சற்றே குனிந்து உடலை குறுக்கிதான் அங்கே நிற்க வேண்டியிருந்த்து .

இவளை எங்கே …? திருமலைராயன் விழிகளை சுழற்றி அரை இருளாக இருந்த அந்த பரணில் தேடினான் .ஒரு பெரிய மரப்பெட்டியின் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் சஷ்டி .அதன் மூடியை திறக்க முயன்று கொண்டிருந்தாள் .

” இங்கே என்ன செய்கிறாய் …? ” அவள் உச்சந்தலையில் லேசாக திருமலைராயன் தட்ட , திடுக்கிட்டு அண்ணாந்து , நீயேதானா …என அ வனை பார்த்தாள் சஷ்டி .

” நானேதான் .சாப்பிடும் நேரத்தில் இங்கே வந்து ஏன் உடலை அழுக்காக்கிக் கொள்கிறாய் …? ” மென் அதட்டலாய் கேட்டவனின் மடிப்பு கலையாத உயர்ரக சட்டையில் ஆங்காங்கே ஒட்டடை நூல்கள் .

” இ…இந்த பெட்டியை திறக்க வேண்டும் .நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் …? “

” உனக்கு ஹெல்ப் பண்ணலாமென்றுதான் .இதனை திறக்கவா …? ,” கேட்டபடி அந்த பெட்டியை நெருங்கி அதன் கனத்த மூடியை எளிதாக தூக்கினான் .

” இதில் என்ன இருக்கிறது …? ,” திருமலைராயனின் கேள்விக்கு ” தெரியவில்லையே …” சொன்னபடி ஆவலுடன் உள்ளே எட்டிப. பார்த்து விட்டு ” அச் ” சென தும்மினாள் .

” சே …எவ்வளவு தூசு …? “

” கொஞ்ச நேரம் மூச்சை பிடித்துக் கொள் .இந்த நெடி போகட்டும் …,” சொல்லிவிட்டு அவள் மூக்கை லேசாக தானே இரு விரல்களால் பிடித்தான் .

மூச்சை உள்ளடக்கிக் கொண்டவளின் பார்வையில் அவன் தலை மேல் தொங்கிக் கொண்டிருந்த நூலாம்படைகள் பட , கையுயர்த்தி அவற்றை தட்டி விட்டாள் .திருமலைராயனின் பார்வை அவள் மேல்  படிந்து அலைந்த்து .

” நீங்கள் ஏன் வந்தீர்கள் …? டிரெஸ்ஸெல்லாம் பாழாகிவிட்டது …” தலையிலிருந்து அவன்தோளுக்கு மாறி தூசு   தட்டின. அவள் கைகள் .பொத்தப்பட்ட மூக்கினால் நசிந்து வெளியேறிய அவள் குரல் ஏதோ ஓர் அந்தரங்கம் சுமந்திருந்த்து .

” உனக்காகத்தான் …” ராயரின் விரல்கள் இப்போது அவள் மூக்கினை வருடியபடி இருந்தன .

” வடிவான மூக்கு உனக்கு சஷ்டி “

சஷ்டியின் மூச்சில் அனல் சேர்ந்த்து .ரத்தத்தில் வீணையின் ஸ்வரம் இணைந்த்து .அவள் விழிகள் தானாக படபடத்துக் கொண்டன .திருமலைராயனின் விரல் இப்போது அவள் கண்ணிமைகளை வருடியது .

” அழகான கண்கள் .கவிதை பேசுகிறது ” திருமலைராயன் புகழ்வதற்கு அஞ்சவே இல்லை .

” அச்சில் வடித்த சிலை போல் அழகாக இருக்கிறாய் சஷ்டி ….” கண்கள் அவள் மேனி வடிவில் அலைய  போதை உட் கொண்டவனின் தினுசில் இருந்த்து அவன் குரல் .




” நா …நான் எ …என் அப்பாவின் பத்திரங்களை தேட வந்தேன் …,” தான் இங்கு வந்த காரணத்தை வலிய இழுத்து ஞாபகப்படுத்தி , அதனை அவனுக்கும் கூறினாள் .

” பத்திரமதானே …வா நாம் தேடலாம் …,” அவளருகே தானும் மண்டியிட்டுக் கொண்டு அவள் தோளோடு உரசிபடி  அந்தப் பெட்டிக்குள் குனிந்தான் திருமலைராயன் .

இப்போது தூசுகள் குறைந்திருக்க , பெட்டிக்குள் இருந்த பொருட்கள் மங்கலாக தெரிந்தன .

” ஏதோ பேப்பர்கள் போல் தெரிகிறது சஷ்டி “

” அவை பத்திரங்களாகத்தான் இருக்கும் ,”

” ம் …கட்டு கட்டாக இத்தனை பத்திரங்கள் இருக்கிறதே .இதில் எப்படி உன் அப்பாவுடையதை தேடி எடுப்பாய் …? “

அவனது பேச்சின்  நியாயம் உரைத்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை சஷ்டி .” தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கிறேன் …” பிடிவாதமாக நின்றாள் .

” சரி நீயே எடு …” சொன்னபடி தன் செல்போனை எடுத்து அதிலிருந்த டார்ச்சை ஆன் செய்து பெட்டியினுள் வெளிச்சம் காட்டினான் .

ஆர்வம் உந்த வேகமாக பரணின்  உயரத்தை மறந்து எழுந்த சஷ்டியின் உச்சந்தலை மேலே இடிக்க ” அம்மா ” என்ற மெல்லிய அலறலுடன் அவள் உட்கார்ந்து விட்டாள் .

” ஏய் …பார்த்துடா …” பதற்றத்துடன் அவளை நாங்கியவன் அவள் உச்சந்தலையை பரபரவென தேய்த்து விட்டான் .வலியில் கலங்கிய அவள் கண்களை பார்த்தவன் , அவளை தன் மேல் இழுத்து மார்பில் போட்டுக் கொண்டான் .

” ஒன்றுமில்லைடா …சரியாயிடும் ,” கன்னம் வருடினான் .தனக்கு மிக அருகே தெரிந்த அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்த சஷ்டியின் மனதினுள் சலனங்கள் .திருமலைராயன் குவிந்த இதழ்களுடன் அவள் முகத்தை நோக்கி வர , ஏதோ எதிர்பார்ப்புடனோ …பயத்துடனோ விழிகளை இறுக்க மூடிக் கொண்டாள் சஷ்டி .

அவளது இமைகள் மெல்ல வருடப்பட்டன .” ஹேய் …ஏன்டா …இதோ …இங்கே என்னைப் பாரேன் ” கொஞ்சலாய் பேசியபடி அவள் முகத்தை தனக்கு ஏதுவாக பற்றி நிமிர்த்தினான் .

விழகளை இன்னமும் இறுக்கிக் கொண்டு அவள் ம்ஹூம் என தலையசைக்க , அவள் நெற்றியிலும் , இரு இமைகள் மேலும் சூடாக பதிந்தன அவன் இதழ்கள் .

” ஹப்பா …உன் உடலில் …முகத்தில் எவ்வளவு தூசு …இங்கே என் உதட்டை பாரேன் …” மென்மையாக அவளை உலுக்கி அவள் விழி திறக்க வைத்து தன் இதழ்களை காட்டினான்.

தூசி போல் தென்பட்ட அவன் இதழ்களை தன் ஆட்காட்டி விரலால் வருடி நுடைத்தாள் சஷ்டி .கூடவே அடர்ந்து சுருண்டிருந!த அந்த மீசையையும் தூசு போகட்டும் என்பது போல்  மெனமையாக நீவி விட்டாள் .

” இரண்டு பேர் உடலும் தூசாகி விட்டது .கீழே போகலாமா …? ,” கேட டவனுக்கு சம்மதித்து தலையாட்டிய சஷ்டியின் பார்வை அப்போது தூசு படிந்திருந்த திருமலைராயனின் உடைகள் மேல்தான் கவலையோடு பதிந்திருந்த்து .




அதன் பிறகு அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தாங்கிக் கொண்டு திருமலைராயன் பரணிலிருந்து  கீழே  இறக்கி விட்ட போதோ …அவளுக்கான உடையை தானே பீரொ திறந்து எடுத்துக் கொடுத்த குளியலறைக்கு அனுப்பிய போதோ , குளித்து முடித்ததும் இருவரும் அருகருகே அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறியபடி உணவுண ட போதோ , சஷ்டியின் மனதில் வேறெந்த நினைஙுமன்றி திருமலைராயன் மட்டுமே நிறைந்திருந்தான் .

கோமதி ” பத்திரத்தை எடுத்தாயாம்மா ? ” என்று வந்து கேட்கும் வரை அவளுக்கு பத்திர நினைவே வரவில்லை . இப்போது திருமலைராயன் வெளியே போய்விட்டிருந்தான் .

சை …எப்படி இப்படி மறந்தேன் தன்னை தானே திட்டிக் கொண்டவளின் உடலிலும் , மனதிலும் மணமாக நிரம்பியிருந்தான் அவளது கணவன் .

What’s your Reaction?
+1
22
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Mahalaxmi
Mahalaxmi
3 months ago

Very nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!