gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/சந்திர வம்சம் குல வரலாறு

சந்திரா குல வம்சம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம். தேவர் முதல் மகாபாரத கதைகளில் வரும் அனைவரது வம்சம் பற்றி பார்க்கலாம்

சந்திர வம்சம் குல வரலாறு:–
🕉️பிரம்மா
|
பிரம்மாவின் மகன்✡️அத்திரி
|
✡️அத்திரியின் மகன் 🌙சந்திரன்
அந்த 🌙சந்திரனுக்கு ✡️தக்ஷன் தனது 27
மகள்களை திருமணம் செய்து
வைத்தார்.
|
🌙சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவன் 🌙புதன்
|
🌙புதன் (🌞சூரியனின் பேத்தியும் 🌞மனுவின் மகளுமாகிய இளையை மணந்தான்)
|
🌙புரூரவஸ்
|
🌙ஆயுஸ்
|
🌙நகுஷன்
|
🌙யயாதி
யயாதி (உசானஸின் மகள் தேவயானி) (விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை)ஆகியோரை மணந்தான்
|
🌙யயாதி-தேவயானிக்கு===>யது , துர்வசு ஆகியோர் பிறந்தார்கள்
🌙யயாதி-சர்மிஷ்டைக்கு===>திருஹ்யு, அனு மற்றும் பூரு ஆகியோர் பிறந்தார்கள்
🕉️யது-யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்களானார்கள்.
⚜️பூரு-பூருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்களானார்கள்.




|
🌙பூரு
|
🌙ஜனமேஜயன்
|
🌙பிரசின்வத்
|
🌙சன்யாதி
|
🌙அஹயந்தி
|
🌙சர்வபௌமன்
|
🌙ஜெயத்சேனன்
|
🌙அவசினன்
|
🌙அரிஹன்
|
🌙மஹாபௌமன்
|
🌙அயுதநயி
|
🌙அக்ரோதனன்
|
🌙தேவதிதி
|
🌙அரிஹன்
|
🌙ரிக்ஷன்
|
🌙மதினாரன்
|
🌙தன்சு
|
🌙இலினன்
(ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்களில் துஷ்யந்தன் மூத்தவனாக இருந்தான்).
|
🌙துஷ்யந்தன்(துஷ்யந்தன், விஸ்வாமித்திரரின் மகள் சகுந்தலையை மனைவியாக அடைந்தான்)
|
🌙பரதன்
|
🌙பூமன்யு
|
🌙சுஹோத்ரன்
|
🌙ஹஸ்தி(இவர் பெயராலே ஹஸ்தினாபுரம்)
|
🌙விகுந்தனன்
|
🌙அஜமீடன்
(அஜமீடன், ராய்கேயி, காந்தாரி, விசாலை மற்றும் ரிக்ஷை என்ற நான்கு மனைவியரைக் கொண்டான். அவர்களிடம் இரண்டாயிரத்து நானூறு மகன்களைப் பெற்றான். அவர்களில் சம்வர்ணனே குலத்தைத் தழைக்கச் செய்தான்)
|
🌙சம்வர்ணன்(விவஸ்வானின் மகள் தபதியை மனைவியாக அடைந்து, அவளிடம் குரு என்ற மகனைப் பெற்றான்)
|
🌙குரு(கவுரவர்கள் பெயர் வரக்காரணம் இவரே)
|
🌙விதுரதன்
|
🌙அனஸ்வான்
|
🌙பரீக்ஷித்
|
🌙பீமசேனன்
|
🌙பிருதிஸ்ரவஸ்
|
🌙பிரதீபன்
|
🌙பிரதீபன் மகன்கள் (தேவாபி, சந்தனு, பாஹ்லீகன்)
|
🌙சந்தனு-கங்கையின் மகன் பீஷ்மர்




|
🌙பீஷ்மர்-தன் தந்தைக்காக திருமணம் செய்யவில்லை.
சந்தனு-மற்றொரு மனைவி சத்தியவதி அவள் மகன்கள் சித்ராங்கதன், விசித்திரவீரியன்
🌙(சித்ராங்கதன், விசித்திரவீரியன் )சித்ராங்கதன் இளம்வயதிலேயே கந்தர்வர்களால் கொல்லப்பட்டான்.
|
🌙விசித்திரவீரியன்-(2-மனைவிகள் அம்பிகா, அம்பாலிகா)ஆனால் மகன் இல்லாமல் இறந்து போனான்.
🌙துவைபாயனர்-(வியாசர் மூலம் துஷ்யந்தனின் பரம்பரை நின்றுவிடாமல் இருக்க அம்பிகா, அம்பாலிகா உடன் தொடர்பு ஏற்பட்டு திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் இதில் விதுரன் அம்பிகா, அம்பாலிகாவிற்கு பிறக்கவில்லை.




|
🌙திருதராஷ்டிரன்- காந்தாரிக்கு 100 பிள்ளைகள் இதில் துரியோதனன், துச்சாசனன், விகர்ணன் மற்றும் சித்திரசேனன் புகழடைந்தவர்கள்.
🌙துரியோதனன்-பானுமதியை மணந்து லக்ஷ்மணன் என்ற மகனையும்,லக்ஷ்மண என்ற மகளையும் பெற்றான்.
🌙பாண்டுக்கு-குந்தி மாதிரி என்ற இரு மனைவியை மணந்தான்.
பாண்டு சாபம் காரணமாக குழந்தை பெற முடியாததால் தேவர்கள் சக்தியின் மூலம் குழந்தைகள் பெற்றனர் குந்தியும்,மாதிரியும்.
🌙குந்திக்கு-யமதர்மன் மூலம் யுதிஷ்டிரன்,வாயுதேவன் மூலம் பீமன்,இந்திரன் மூலம் அர்ஜுனன் என்ற மகன்கள் மற்றும் பாண்டுவை திருமணம் செய்யும் முன்னரே சூரியன் மூலம் கர்ணன் என்ற மகன்.
🌙மாதிரிக்கு-அஸ்வினிதேவர்கள் மூலம் நகுலன் சகாதேவன்.
பாண்டுவிற்கு பிறந்த 5 மகன்கள் பாண்டவர்கள் திரௌபதியை திருமணம் செய்தனர்.
🌙சூரியன் குந்திக்கு பிறந்த கர்ணன்
கர்ணன் மனைவிகள்-விருஷாலி,சுப்ரியா(சுபாங்கி)மூலம் விருஷசேணன் , சுஷேனன் உட்பட பல மகன்கள்.
🌙யுதிஷ்டிரன் -திரௌபதி மூலம் பிரதிவிந்தியன்,தேவிகா மூலம் யௌதேயன் பெற்றான்.
🌙பீமனுக்கு-திரௌபதி மூலம் சூதசோமன் ,இடும்பி மூலம் கடோத்கசன்,வலந்தரை மூலம் சார்வாகன்
🌙அர்ஜுனன்-திரௌபதி மூலம் சுரூதகீர்த்தி,உலுப்பி மூலம் அரவான் ,சித்ராங்கதை மூலம் பஹ்பிருவாகனன் ,சுபத்திரை மூலம் அபிமன்யு,
🌙நகுலன்-திரௌபதி மூலம் சதானிகன்,கரேணுமதி மூலம் நிராமித்ரன்
🌙சகாதேவன்-திரௌபதி மூலம் சுரூதகர்மன் ,விஜயா மூலம் சுஹோத்ரன்
🌙அர்ஜுனன் மகன் அபிமன்யுவே வம்சத்தை தழைக்க செய்தது மற்றவர் அனைவர் போரில் இறந்தனர்.
|
🌙அபிமன்யு-உத்திரை மூலம் பரீக்ஷித்
|
🌙பரீக்ஷித்
|
🌙ஜனமேஜயன்
|
🌙சதானீகன்,சங்குகர்ணன்
|
🌙சதானீகன் மகன் அசுவமேததத்தன்
🌙இன்னும் பல…….
==================================================================




💚💚கர்ணன் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறப்பு தேதிகள் :–

👑⚜️1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.

👑⚜️2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.

👑⚜️3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 – 8 -15)

👑⚜️4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.

👑⚜️5. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.
{பீமனை விட 1 வருடம் இளையவன்}
{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }
{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}

👑⚜️6. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.
{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}
{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}
{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }
{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}

🕉️⚜️7. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகினி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.

👑⚜️8. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!