gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அபிமன்யுவுடன் பாண்டவர்களிடம் வந்த கர்ணன்

அபிமன்யுவுடன் பாண்டவர்களிடம் வந்த கர்ணன்:–

🌻குந்தி வியாசரிடம் துருவாசர் தனக்கு அளித்த வரம் அதன் மூலம் பிறந்த கர்ணன் அனைத்தையும் கூறுகிறாள். வியாசரிடம் இறந்த அந்த கர்ணனை தான் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறாள்.வியாசர் நீங்கள் கேட்கும் முன்பே அதை தான் தானும் மனதில் நினைப்பதாகக் கூறுகிறார்.பின்பு அனைவரையும் கண்முன் கொண்டுவருவதாக கூறுகிறார்.




🌻இறந்த மஹாத்மாக்களால் தான் தேவகாரியம் பூமியில் நடந்தது. கந்தர்வராஜனே திருதராஷ்டிரனாக பூமியில் பிறந்தான் என்றும், மருத கூட்டத்தை சேர்த்தவன் பாண்டு என்றும்,தர்மதேவதை விதுரன், யுதிஷ்டிரன் என்றும், சூரிய அவதாரம் கர்ணன் என்றும், சந்திரன் மகன் வர்சஸ் அபிமன்யு என்றும், துரோணர் பிரகஸ்பதி என்றும்,அஸ்வத்தாமன் ருத்திரன் அம்சம் என்றும் பிஸ்மர்

வசுகளை சேர்த்தவர் என்றும் திருஷ்டத்துய்மன் அக்னி அம்சம் என்றும்,துவாபரயுகமே சகுனி என்றும்,கலியுகமாய் துரியோதனன் என்றும், மருதக்கூட்டத்தை சேர்ந்தவர்களே பாஞ்சாலி புதல்வர்கள் என்றும் கூறினார்.

🌻கங்கைநதியின் கரையில் அனைவரையும் காணலாம் என்று வியாசர் கூறிய சொற்களை கேட்டு அனைவரும் கங்கைக் கரையை அடைந்தனர்.மொத்த பாரதவம்சம் அங்கு கூடியது.இறந்த அனைவரையும் பார்க்க அனைவரும் ஆவல் கொண்டனர்.




==================================================================
💚💚இறந்தவர்கள் உயிருடன் வந்தனர்:–

🌻மஹாமுனிவரான வியாசர் கங்கை நதியில் இறங்கி இறந்த அனைவரை அழைத்தார்.பெரும் சப்தத்துடன் திவ்யமான உடல்களுடன் பிஸ்மர்,துரோணர்,துருபதன்,விராடன்,சல்லியன், துரியோதனன்,சகுனி என இறந்த படைவீரர்கள் முதல் அனைவரும் தோன்றினர்.கர்ணனுடன் தோன்றிய அபிமன்யு , பாஞ்சாலி புதர்வர்களை நோக்கி விரைந்த பாண்டவர்களும் பாஞ்சாலியும், சுபத்திரையும்,குந்தியும் கர்ணன் மற்றும் அபிமன்யு ,பாண்டவ குமாரர்களுடன்(பாஞ்சாலி புத்திரர்களுடன்) கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர் .திருதராஷ்டிரனும் ,காந்தாரியும் தங்கள் புதல்வர்களை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

🌻ஏற்கனவே பார்த்த சரீரத்தில் வந்த அனைவரும் தங்கள் உறவுகளுடன் இணைந்தனர்.அனைவர் மனதிலும் பெரும் மகிழ்ச்சி பொங்கியது .நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த அணைத்து புண்ணிய பிறவிகளுக்கு தங்கள்இடமாகிய கோலோகம்,பிரம்மலோகம்,
இந்திரலோகம்,பித்ருலோகம், சூரியலோகம்,வருணலோகம் ஆகியவற்றை அடைந்தனர்.

 




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!