Entertainment lifestyles News

பேஸ்புக் போட்டியாக பெங்களூரில் உருவான Sharechat.. SHARECHAT உருவாக சச்சின் டெண்டுல்கர் காரணம்..

இந்தியாவில் பல மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளை ஐஐடி பட்டதாரிகள் நடத்தி வருகின்றனர். பெருமைக்குரிய இந்த நிறுவனங்களில் படித்து முடித்தபின்னர் வேலைக்குச் செல்லாமல் சுயமாக தொழில் நிறுவனங்களை பலர் தொடங்குகின்றனர். அப்படி சொந்த தொழில் துவங்கியவர்களில் பலர் பல முறை தங்களது தொழிலில் தோல்வி அடைந்துள்ளனர். சிலர் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.

அப்படியொரு வெற்றியாளர் தான் அன்குஷ் சச்தேவா. ஷேர் சாட்டின் இணை நிறுவனர். அன்குஷ் சச்தேவா 17 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கினார், ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தது.




ShareChat உருவாக சச்சின் டெண்டுல்கர் காரணம் என்று தெரியுமா?

அந்த ஒரு தருணம் :  2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அன்குஷ் மற்றும் பானு தங்களின் 13வது திட்டத்தை செயல்படுத்தத் துவங்கினர்.  ஒபினியோ என்னும் விவாதம் செய்யும் தளம் அது. முகநூலில் இருந்து ஒபினியோ தளத்திற்கு மக்களை எவ்வாறு அழைத்து வருவது என்பதை அறிய அன்குஷ் முகநூலில் நுழைந்தார்.  “சச்சின் டென்டுல்கர் பேன் கிளப்”  என்ற ஒரு பக்கத்தை பார்த்தேன். அந்த பக்கத்தில் ஒரு அறிக்கை இருந்ததை கவனித்தேன். ‘சச்சின் வாட்ஸ் அப்’ குழுவில் நீங்களும் இணைய விரும்பினால், உங்கள் தொலைபேசி எண்ணை இங்கு பதிவிடவும்,” என்பதே அது.

அந்த பதிவிற்கு 5,00,000 லைக்குகளும், 50,000 கமெண்டுகளும் இருந்தன. அந்த நேரத்தில் அன்குஷை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம், மக்கள் அவர்கள் தொலைபேசி எண்களை  அங்கு பதிவிட்டது தான்.  “இவர்கள் யார், எதற்காக இதைச் செய்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் பின்னர் ஆர்வ மிகுதியில், அங்கிருந்து 1000 தொலைபேசி எண்களை  எடுத்து ஒரு குழுவிற்கு 100 பேர் என்ற கணக்கில் 10 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கினேன். இந்த குழுக்கள் அனைத்தும் சச்சினை மையமாகக் கொண்டவை,” என்கிறார் அன்குஷ்.




பின்னர் அன்குஷ் மதிய உணவிற்கு சென்றுவிட, திரும்பி வந்து பார்க்கையில் அவரது தொலைபேசி முழுவதும் நோட்டிபிக்கேஷன்களால் நிறைந்திருந்தது. அவர் உருவாக்கிய 10 குழுவில், குழுவுக்கு 100 என நோட்டிபிக்கேஷன்கள் வந்திருந்தன. மக்கள் அவரவர் மொழிகளில் சச்சின் பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தனர்.  அந்தத் தருணத்தில் உதயமானது தான் ஷேர் சாட் யோசனை .

அவரது 18ஆவது முயற்சியில் தனது ஐஐடி நண்பர்களான பரீத் அக்சன், பானு சிங்குடன் சேர்ந்து ஷேர் சாட் ஆப் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்களது நிறுவனத்துக்கு பேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2015 ஆம் ஆண்டில் அவர்கள் ஷேர் சாட்டின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கினர். பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் ஷேர் சாட்டை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தியில் தொடங்கினர்.

இப்போது ஷேர் சாட்டின் சிஇஓவாக சச்தேவா உள்ளார். ஐஐடி கான்பூரில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற அன்குஷ் சச்தேவா, சீனியர் செகண்டரி ஸ்கூல் படிப்பை சோமர்வில் ஸ்கூலில் முடித்தார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் 2014 மே முதல் ஜூலை வரை இன்டர்ஷிப் செய்தார். ஷேர் சாட் நிறுவனம் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.




இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா என கிளை விரித்துள்ளது. கடைசியாக அந்த நிறுவனம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குகள் மூலம் நிதி திரட்டியது. இந்திய மதிப்பில் இது ரூ.40,000 கோடிக்கும் மேல் ஆகும். ஷேர் சாட் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்துள்ளது, அந்த நிறுவனத்தில் இப்போது 1000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஷேர்சாட் இந்தியா என்பது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், நகைச்சுவைகளைப் பகிரவும், இந்தியாவில் இருந்து தினசரி செய்திகளை நொடிகளில் பெறவும் சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது. ஷேர்சாட், மிகவும் வசதியான செய்தி பதிவிடல் பயன்பாடு ஆகும்.

புதிய நண்பர்களை உருவாக்கவும், வீடியோக்கள், நகைச்சுவைகள், GIFகள், ஆடியோ பாடல்கள், ஷயாரிகள், மோட்டிவேஷன் கோட்கள், ஜாலி கோட்கள், பஜனைகள், பக்திப் பாடல்கள் மற்றும் வேடிக்கையான படங்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, தமிழ், கன்னடம், ஒடியா, போஜ்புரி, அஸ்ஸாமி, ராஜஸ்தானி மற்றும் ஹரியானாவி போன்ற இந்திய மொழிகள் அனைத்தும் ஷேர்சாட்டின் பல மொழி கீபோர்டில் கிடைக்கின்றன, இது அதன் யூசர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைக்க அனுமதிக்கிறது.




இந்தியா போன்ற பலதரப்பட்ட கலாசாரத்தைக் கொண்ட நாட்டில் ஷேர் சாட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நகைச்சுவைகள், வீடியோ ஸ்டேட்டஸ, மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் ஆகியவற்றின் பரந்த தொகுப்பு உள்ளது. இதை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள், பாலிவுட் திரைப்படங்கள், தெலுங்கு திரைப்படங்கள், மராத்தி திரைப்படங்கள் மற்றும் பெங்காலி திரைப்படங்களின் வீடியோக்களின் மிகப்பெரிய ஆல்பம் உள்ளது.

இது இந்தியத் திரைப்படங்கள் தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தெரிந்துகொள்ள யூசரை அனுமதிக்கிறது. இதை தவிர அழகு குறிப்புகள், வீட்டு ஒப்பனை தந்திரங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களைப் பெறலாம். புதிய செய்திகள், பள்ளி மாணவர்களுக்கான சமீபத்திய GK, IAS, SSC, வங்கி PO தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் அனைத்து சமீபத்திய போக்குகளையும் பெறலாம். இப்படி இந்திய மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் கன்டென்ட் இதில் உள்ளது.

 

ஒவ்வொரு மாதமும் 60 மில்லியன் மக்கள் ஷேர் சாட் பயன்படுத்துகின்றனர். அதில் ஒவ்வொரு பயனாளரும் சராசரியாக 23 நிமிடம் இந்தத் தளத்தில் உள்ளனர். 15 மொழிகளில் இவர்களின் படைப்புகள் உள்ளன. 21 மில்லியன் படைப்பாளிகள் உள்ளனர்.  அக்டோபர் 2019ல் இந்த தளத்தின் மதிப்பு $600 முதல் $650 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஆகஸ்டில் நான்காம் கட்ட முதலீடாக  $100 மில்லியன் பெற்றுள்ளதாக இந்நிறுவம் கூறியுள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!