Entertainment lifestyles Uncategorized

பிரெட் பாக்கெட்டை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?

நீங்கள் பிரெட் அல்லது ரொட்டிகளை சரியான வழியில் சேமித்து வைத்திருக்கிறீர்களா? அன்றாட சமையலில் இது மிகவும் அலட்சியமான விஷயமாகத் தோன்றினாலும், கெட்டு போகும் உணவுகளை சேமிப்பது என்பது உண்மையில் ரொட்டியின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்கும்.

ரொட்டிகளை சரியான முறையில் சேமிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே பார்க்கலாம் .




பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள். இது சமையலறை இடத்தை மிச்சப்படுத்தினாலும், ஆரோக்கியத்திற்கு நல்லதா? அப்படி செய்வது ரொட்டியின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்குமா?

நிபுணர்கள் பரிந்துரைப்பது இங்கே

டிஜிட்டல் ஜர்னலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கிம்பர்லி பேக்கர் (Extensions Food Programs and Safety director at Clemson University) கூறுகையில், ரொட்டியை குளிரூட்டுவது அதன் ஆரோக்கியத்தில் தலையிடாது. ஆனால் ஃபிரிட்ஜில் குளிர் வெப்பநிலை, ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கி ஈரப்பதத்தை இழக்கச் செய்வதால் அது ரொட்டியை சுவையற்றதாக மாற்றுகிறது.

ரொட்டியை எங்கே வைக்க வேண்டும்?

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை, சாதாரண அறை வெப்பநிலையில் 3-5 நாட்களுக்குள் பயன்படுத்தினால் நல்ல தரம் இருக்கும். 

ஆனால், இப்போது, வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் 5-7 நாட்கள் காலாவதி தேதியுடன் வருவதால், அவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்வது சிறந்தது. ஒருவேளை நீங்கள் இன்னும் சிறிது நாள் வைத்து உண்ண விரும்பினால், நீங்கள் ரொட்டியை குளிரூட்டலாம். இது ரொட்டியின் புத்துணர்ச்சியை நீண்ட நேரம் வைத்திருக்க உதவும்.




ரொட்டியை சேமிக்க சிறந்த வழி எது?

*காற்று புகாத கன்டெய்னரில் சேமிப்பது ரொட்டியை சேமிப்பதற்கான எளிதான வழியாகும்.

*ரொட்டியை பிளாஸ்டிக் தாளில் போர்த்தி ஃபிரீசரில் வைக்கலாம். இதன்மூலம் காற்று அல்லது ஈரப்பதம் உள்ளே நுழைவதை தடுக்கப்படுகிறது.

*ரொட்டியை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மற்றொரு வழி, ரொட்டிகளை பிளாஸ்டிக் ரேப்பரில் நன்றாகப் போர்த்தி, பின்னர் அதை அலுமினியத் தாளால் மூடுவது. அடுத்து, ரொட்டியை ஃபிரிட்ஜில் வைக்கவும், இது ரொட்டியின் புத்துணர்ச்சியையும், அடுக்கு ஆயுளையும் தக்க வைத்துக் கொள்ளும். இது ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்.

ஆனால் எப்போதும் ரொட்டியை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் ரொட்டியை சாதாரண அறை வெப்பநிலையில் வைத்து 2-3 நாட்களுக்குள் உட்கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!