Cinema Entertainment

நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்து..? – பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து, கடந்தாண்டில் திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது.




திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டு, சந்தோஷமான தம்பதியாக வாழ்கின்றனர்.

சினிமா பயணத்தில் இருவருக்கும் சற்று சரிவு காணப்பட்டாலும், குடும்ப வாழ்க்கையில் அவர்கள் இதுவரை சந்தோஷமான தம்பதியராகவே காணப்படுகின்றனர்.

இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில், டிஜிட்டல் மயமான வாழ்க்கையில் இன்னும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன், கிரகங்கள் என்ற விஷயங்களை பலரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அதனால், கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்கின்றனர். ஆன்லைனில் ஜோதிடர் வகுப்புகளை நடத்துகின்றனர். ஆன்லைனில் ஸ்கூப், கூகுள் மீட்டிங் வாயிலாக ஜோதிடம் கணித்து சொல்லப்படுகிறது.

காதல் திருமணத்தில் கூட ஜாதகம் பார்ப்பது அதிகரித்து விட்டது. இன்னும் சிலர் சின்ன சின்ன விஷயங்களில் கூட நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.




இந்நிலையில், பிரபல தெலுங்கு ஜோதிடர் வேணுசாமி என்பவர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து நீண்ட காலம் வாழ மாட்டார்கள். விரைவில் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி இருக்கிறார்.

நாகசைதன்யா, சமந்தா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்று சொன்னேன். அது நடந்தது.

அதே போல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்துவிடுவார்கள். அது நடக்கும். அப்படி நடக்காவிட்டால் என் ஜோதிடத் துறையை விட்டே விலகி விடுகிறேன் என சவால் விட்டுள்ளார்.

இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் நயன்தாரா கணவர், பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்கிறார். இந்த ஜோதிடர் இப்படி சொல்கிறாரே என பலரும் புலம்புகின்றனர். இந்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!