Cinema Entertainment

நடிகை பானுமதி- 17

எம்.ஜி.ஆருக்கு ஜோசியம் சொன்ன பிரபல நடிகை… அவர் சொன்னபடியே நடந்துடுச்சே!

Actress Banumathi's film journey | தினம் ஒரு தகவல் : நடிகை பானுமதியின் திரையுலக பயணம்

1949-ம் ஆண்டு பியூ சின்னப்பா – பானுமதி நடிப்பில் வெளியான ரத்னகுமார் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டிங் கேரக்டரில் இணைந்து நடித்தார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றைக்கும் அவரை ரசிக்கக்கூடிய மக்கள் கூட்டம் இருக்கதான் செய்கிறது. அதேபோல் அவருக்காகவே அவரது இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார். மக்களுக்கு தேவையான கருத்துக்களை தனது படங்களில் வைத்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அரசியலில் அதை செய்தும் காட்டினார்.

மேலும் திரைத்துறையில் சாதித்தால் அடுத்து அரசியலில் சாதித்து முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணம் இன்றைய நடிகர்களுக்கு வர காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர் தான். அந்த அளவிற்கு திரையிலும் மக்கள் மனதிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்னும் அவர்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆசை இல்லாத காலத்திலேயே அவர் பெரும் தலைவராக வருவார் என்று ஒரு நடிகை கணித்து கூறியுள்ளார்.




1949-ம் ஆண்டு பியூ சின்னப்பா – பானுமதி நடிப்பில் வெளியான ரத்னகுமார் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டிங் கேரக்டரில் இணைந்து நடித்தார். அதன்பிறகு மலைக்கள்ளன், மதுரை வீரன், தாய்க்கு பின் தாரம், அலிபாபாவும் 40 திருடர்களும் உள்ளிட்ட பல படங்களில் நடிகை பானுமதி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வந்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

இதில் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் கிரீடம் அணிந்துகொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவரை பார்த்துக்கொண்டிருந்த பானுமதி அவரது அருகில் சென்று ராமச்சந்திரன் உங்கள் கையை காட்டுங்கள் கைரேகை பார்ப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் வேண்டாம் அம்மா எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.




ஆனாலும் அருகில் இருப்பவர்கள் வற்புறுத்தியதால் பானுமதியிடம் எம்.ஜி.ஆர் கையை காட்டுகிறார். அதை பார்த்த நடிகை பானுமதி நீங்கள் எதிர்காலத்தில் பேரும் புகழும் பெற்று பெரிய தலைவராக வருவீர்கள் ஆனால் அது சினிமாவில் அல்ல என்று கூறியுள்ளார். அதை கேட்டு எம்.ஜி.ஆர் நன்றி அம்மா என்று கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.

அதேபோல் இந்தியாவில் மதிக்கத்தக்க பெரும் தலைவர்களில் ஒருவராக மாறியுள்ள எம்.ஜி.ஆர் இன்றும் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் தான் முதல்வர் பதவியேற்று முதல் கூட்டத்தில் பேசியபோது எனக்கு அரசியல் ஆசை இல்லாத போதே நான் பெரும் தலைவராக வருவேன் என்று கூறியவர் நடிகை பானுமதி அம்மா என்று கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் நடிகை பானுமதியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!