Entertainment News

தோண்ட தோண்ட தங்கம்.. சவுதி அரேபியா-வில் நடந்த அதிசயம்..!!

கச்சா எண்ணெய்-யின் அட்சய பாத்திரம் விளங்கும் சவுதி அரேபியா-வில் தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கிறதாம், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சவுதி அரேபியா கடந்த 10 வருடத்தில் பிற வர்த்தகத்தில் இருந்து வருவாய் ஈர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கடந்த ஆண்டு அந்நாட்டின் அதிபர் MBS எனச் செல்லமாக அழைக்கப்படும் முகமது பின் சல்மான் நாடு தழுவிய மாபெரும் எக்ஸ்ப்ளோரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்தார்.




இதன் வாயிலாகச் சவுதி அரேபியாவுக்குத் தற்போது மாபெரும் ஜாக்பாட் கிடைத்துள்ளது. சவுதி அரேபியா நாட்டிற்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவிலான தங்க வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்ததுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மக்கா பிராந்தியத்தின் அல் குர்மா கவர்னரேட்டில் உள்ள மன்சூரா மஸ்ஸாரா தங்கச் சுரங்கத்திற்குத் தெற்கே 100 கிமீ தொலைவில் கணிசமான தங்கக் கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சவூதி அரேபிய சுரங்க நிறுவனமான MAADEN பல தங்க கனி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது, இதன் மூலம் இப்பிராந்தியத்தில் தங்க உற்பத்தியை மையப்படுத்தி மைனிங் பணிகளை விரிவாக்கம் செய்யப்படும் சாத்தியக்கூறுகள் தற்போது அதிகரித்துள்ளது.

முகமது பின் சல்மான் 2022ல் அறிவிக்கப்பட்ட Maaden இன் விரிவான ஆய்வுத் திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியா தனது நாட்டில் உலோக உற்பத்தி நிறுவும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வு பணியை மேற்கொண்டது, ஆனால் தங்கம் கிடைத்துள்ளது எதிர்பார்க்காத ஒன்று. இது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வளத்திற்குக் கூடுதல் சக்தி சேர்க்கிறது.




மன்சூரா மஸ்ஸாரா தங்கச் சுரங்கத்திற்கு 100 கிமீ எடுக்கப்பட்ட 2 மாதிரிகளில் ஒரு டன்னுக்கு 10.4 கிராம் உயர்தரத் தங்கமும், மற்றொன்றில் 20.6 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு டன் தாதுவில் சுத்திகரிப்புக்குப் பின்பு 20.6 கிராம் வரையிலான தங்கத்தைப் பெறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மன்சூரா மஸ்ஸாரா தங்கச் சுரங்கத்தில் மைனிங் பணியை 2024ல் தீவிரப்படுத்தும் என எதிர்பாக்கக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இறுதியில் மன்சூரா மஸ்ஸாரா தங்கச் சுரங்கம் தனது நாட்டில் சுமார் 7 மில்லியன் அவுன்ஸ் மதிப்பிலான தங்க கனிமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதோடு வருடத்திற்கு 2,50,000 அவுன்ஸ் தங்கம் தயாரிக்கும் கட்டமைப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் 11,982.84 அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்யப்பட்டது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!