Entertainment lifestyles Uncategorized

‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ சக்சஸ் ‘மாடல்’ கதை!

வாலான குழந்தைப் பருவம், பகுதி நேர வேலையுடன் உயர் கல்வி, மாடலிங் பதித்த தடம் என இளம் வயதிலேயே பற்பல பாதைகளைக் கடந்த ஆபா சிங்கால், இந்திய உணவு விற்பனத்தைத் தளத்தில் வெறும் ரூ.3 லட்சத்துடன் கால் பதித்து ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ (Khichdi Express) மூலம் குறைந்த காலக்கட்டத்தில் ரூ.50 கோடி வர்த்தகத்தை எட்டி சாதித்துள்ளார்.




யாரைக் கேட்டாலும் ‘இந்த செயலியை தயாரித்துள்ளோம், இதன் வர்த்தகம் இவ்வளவு கோடி’ என்று தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் கோலோச்சி வரும் காலத்தில், ‘கிச்சடி’ போன்ற மிகவும் எளிமையான ஓர் உணவுப் பொருளைத் தயாரித்து விற்பதன் மூலம் பல கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க முடியும் என்றால், அதுதான் ஆபா சிங்கால் என்னும் பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதை!

ரூ.50 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆபா சிங்காலின் துணிவு, அவரின் தனிப்பட்ட கஷ்டங்களில் இருந்து தொழில்முனைவுக்கான பயணம், உறுதிப்பாடு, நெகிழ்ச்சி மற்றும் புதுமையான சிந்தனையின் சக்திக்கு சான்றாக நிற்கிறது.

கடினமான வாழ்க்கையும் லட்சியமும் ஆபாவின் குழந்தைப் பருவம் பல சவால்களால் சிதைந்து போன ஒன்றாக அமைந்தது. 12 வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்ட பெரும் வலி, அவருக்கு இதமான ஒரு விட்டை, குடும்பச் சூழலை அமைத்துக் கொடுக்கவில்லை. வீட்டைக் காட்டிலும் விடுதிகளிலும் உறைவிடப் பள்ளிகளிலும் கழித்த வாழ்க்கைதான் அதிகம்.

ஆபா சந்தித்த நிதிச் சிக்கல்கள் மிகவும் மோசமானவை. இந்த நெருக்கடிகளின் பின்னணியில்தான் ஆபா தன்னிடம் இருந்த மிகக் குறைந்த உடைமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு நண்பரின் வாடகைக் குடியிருப்பில் வசிப்பது, குறைந்த செலவில் வாழ்வது என்பதாகவே அவர் வாழ்க்கை நிர்பந்த நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டது. எனினும், அடுத்தடுத்த துன்பங்களும் நிதிச் சிக்கல்களும் அவரது லட்சியத்தின் மீதான ஆவலை சிதைக்கவில்லை. கல்வியில் ஆபாவின் திறமையால் லண்டனில் எம்பிஏ படிப்பதற்காக அவருக்கு ஓரளவு உதவித்தொகை கிடைத்தது. வெளிநாட்டில் இருந்த காலத்தில், படித்துக் கொண்டே பகுதி நேர வேலைகளைச் செய்தார். அப்போதுதான் அவருக்கு கிச்சடி மீது ஆர்வம் கொண்டார். சமைக்க எளிதான, சத்தான இந்திய உணவான கிச்சடி மீது ஆர்வம் இருக்கலாம்; ஆனால், அதை வர்த்தக சக்தியாக மாற்றுவது அவ்வளவு எளிதல்லவே?!

மாடலிங்கில் சில காலம்… ஆபா இந்தியா திரும்பியதும் விதி வேறு திட்டத்தை வகுத்தது. ஒரு விளம்பர இயக்குநரை சந்திக்க நேர்ந்தது. அதன்மூலம் ஆபாவுக்கு மாடலிங் உலகின் கதவுகள் திறந்தன. சாம்சங், கேட்பரி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற முக்கிய பிராண்டுகளுக்கான விளம்பரங்களை அவர் அலங்கரித்தார்.

இருப்பினும், மூன்று வருடங்கள் வெளிச்சத்தில் இருந்த பிறகு, ஆபா ஒரு மாடலிங் வாழ்க்கையின் தற்காலிகத் தன்மையை உணர்ந்தார். நிலையான ஒரு தொழில் வேண்டும் என்று எண்ணினார். ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ பிறப்பு! நெருங்கிய தோழி ஒருவருடனான ஒரு சாதாரண உரையாடல்தான் கிச்சடி மீதான ஆபாவின் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. சந்தேகப் பிராணிகளைப் புறக்கணித்து, 2019-இல் நம்பிக்கையின் பாய்ச்சலை எடுத்து ஹைதராபாத்தில் ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ தொடங்கினார் ஆபா.

இரண்டு பேர் கொண்ட குழுவுடன் வெறும் 3 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆபாவின் நோக்கம் வெறும் கிச்சடியை மட்டும் பரிமாறுவது மட்டும் அல்ல. அவரது விற்பனை நிலையங்கள் பக்கோடாக்கள் மற்றும் பிற உள்ளூர் உணவு வகைகளுடன் வாடிக்கையாளர்களை மகிழ்வித்தன.

Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் தளங்களில் பிராண்டின் இருப்பு அவரது சுவையான, புதுமையான கிச்சடி சுவையை பரந்த உணவுப் பிரியர்களைச் சென்றடையச் செய்தது. உலகமே சீர்குலைந்த சவாலான கோவிட்-19 காலத்தில், ‘​கிச்சடி எக்ஸ்பிரஸ்’ நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக முன்னோக்கி நகர்ந்து, தேவைப்படுவோருக்கு இலவச உணவை விநியோகித்ததும் இங்கே நினைவுக்கூரத்தக்கது. பிரகாசமான எதிர்காலம் ஆபா 4 ஆண்டுகளில் தனது வணிகத்தை ரூ.50 கோடி வர்த்தமாக மாற்றினார்.

விரைவில் அதை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெற்றி நடை போட்டு வருகிறார். இப்போது பல்வேறு நகரங்களில் ஆபாவின் விற்பனை நிலையங்கள் பலவிதமான கிச்சடிகளை சுவையுடன் வழங்குகின்றன. சரி, ஆபாவின் கனவுதான் என்ன?

“மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி போன்ற ஜாம்பவான்களுக்கு நிகரான உலகளாவிய பிராண்டாக ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ மாற வேண்டும்! மாடலாக இருந்த ஆபாவின் வெற்றிக் கதை நிச்சயம் உத்வேகம் வேண்டுவோருக்கு ஒரு ‘மாடல்’ கதைதான். அவரது கனவும் நிச்சயம் மெய்ப்படும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!