தோட்டக் கலை

எப்போது காய்கறிககளை பயிரிட வேண்டும்

டேராஸ் கார்டன் (அ) மாடித் தோட்டம் என்றால் என்ன?

மாடித்தோட்டம் என்றால் தண்ணீர் நம் வீட்டு கான்கிரீட் கூரையில் இறங்கி சேதம் ஆகிவிடுமோ என்பது எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். நீர் தேங்காத வரை இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. லேசாய்த் தண்ணீர் தெளிப்பதால் எந்தப் பாதகமுமில்லை. வேண்டுமென்றால் பிளாஸ்டிக் பெயின்ட் மாதிரியோ அல்லது பாலித்தீன் விரிப்போ அமைத்துக் கொள்ளலாம். மாடித்தோட்டம் போட்டு அனுபவமில்லாதவர்கள் எடுத்ததும் பெரிய அளவில் செய்யாமல் கொத்தமல்லி, புதினா எனக் கீரைவகைகளில் இருந்தே தொடங்கலாம். பின் போகப் போக அனுபவத்திற்கு ஏற்றவாறு பெருக்கிக் கொள்ளலாம். வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகரித்தாலும் செடியின் வளர்ச்சி பாதிப்படையும். எனவே, இந்நிலையில் பசுமைக்குடில் அமைத்தால் ஏற்றதாய் அமையும். மாடித்தோட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களையும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

நம் வீட்டின் மாடியில் செடி, கோடி, பூ, காய் கனிகளை வளர்ப்பது….அது மொட்டை மாடியாகவோ,பால்கனியாகவோ, வீட்டின் மேற்கூரையாகவோ இருக்கலாம். முன்பு வீட்டை சுற்றியிருந்த தோட்டத்திற்கு இன்று இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றல் செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகளும் இதில் இல்லாதது இவற்றை வரவேற்கதக்கதாக மாற்றியுள்ளது.




Horticulture – Jaya Agricultural College | Best Agricultural College in Tamilnadu | Best Agricultural College in Chennai

மாடித் தோட்டம் எங்கு அமைக்கலாம்?

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி மாடி வீடுகள், அலுவலக வளாகங்கள், சேமிப்பு கிடங்குகள், மேலும் சில தொழிற்சாலைகளிலும் கூட அமைக்கலாம்.

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.

பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.

மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.




ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.

ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.

ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.

செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.

நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.

டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.




முருங்கை, வாழை, பப்பாளி, கப்பங்கிழங்கு, கறிவேப்பிலை, அகத்தி போன்றவை பல வருடப் பயிர்கள். கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கண்ணி போன்றவை குறுகிய காலப் பயிர்களாகும். இவற்றை மீண்டும் மீண்டும் பயிரிடலாம். ஊடுபயிராகத் தண்டுக்கீரை, சிறுகீரை போன்றவற்றைப் பயிர் செய்யலாம். முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்காலப் பயிரும், குறுகிய காலப்பயிரும் சேர்த்துப் பயிரிடலாம்.

இத்தகைய தாவரங்களின் விளைச்சல்கள் வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, தோட்டப் பராமரிப்பு மன உளைச்சலைப் போக்கி மகிழ்ச்சியையும் தருகிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!