health benefits lifestyles

உங்களுக்கு தலைவலி வந்தாலே வாந்தியும் வருமா..? அதுக்கு இந்த பிரச்சனைதான் காரணம்..!

நம்மில் பலருக்கும் வாயு தலைவலி அடிக்கடி ஏற்படும். இந்த தலைவலியை போக்க நாம் மருத்துவமணை செல்ல வேண்டிய தேவையில்லை. நம் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் இந்த வாய்வுத் தலைவலியை குணப்படுத்த முடியும். எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

தலைவலியிலிருந்து விடுபட உதவும் சில முக்கிய பிரஷர் பாயிண்ட்ஸ்.. – News18 தமிழ்

வாயு தலைவலியை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்: நமது இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக தலைவலி வருவதற்கு வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. நமது இரைப்பை ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வீக்கமடையும் குடலில் இருந்து சில குறிப்பிட்ட கெமிக்கல் ரத்த ஓட்டம் மூலம் பயணித்து மூளையை பாதிக்கிறது. இதனால்தான் தலைவலி ஏற்படுகிறது.

ஒரு சிலருக்கு குமட்டலும் வாந்தியும் கூட ஏற்படக்கூடும். மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் அஜீரணம் உருவாகி வயிறு உப்புசம் அடைகிறது. வாயுத்தலைவலிக்கு மலச்சிக்கலும் காரணமாக இருக்கிறது. வயிற்றுப் பிரச்சனை நமக்கு வாயுத்தலைவலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்குகிறது. வாயுத்தலைவலியை இயற்கையான முறையில் வீட்டு வைத்தியத்திலேயே குணப்படுத்தலாம்.​




 

லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!

1. எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீர் : மிகவும் எளிமையான முறையில் எலுமிச்சை நீர் வாயுத் தலைவலியை குணமாக்கும். காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகள் சரியாகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள pH அளவை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் வயிறு உப்புசத்தை குறைத்து தலைவலியை போக்குகிறது.

2. பெப்பர்மின்ட் டீ : பெப்பர்மின்ட் டீயில் இதமளிக்கும் பண்புகள் உள்ளது. ஒரு கப் பெப்பர்மின் டீ குடித்தால் தசைகள் தளர்வடைந்து மன அழுத்தம் குறைகிறது. இதை பருகுவதால் தலைவலி உடனடியாக குணமாகிறது.

3. திருநீற்றுப் பச்சிலை : வயிற்றின் மென்படலத்தை இதமாக்கும் கலவைகள் திருநீற்றுப்பச்சிலையில் உள்ளது. இதை வாயில் போட்டு மெல்லுவதால் வயிறு உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை சரியாகிறது. வாயுத் தலைவலியிலிருந்து குணமாக 6-7 திருநீற்றுப் பச்சிலையை மெல்லுங்கள்.

4. மெக்னீசியம் சத்து : வாயுத் தலைவலியை போக்குவதில் மாக்னீசியம் சிறந்து விளங்குகிறது. ஆகையால் மாக்னீசியம் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ​

5. மோர் : மோரில் ப்ரோபயாடிக்ஸும் லாக்டிக் ஆசிடும் உள்ளது. அஜீரணம், வயிறு உப்புசம், வாயு பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்த மோர் உதவுகிறது. மலச்சிக்கல் அல்லது புளித்த ஏப்ப பிரச்சனை இருப்பவர்கள் மோர் குடிப்பது நல்லது.




6. துளசி இலைகள் : துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் செரிமானக் கோளாறுகள் சீராகும். மேலும் இது வயிற்றில் உள்ள வீக்கத்தை குறைக்கும். மிதமான வாயு தலைவலியை போக்கும் தன்மை துளசி இலையில் உள்ளது.

7. கொத்தமல்லி ஜூஸ் : கொத்தமல்லி ஜூஸில் பல மருத்துவ பயன்கள் உள்ளது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொத்தமல்லி ஜூஸில் உள்ளதாக கூறபடுகிறது. அரை க்ளாஸ் மோருடன் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி ஜூஸை கலந்து குடிப்பதால், வாயுத் தலைவலி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். மேலும் இந்த ஜூஸ் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!