Entertainment gowri panchangam

இளையராஜாவிடம் பாடுவதற்கு மறுத்த யேசுதாஸ்..

 இளையராஜாவின் மெட்டுக்கும் பாடலுக்கும் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் அனைவரும் அடிமை என்பதற்கு ஏற்ப இசையால் கட்டிப் போட்டு இருக்கிறார். முக்கியமாக 70 80களில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாத படமே இல்லை என்பதற்கு ஏற்ப அனைத்து படங்களிலும் இளையராஜா தான் இசை அமைத்திருப்பார்.




அந்த வகையில் இவருடன் இசையில் பல பின்னணி பாடல்கள் பாடி பல பாடகர்கள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் கேஜே யேசுதாஸ். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழை ரொம்பவே தெள்ளத் தெளிவாக அழகாக உச்சரித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மிகப்பெரிய பாடகர். ரம்யமான மனதை மயக்கும் அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர்.

Ilayaraja recites his own superhit New Year song to wish the fans! - Viral video - Tamil News - IndiaGlitz.com

அதனாலேயே காதல் மயக்கத்தில் இருப்பவர்களுக்கு இவருடைய பாடல்கள் தான் ஒரு மருந்து என்று சொல்லும் அளவிற்கு அனைவரது ஃபேவரிட் பாடகராக 70, 80களில் ஜொலித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் இளையராஜா இசையில் பாடிய பாடல்கள் காதலின் வலியையும், விரக்தியில் இருக்கும் இளைஞர்களுக்கு இவருடைய பாடல்கள் தான் மிகப்பெரிய மருந்து.

எத்தனை பாடல்கள் பாடினாலும் இவருடைய சோகப் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு ரம்யமான ஒரு சுகத்தை கொடுக்கும். அந்த வகையில் இவர் பாடிய பாடல் ஆன சின்ன சின்ன ரோஜா பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், ராஜராஜ சோழன் நான் மற்றும் பூவே பூச்சூடவா போன்ற பாடல்கள் அனைத்தும் இப்பொழுது வரை எவர்கிரீன் ஆகத்தான் மக்கள் மத்தியில் இடம் பெற்று இருக்கிறது.




அப்படிப்பட்ட இவர் இளையராஜா கம்போஸ் பண்ணிய ஒரு பாடலுக்கு பாட மறுத்திருக்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால் இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டு அந்த பாடலை பாடுவதற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று இளையராஜா தான் முடிவெடுப்பார். அப்பொழுது இவர் ஒரு பாடலுக்கு கம்போஸ் பண்ணி முடித்தார். அந்த நேரத்தில் இந்த கம்போஸுக்கான பாடலை யேசுதாஸ் பாடினால் சரியாக இருக்கும் என்று அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அவர் வர காலதாமதம் ஆனதால் இளையராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியாததால் இவரை ட்ராக் போட ஆரம்பித்து விட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்த யேசுதாஸ், இளையராஜா பாடியதை கேட்டதும் மெய் சிலிர்த்துப் போய்விட்டாராம். உடனே நீங்கள் பாடியதை விட சிறப்பாக என்னால் இந்த பாடலை பாட முடியாது. அதனால் என்னை விட்டு விடுங்கள் என்று பாட மறுத்திருக்கிறார். அதன்பின்பு இசைஞானி பாடி வெளிவந்த மனதை உருக்கும் பாடல் தான்  “ஜனனி ஜனனி ஜகம் நீ” என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!