gowri panchangam Sprituality Uncategorized

இன்றைய ராசி பலன் (06.01.24 )

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 06.01.2024, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று இரவு 07.05 வரை சுவாதி. பின்னர் விசாகம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையாருக்கு கண் புரை நோய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.சித்தி விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் காரியம் அனுகூலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள். மகனுக்கு பைக் வாங்கி பரிசளித்து சந்தோஷப்படுவீர்கள். உறவினர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வீர்கள்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். காமாட்சி அம்மன் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடக ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் நல்ல காரியங்களை செய்து மற்றவர்களின் புகழ்ச்சியை பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். காதலியின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள். இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வை பெறுவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார மேம்பாடு காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவி இருவரும் பழைய விஷயங்களைக் கிளறி அமைதியை கெடுப்பீர்கள். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கொள்ளை அடிப்பீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
இன்று பத்திரகாளி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வீர்கள். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள்.சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள்.கற்பக விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!