Entertainment News

அம்ரித் பாரத் ரயில்கள்.. இவ்ளோ வசதிகள் இருக்கா? அடடே! மாஸ் காட்டிய ரயில்வே

2 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி சில  தினங்களுக்கு முன்பு அயோத்தியில் தொடங்கி வைத்தார். இந்த அம்ரித் பாரத் ரயில்களில் என்னென்ன வசதிகள் இருக்கிறது. எவ்வளவு வேகத்தில் இந்த ரயில் செல்லும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

பிரதமர் மோடி இன்று 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். கோவை – பெங்களூர் உள்பட 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதேபோல 2 ‘அம்ரித் பாரத்’ ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.




இந்த அம்ரித் பாரத் ரயில் குளிர்சாதன பெட்டி இல்லாத சாதாரண வகை ரயில்களாகவே இயக்கப்படுகிறது. இதில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 12 ஸ்லீப்பர் கோச்களும் இருக்கை வசதி கொண்ட 8 செக்கண்ட் கிளாஸ் பொதுப் பெட்டிகளும் இருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியில் மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். எளிய மக்களை அதிக அளவில் கவரும் விதமாக மலிவான கட்டணத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் புஷ் புல் தொழில் நுட்பம் இருப்பதால் விரைவாக பயணிக்க முடியும். இந்த ரயில் விரைவாக கிளம்பும் அதே நேரத்தில் விரைவாக நிறுத்தவும் முடியும்.




இதனால் ரயிலில் பயண நேரம் கணிசமாக மிச்சம் அடையும். இந்த ரயில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படும். ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்தில் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து பீகாரின் தர்பாங்கா வரை அயோத்தி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இரண்டாவது ரயில் பெங்களூரில் இருந்து மல்டா வரை இயக்கப்படும்.

இந்த ரயிலில் செக்கண்ட் கிளாஸில் பயணிக்க 50 கி.மீட்டர் வரை கட்டணம் ரூ.35 ஆகும். தற்போது மெயில்/எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டணமாக ரூ.30 ஆக உள்ளது. ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியில் 15 கி.மீட்டர் வரையிலான தொலைவுக்கு ரூ.46 கட்டணமும் 50 கி.மீட்டர் பயணிக்க ரூ.65ம் வசூலிக்கப்படும்.

ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்க 5000 கி.மீட்டர் வரையிலான தொலைவுக்கு ரூ.1,469ம் இருக்கை வசதி கொண்ட செக்கண்ட் கிளாஸ் வகுப்பில் 933ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!