Cinema Entertainment விமர்சனம்

அத்தையா? மாமியா ? (1974) திரைப்பட விமர்சனம்

அத்தையா மாமியா (1974) நகைச்சுவை திரைப்படம்

Athaiya Mamiya Tamil Full Movie - YouTube

1974ம் ஆண்டு சித்ராலயா கோபு திரைக்கதை இயக்கத்தில் வெளி வந்த நகைச்சுவை திரைப்படம் அத்தையா மாமியா. இந்த படத்தில் ஜெய்சங்கர்-உஷா நந்தினி ஜோடியாக நடிக்க உடன் ஸ்ரீகாந்த், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.என்.ராஜம், சுகுமாரி, மனோரமா, காந்திமதி, சச்சு உட்பட மேலும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

அமெரிக்காவில் மேல் படிப்பை முடித்து விட்டு திரும்பி வரும் இளைஞனுக்கு அவனுடைய அத்தையும், மாமியும் தங்களது பெண்ணை கட்டி வைக்க போட்டி போடுகின்றனர். அதற்கு துணையாக இளைஞனின் பெற்றோரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு தாய் தனது அண்ணன் மகளையும், தந்தை தனது தங்கை மகளையும் மகனுக்கு கட்டி வைக்க ஆசைப்படுகின்றனர்.




கடைசியில் இந்த போட்டியில் உடன்பாடு ஏற்படாததால் இரு பெண்ணையும் அவனுக்கு கட்டி வைக்க முனைகின்றனர். இந்த கட்டத்தில் மகன் தான் ஏற்கனவே அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி கொண்டு விட்டதாக சொல்லி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான். அதை கண்டு வெகுண்டெழும் பெற்றோர்கள் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். அதற்கு பின் அவனும், அவன் மனைவியும் எப்படி வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதை மீதி கதை சொல்லும்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், படத்தில் நடித்த அனைவருமே கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருப்பார்கள். படம் பார்க்க வரும் ரசிகன் எந்த வித கவலையுமில்லாமல் முழுக்க முழுக்க சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

கவிஞர் வாலியின் வரிகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசையமைப்பில் நான் பெத்த மகனே நடராஜா, மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு, அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா என்கிற மூன்று பாடல்களும் அருமையாக அமைந்து படம் வெளி வந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகின.

படத்தை பார்த்து ரசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாமே!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!