Big Boss Tamil 7 Cinema Entertainment

Bigg Boss Tamil 7:பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷன்! சிக்கிய 6 பேர்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்துள்ள நிலையில், 6 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் சிக்கியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Bigg Boss Season 7: பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்களா? சேனல் தரப்பு அணுகியது யாரை?! | Vijay TV Bigg Boss Season 7 expected contestant's list - Vikatan

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில். ஃபிரீஸ் டாஸ்க் நடந்த நிலையில்… பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல், அன்பு மழை பொழியும் வீடாக மாறியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பெற்றோர், நண்பர்கள், சகோதரன், சகோதரியை கட்டி அணைத்து தங்களின் பாசத்தை கொட்டி தீர்த்தனர்.

மேலும் நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டிற்குள் ரவீனாவின் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் கடந்த சில வாரங்களாக போட்டியாளர்களிடம் கண்டிப்பு காட்டிய கமல் இந்த வாரம் போட்டியாளர்களை கொஞ்சம் கூலாகவே ஹேண்டில் செய்தார்.

இந்த வாரம், சரவணன் விக்ரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து… குறைந்த வாக்குகளுடன் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என கமலஹாசன் கேட்ட கேள்விக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த முறை ஓப்பன் நாமினேஷன் நடந்தது. இது குறித்து வெளியான முதல் ப்ரோமோவில், நிக்சன் பெயரை.. அர்ச்சனா, தினேஷ், ரவீனா, விசித்ரா  ஆகியோர் அடுத்தடுத்து கூறினர். இதனால் கடுப்பான நிக்சன், ஓபன் நாமினேஷன் என்றால் வேறு ஒரு சீன் நடப்பதாக தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார். அதே போல் மாயாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே நாமினேஷன் போது பிரச்சனை முட்டிக்கொண்டது.

இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷனில் சிக்கிய 6 பிரபலங்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில், நிக்சன், மாயா, ரவீனா, மணி, தினேஷ், விஷ்ணு, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்படும் நிலையில்… இவர்களில் இருந்து யார் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் ? பைனல் வரை நீடிக்க போவது யார்? என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!