Cinema Entertainment

73ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார்:எந்த காலத்திலும் பார்த்து ரசிக்க கூடிய ரஜினியின் கிளாசிக் படங்கள்!

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உ ற்சாகம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளில், அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் ஆலயங்களில் வழிபாடு செய்தும்  கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே கொண்டாடி வருகின்றனர்.

இன்று ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.




செட்டை விட்டு வெளியே போ.. ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்!.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா..?

முள்ளும் மலரும் 1978 – முள்ளும் மலரும் எனும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து மகேந்திரன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு உள்ளிட்டோர் நடித்திருப்பர். செந்தாழம் பூவில், இராமன் ஆண்டாலும், நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, அடி பெண்ணே, போன்ற ஹிட் பாடல்களை கொண்ட இப்படத்தில், வைராக்கியம் கலந்த அன்பு கொண்ட அண்ணனின் பாசப்போராட்டத்தை இப்படத்தில் காணமுடியும்.




ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி.? ரஜினி கடந்துவந்த பாதை.! - Tamil Spark

ஆறிலிருந்து அறுபது வரை 1979 – பஞ்சு அருணாசலத்தின் கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி உள்ளிட்டோர் நடித்து இருப்பர். தாய் தந்தையின்றி சிரமப்படும் ரஜினி சிறுவயதிலிருந்து இரண்டு தம்பிகளையும், ஒரு தங்கையும் பொத்தி வளர்ப்பார். சொகுசு நிலைக்கு வந்த பின், சுயநலம் கருதாத அண்ணனை அவலநிலைக்கு உடன்பிறந்தோர் தள்ளிவிடுவர். ரஜினி படும்பாட்டை பார்க்கும் போதெல்லாம் கலங்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகதான் இருக்கும். அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த்.

ஜானி 1980 – மகேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருப்பர். கதாநாயகிக்கான காதலை கதாநாயகன் வெளிப்படுத்தும் விதம் அழகாக இருக்கும். இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்டானது. 

ரஜினி' 64 தகவல்கள்- பகுதி 1 | Ramkumar's Blog

எங்கேயோ கேட்ட குரல் – 1982 பஞ்சு அருணாசலத்தின் கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா, ராதா உள்ளிட்டோர் நடித்திருப்பர். விருப்பில்லாமல், பெற்றோர்களின் வலியுறுத்தலால் அம்பிகா ரஜினியை மணக்கிறார். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுவர். பின்னர் ரஜினிக்கு, அம்பிகாவின் தங்கை ராதாவை திருமணம் செய்து வைப்பார்கள். அதன் பின், இவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே கதை.

 




30 Years Of Thalapathi Movie, Superstar Rajinikanth Landmark Film Rajini, Mammootty, Aravind Swamy Thalapathi Film Completes 30 Yrs | 30 Years Of Thalapathi:தமிழ் சினிமாவின் ஒற்றை தளபதி

தளபதி 1991 – மணிரத்தினம் – ரஜினி – மம்மூட்டி ஆகிய சூப்பர் காம்போவில் உருவான இதில் கமர்ஷியல் படத்திற்கு தேவையான காதல், அம்மா பாசம், நட்பு, சண்டைக்காட்சிகள் என அத்தனை அம்சங்களும் இருக்கும்.




அண்ணாமலை 1992 – சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, சரத் பாபு, குஷ்பு நடித்த படம் அண்ணாமலை. ‛வந்தேண்டா பாலுக்காரன்…’ என, ஓப்பனிங் சாங்கில் எண்ட்ரி ஆகும் வெள்ளந்தி ரஜினி, நண்பன் அசோக்கை நம்பி… தன் சொத்துக்களை இழந்து நடுரோட்டில் நிற்பதும், ‛வெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்…’ என ஒரே பாடலில், ஓவர் நைட்டில் அண்ணாமலை, கோடீஸ்வரன் ஆவதும் தான் கதை. ‛அசோக்… இந்த நாள்… உன் காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ…’என்ற வசனம் தியேட்டர்களில் சில்லறையை சிதறவிட்டது.

ரஜினி "70"- சூப்பர் ஸ்டார் ரஜினி | Superstar Rajinikanth

பாட்ஷா 1995 – சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். எளிதான குடும்பத்தில் இருக்கும் மாணிக்கத்தின் கடந்த கால வாழ்க்கை மும்பையில் எப்படி இருந்தது? என்பது மாஸாக காண்பிக்கப்பட்டிருக்கும்.




ரஜினி மீது வெறுப்பை கக்கும் படையப்பா நடிகர்.. பெரிய மனுசன நம்பி மோசம் போனது தான் மிச்சம் - Cinemapettai

படையப்பா 1999 – கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய இதில் ரஜினியுடன் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்திருக்கும். காதலை மறுத்த ரஜினியை பழி வாங்க காத்திருக்கும் நீலாம்பரி படத்தின் ஹைலைட். அதுபோக, ரஜினி பாம்பு பிடிக்கும் காட்சி, கவுண்டமணி செந்தில் காமெடி என பல விஷயங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!