Entertainment News Uncategorized

12000 பேர் மெத்தமாக வேலை நீக்கம் ஏன்? கூகுள் சுந்தர் பிச்சையின் லீக் ஆடியோ.

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் இன்று ஏஐ துறையில் மாஸ் காட்டினாலும் அதன் வருவாய், வர்த்தகம் அனைத்தும் கூகுள் சர்ச் மற்றும் அதன் விளம்பர சேவையில் இருந்து தான் வருகிறது. இப்படியிருக்கும் போது 2022ல் உலகம் முழுவதும் வர்த்தகப் பாதிப்பு, செலவுகள் குறைப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் கூகுளின் வருமானம், லாபம் ஆகியவை அடிவாங்கத் துவங்கியது.




சுந்தர் பிச்சை: யார் இவர்? - தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் - BBC News தமிழ்

இந்த நிலையில் தான் அனைத்து முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியது. ஆனால் கூகுள் கடைசி வரையில் பணிநீக்கத்தைக் கையில் எடுக்காமல் இருந்தது, ஆனால் பங்கு மதிப்புச் சரிவு, முதலீட்டாளர்கள் நெருக்கடி, நிர்வாகக் குழுவின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாகக் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.




கூகுள் நிறுவனத்தின் 25 வருட வரலாற்றில் அதிகப்படியான பணிநீக்கம் செய்தது இதுதான், ஒரே அறிவிப்பில் 12000 டெக் ஊழியர்களை உலகளாவிய தனது வர்த்தகத்தில் பணிநீக்கம் செய்தது. இதனால் இந்த நடவடிக்கை கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில் ஒரு வடுவாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஆல் ஹேன்ட்ஸ் மீட்டிங் நடைபெற்றது, இதில் சுந்தர் பிச்சை முதல் பெரும் பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த முக்கியமான கூட்டத்தில் ஊழியரின் பணிநீக்கம் குறித்த கேள்விக்கு சுந்தர் பிச்சை பதில் அளித்த ஆடியோ லீக் ஆகியுள்ளது. இந்த ஆடியோவில் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள் மற்றும் ஆல்பபெட் சிஇஓ-வான சந்தர் பிச்சை-யிடம், நிறுவனத்தின் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து ஒரு வருடம் ஆன நிலையில், இது நிறுவனத்தின் வளர்ச்சியிலும், லாப நஷ்டத்திலும் உறுதிப்பாட்டிலும் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கேள்வி கேட்டார்.




இதற்குப் பதில் அளித்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் மிகக் கடினமான முடிவாகும், 25 வருடத்தில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்தது இல்லை. ஆனால் அவசியமானதாக இருந்தது, இதன் வாயிலாகத் தான் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் அதிகப்படியான முதலீட்டைச் செய்ய வழி வகுத்தது. இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஆக்சஸ்-ஐ திடீரென கட் செய்தது உண்மையில் Bad Idea, உண்மையில் அப்படிச் செய்திருக்கக் கூடாது, நாம் இந்தப் பணிநீக்கத்தைக் கட்டாயம் மாறுபட்ட முறையில் செய்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக ஊழியர்கள் முன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் இந்தப் பேச்சு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் இந்த ஆல் ஹேன்ட்ஸ் மீட்டிங் ஆடியோ லீக் ஆனது மூலம் ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சுந்தர் பிச்சை. இவருடைய பேச்சு குறித்த கருத்தை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!