Cinema Entertainment விமர்சனம்

ஹாய் நான்னா விமர்சனம்

தசரா படத்தில் பிளாக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்ரோஷமாக நடித்த நானி மீண்டும் தனது ஹோம் கிரவுண்ட் ஆன சாக்லேட் பாய் லுக்கில் பொறுப்புள்ள தந்தையாகவும், மனைவியை பிரிந்த கணவனாகவும், காதலிக்காக ஏங்கும் காதலனாக என வெரைட்டி நடிப்பைக் காட்டி ஒரு நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் என வியாழக்கிழமையான இன்றே ஹாய் நான்னா படத்தை ரிலீஸ் செய்து விட்டனர். தெலுங்கு படமான இது, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளன.




நானி மற்றும் மிருணாள் தாகூரின் ஹாய் நான்னா திரைப்படம் டாடா படத்தின் ரீமேக் இல்லை என்றாலும் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க..

ஹாய் நான்னா கதை: பெரிய போட்டோகிராஃபராக வர வேண்டும் என விராஜ் (நானி) முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்கள் முன் நகர்ந்து செல்கிறது. பிரபல புகைப்படக் கலைஞராக நானி உள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் தனது மகள் மகீயை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யாஷ்னா (மிருணாள் தாகூர்) அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யாஷ்னா யார்? என்கிற ட்விஸ்ட் உடன் ஹாய் நான்னா படத்தின் கதை கச்சிதமாக அமைந்துள்ளது.




பர்ஃபார்மன்ஸ்: மிருணாள் தாகூரின் நடிப்பு படம் நெடுகிலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறது. தசரா படத்திற்கு பிறகு நானிக்கு செம க்யூட்டான சார்மிங்கான ரோல் வழக்கம் போல பெண் ரசிகைகளை ஜொள்ளு விட வைத்து விடுகிறார். மஹி கதாபாத்திரத்தில் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னாவும் அழகாக நடித்து சில இடங்களில் கண்ணீர் வர வைத்து விடுகிறார். இவர்களை தவிர ஸ்ருதிஹாசன் கோவாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடி விட்டு செல்கிறார். நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை சரியான அளவில் நடித்து விட்டுச் சென்றுள்ளனர்.

பிளஸ்: குஷி படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேஷம் இந்த படத்திலும் இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களை வருடியுள்ளார். சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு படம் முழுக்க ரிச்சான லுக்கை கொடுத்துள்ளது. பிரவீன் ஆண்டனியின் எடிட்டிங்கும் சூப்பர். இயக்குநர் சவுரவ் ஒரு சிம்பிளான காதல், பாசம், குழந்தை வளர்ப்பு கதையை கொஞ்சம் ட்விஸ்ட் கலந்து ஃபீல் குட் படமாக கொடுத்துள்ளார்.

மைனஸ்: படத்தின் மூடுக்கு ஏற்ப ஸ்லோ மோஷனில் நகரும் கதை சில இடங்களில் தொய்வை தரத்தான் செய்கிறது. முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதியில் சில இடங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனால், மீண்டும் கிளைமேக்ஸ் காட்சிகள் கைதூக்கி விட ஹாய் நான்னா பாஸ் ஆகி விட்டது.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!