Entertainment lifestyles News

‘வேதாந்த் ஃபேஷன்ஸ்’ வளர்ந்த கதை!

மான்யவர்’ என்ற பிரபல ஆடை பிராண்டை உருவாக்கியவர்தான் ரவி மோடியின் தலைமைத்துவம் என்பது தொலைநோக்குத் தன்மை கொண்டது. அவரது தலைமையின் கீழ் வேதாந்த் ஃபேஷன்ஸ் (Vedant fashions) நிறுவனத்தின் எளிமையான தொடக்கத்தில் இருந்து உலகளாவிய ஃபேஷன் ஜாம்பவானுக்கான பயணத்தை எப்படி மேற்கொண்டது என்பதைப் பார்ப்போம். புகழ்பெற்ற மான்யவர் பிராண்டின் படைப்பாளர்களான வேதாந்த் ஃபேஷன்ஸின் நிறுவனர் ரவி மோடி தன் பால்ய வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.




பிறகு ஃபேஷன் துறையில் பெரிய ஜாம்பவனாக ரவி மோடியின் மாற்றம், முன்னேற்றம் கண்டது அவரது மன உறுதிக்கும். தொழில்முனைவோர் ஆவதற்கான தீரா வெறியின் தாக்கம் ஏற்படுத்தும் பயணமாகும்.

கொல்கத்தாவில் உள்ள தனது தந்தையின் சிறிய சில்லறைக் விற்பனைக் கடையில் பணிபுரிந்து, எம்பிஏ படிப்பைப் பற்றிய யோசனைக்குப் பிறகு, ரவி மோடி வணிக உலகில் களமிறங்கினார். ரவி மோடி தன் அம்மாவிடம் இருந்து ரூ.10,000 கடனாகப் பெற்று, அவரது ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்டதுதான் ‘வேதாந்த் ஃபேஷன்ஸ்’.




ஆடை தயாரிப்பில் பதித்த தடம் இந்திய ஆடைகளைத் தயாரித்த ரவி மோடி, அனைத்து இந்திய மாநில சந்தைகளிலும் தனது தடத்தைப் பதித்தார். இப்படித்தான் ‘மான்யவேர்’ பிறந்து செழிப்பாக வளர்ந்தது.

பெரிய ஸ்டோர்களுக்கு விற்பனை செய்தல், பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகளைத் திறப்பது போன்ற ரவி மோடியின் வர்த்தக உத்திகள் அவரது வணிக சாம்ராஜ்ஜியத்தை வெகுவாக விரிவுபடுத்தியது.

2005-06 வாக்கில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கடைகளில் ‘மான்யவர்’ ஓர் அங்கமாக இருந்தது. 2008-ஆம் ஆண்டில், புவனேஸ்வரில் தனது முதல் பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டை தொடங்கினார் ரவி மோடி. இது நிறுவன விரிவாக்க உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தது. தன் பிறகே தன் பிரத்யேக விற்பனை நிலையங்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ரவி மோடி.




இவரது அணுகுமுறை திறமையான முறையில் லாபங்களை ஈட்டுவதாக அமைந்தது. இன்று ‘மான்யவர்’ இந்தியாவில் 230 நகரங்களில் 1.3 மில்லியன் சதுர அடி பரப்பு கொண்ட சில்லறை விற்பனை இடத்தை நிர்வகித்து வருகிறது. குறிப்பாக, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற தெற்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோடீஸவரர் பட்டியலில்… ரவி மோடியின் வெற்றி என்பது எண்ணிக்கையில் மட்டுமல்ல, தாக்கத்திலும் உள்ளது.

அவர் 2022 ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்கள் பட்டியலில் 1,238-வது இடத்தைப் பிடித்தார். நிகர சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள். இது ஏப்ரல் 2023-க்குள் 3 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 11 சர்வதேச சந்தைக் கடைகள் உள்ள வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட், கரோனா பெருந்தொற்றுக்கு காலத்திலும் வலுவான லாபத்தை ஈட்டியது.

இது நிறுவனத்தின் நெகிழ்ச்சியான வணிக மாதிரிக்கு ஒரு சான்றாகும். ரவி மோடியின் விதியின் மீதான நம்பிக்கையும், அவரது தனித்துவமான வணிக உத்திகளும் வேதாந்த் ஃபேஷன்கஸ் நிறுவனத்தை ரூ.26,000 கோடி மதிப்பிலான நிறுவனமாக உயர்த்தியது. இதோடு மட்டுமல்லாமல், இந்தியர்களுக்கே உரிய ஆடை சந்தையில் புரட்சியையும் ஏற்படுத்தியது.




ஆன்லைன் விற்பனை, ட்வாமேவ் மற்றும் மந்தன் போன்ற புதிய தயாரிப்பு வகைகளில் நிறுவனத்தின் விரிவாக்கம், சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கு நிறுவனத்தைக் கிளை பரத்தியது. இந்தியாவின் வளர்ந்து வரும் திருமண மற்றும் பண்டிகைக் கொண்டாட்ட ஆடைகள் சந்தையில் பெரும் பங்கைக் கைப்பற்றுவதற்கான வர்த்தக உத்தியைக் கொண்ட்டிருக்கிறது ரவி மோடியின் தொழில் வியூகம். ரவி மோடியின் தலைமையின் கீழ் வேதாந்த் ஃபேஷன்ஸின் வெற்றி, அதன் திட்டமிடல், சந்தைத் தேவைகளைப் புரிந்துகொள்வது மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யாத வர்த்தக மாதிரி ஆகியவற்றின் சக்தியை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க சந்தை இருப்பு மற்றும் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுடன், வேதாந்த் பேஷன்ஸ் மற்றும் மான்யவர் ஆகியவை இந்திய ஃபேஷன் துறையில் நீடித்த வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு தயாராக உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!