தோட்டக் கலை

வீட்டித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பு

இப்போது குளிர் காலம் என்பதால்  சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம்.

• கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை.




எப்போது வளர்க்கலாம்?
• மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும்.
• வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம்.
• கோடையில் இவைகளை வளர்ப்பது பரிந்துரைக்கதக்கது அல்ல.

எந்த மண்ணில் வளர்க்க வேண்டும்?
• கேரட்டுகள் வளர தளர்வான, தண்ணீர் வடிய கூடிய மண் தேவை. கற்களோ மண்கட்டிளோ இருந்தால் அவை கோணல் மாணலாகவும் பிளவுகளுடனும் வளரும்.
• சரிவான நில பரப்புகளில் வளர்ப்பதே சரியானது.
• அதிக அமில(acidity) தன்மை வாய்ந்த மண்ணில் இதை வளர்க்க கூடாது. சராசரியாக 6-6.8 கார(pH) அளவு கொண்ட மண்ணையே பயன்படுத்த வேண்டும்.
• கேரட்டுகள் வேர் வகைகள் ஆதலால் நிறைய நைட்ரஜன் உரங்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.




வளர்க்கும் முறை:

• கேரட் விதைகளையும்(கேரட் விதைகளா? என்று யோசிக்கிறீர்களா? முதலில் நாங்களும் இதையே தான் யோசித்தோம்) போதுமான அளவுடைய தொட்டிகளையோ, சன்னல் பெட்டிகளையோ (window boxes) வாங்கிக்கொள்ளுங்கள். அவற்றில் நீர் வடிவதற்கு துளைகள் இருப்பது மிக முக்கியம்.

• பின்பு தொட்டிகளை நல்ல (இயற்கை) உரம்-மண் கலவையால் நிரப்ப வேண்டும். தொட்டியின் வாயிலிருந்து ஒரு அங்குலம்(inch) விட்டு மீதம் முழுதும் கலவையால் நிரப்ப வேண்டும்.

• விதைகளை மென்மையாக, மண்ணில் ஒரு அங்குலம் (inch) ஆழத்திற்கு அழுத்தி, ஒரு மெல்லிய அடுக்கு மண்ணால் மூடவும்.

• விதைகளை வரிசையாக ஒவ்வொன்றுக்கும் இடையே 6-அங்குலம் (inch) இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.

• தொட்டிகளை நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.
• மணணில் எந்நேரமும் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீர் தேங்கவும் கூடாது.
• ஈரத்தை தக்க வைக்க பீட் பாசியை(peat moss) நீரில் தோய்த்து விதைகளுக்கு மேற்பரப்பில் போட்டு வைக்கலாம்.
• இரண்டு வாரங்களில் விதைகள் முளைக்கும் என எதிர்பார்க்கலாம்.




அறுவடை:

• கேரட்டுகள் நிலத்தின் மேல் தண்டின் கீழ் முக்கால் அங்குலம் அளவு வரை தெரிய ஆரம்பித்தால் அவை அறுவடைக்கு தயார் என அர்த்தம்.
• உங்களால் பார்க்க முடியாவிடின் தண்டைச் சுற்றி சிறிது மண்ணை தள்ளி பார்க்கலாம்.easiest-vegetables-to-grow-at-home1376372302-aug-11-2012-1-600x400
(குறிப்பு: நீங்கள் கேரட்டுகளின் முழுதான அளவை காண ஆவலாய் இருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்தால் கேரட்டுகள் முழுமையான அளவை அடையாது.)

• கேரட்டுகளை அறுவடை செய்ய அவைகளை மொத்தமாக பிடித்து பிடுங்க வேண்டும். ஒரு வேளை பிடுங்க கடினமாக இருந்தால் மண்ணில் நீர் செலுத்தி சிறிது (ஓரிண்டு மணி நேரம்) நேரம் கழித்து பிடுங்க வேண்டும்.
• கேரட்டுகளை பிடுங்கியவுடன் அதின் பச்சை பாகங்களை(தண்டு, இலை) அரிந்துவிட்டு, கழுவி, உல்ர்த்தி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!