Cinema Entertainment

விஜய் 68 படத்தில் இணையும் நடிகை இவானா…

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஒரு நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




இந்நிலையில் விஜய் நடிக்கும் 68-வது படம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியானது. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் தன்னுடைய 68 வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை இந்த மாதம் முதல் வாரம் நடைபெற்றது. ஆனால் லியோ படம் வெளியாகவிருந்ததால் அது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜயதசமியை முன்னிட்டு பட குழுவினர் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ், அரவிந்த் உள்ளிடவர்களும் நடிக்கின்றனர்.

விஜய் நடித்த போக்கிரி மற்றும் வில்லு ஆகிய திரைப்படங்களை பிரபுதேவா இயக்கியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஜய்யின் பல பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய் உடன் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 68 படத்தில் லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானா விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்தின் கதாபாத்திரங்கள் முன்பே வெளியான நிலையில், இவானா இந்த படத்தில் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!