health benefits Samayalarai

மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?

குல்கந்து என்பது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை ஜாம். குல்கந்து எனும் சொல் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது; குல் என்றால் ரோஜா என்றும் கந்த் என்றால் சர்க்கரை/இனிப்பு என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

ஆண்மை பெருக்கும் ரோஜா “குல்கந்து” | Benefits of Rose Gulkandu | ஆண்மை பெருக்கும் ரோஜா “குல்கந்து” - Tamil BoldSky

குல்கந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரோஜா வகைகள்!

பாரம்பரியமாக, குல்கந்து, டமாஸ்க் ரோஜாக்களால் தயாரிக்கப்படுகிறது. சீனா ரோஜா, பிரஞ்சு ரோஜா மற்றும் முட்டைக்கோஸ் ரோஜா ஆகியவைகளும் கூட குல்கந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் மற்ற பொதுவான வகை ரோஜாக்களாக பட்டியலிடப்படுகின்றன. இது சிறப்பான இளஞ்சிவப்பு ரோஜா இதழ்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, உடன் சர்க்கரையுடன் கலக்கப்படுகிறது. ரோஜா இதழ்களில் இருக்கும் சாறு சர்க்கரையுடன் மெதுவாகக் கலந்து நாளவிடைவில் லேகியம் போன்ற பக்குவத்தை அடைகின்றன.




ஹோம்மேட் குல்கந்து ரெசிப்பி:

ரோஜா இதழ்கள் – 1 கப்

கற்கண்டு – 1/4 கப்

தேன் – தேவையான அளவு

வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்




 செய்முறை விளக்கம்

  • சர்க்கரை, ரோஜா இதழ் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ( இவை இரண்டையும் உரலில் சேர்த்து அரைத்து எடுத்தால் குல்கந்து இன்னும் நன்றாக இருக்கும்.) அரைத்த கலவையை கண்ணாடி ஜாரில் சேர்த்து, வெள்ளரி விதையையும் இதனுடன் சேர்க்க வேண்டும்.

  • இதை ஸ்பூனால் நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதில் தேன் ஊற்றி நன்கு கலக்கவும். 48 மணி நேரம் மூடி போட்டு அப்படியே விட்டு விட வேண்டும். ( அல்லது இதை 5 நாட்கள் வெயிலில் வைத்து காய வைத்து எடுக்க வேண்டும். வெயிலில் காய வைக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். ) அவ்வளவு தான் சுவையான ரோஜா குல்கந்து ரெடி.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், ஸ்பூனால் கலந்து விட்டு எடுத்து சாப்பிட வேண்டும். உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்தினால் குல்கந்து கெடவே கெடாது.




குல்கந்தின் நன்மைகள் 

  • தூக்கத்தை தூண்ட உதவுகிறது. ரோஜா இதழ்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றின் ஹிப்னாடிக் விளைவுகளால் தூக்கத்தைத் தூண்டவும் உதவும் என கூறப்படுகிறது. குல்கந்தில் உள்ள டெர்பீன்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் எத்தில் அசிடேட் ஆகியவை மூளையை ரிலாக்ஸ் செய்ய உதவும் என சொல்லப்படுகிறது. இது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

  • குல்கந்து சருமத்தை அழகாக பராமரிக்க உதவுகிறது. முகப்பருவைக் குறைப்பது முதல் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது வரையிலான பண்புகள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.   வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகளின் அதிக உள்ளடக்கம் காரணமாக. குல்கந்து சருமத்தை உள்ளே இருந்து மேம்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகிறது.

    குல்கந்தில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் இது எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!