gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/வாய்மையா ? கடமையா ?

மஹாபாரதக் கதை தெரிந்தவர்களுக்கு சல்லியன் யார் என்று தெரிந்திருக்கும். ஆனால் எதற்காக அவன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து அவர்கள் சார்பாக போர் புரிந்தான் என்பது பலருக்கும் வியப்பாக இருக்கும். அந்த வீரன் சல்லியன் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

முழுமஹாபாரதம்: சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! - சல்லிய பர்வம் பகுதி – 17

“மகாபாரத மாணிக்கங்கள் என்னும் இப்பகுதியில், இன்று நாம் காணவிருப்பது, மத்ர தேசத்து அரசர் “சல்லியன்” அவர்களை பற்றி, வெகு நாட்களாக, கர்ணன் மேல் அன்பு கொண்ட ஒரு சாரார், கர்ணன் மரணத்திற்க்கு சல்லியனே காரணம், சல்லியன் ஒரு துரோகி என்பது போல சித்தரித்து வருகின்றனர், இக்கூற்று உண்மையா???




“மத்ர தேசத்து மன்னன் சல்லியன், மாவீரனான சல்லியன், 1000 யானை பலம் கொண்டவன் என்றும், தன் எதிரே (அல்லது) அருகே, கோபமாக எவர் இருந்தாலும் அவரது பலத்தை கிரகிக்கும் வரம் பெற்றவன், சிறந்த வீரனான சல்லியன், அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தி பாண்டு’வின் நண்பர் ஆவார்… ஒரு முறை மத்ர தேசத்தை எதிரிகள் சூழ்ந்து தாக்கிய போது, தன் நண்பனுக்கு உதவிட பெரும் படையோடு சென்று, மத்ர தேசத்தை தன் பராக்கிராமம் கொண்டு காத்தார் பாண்டு, இதனால் மகிழ்ந்த சல்லியன் தன் தங்கை “மாத்ரி”யை பாண்டுவிற்க்கு மணமுடித்து வைத்தான்…

காலத்தின் போக்கில், பாண்டு சாபம் பெற்று, பின் பாண்டவர்கள் பிறந்து, பாண்டு இறந்து உடன் தன் தங்கை மாத்ரியும் மறைந்தது என நிகழ்ந்தவை சல்லியனை உலுக்கியது, அஸ்தினாபுரத்தின் அரசியல் சூழல் உணர்ந்து, வசுதேவரை போலவே, சல்லியனும் குந்தியை தன் நாட்டிற்க்கு வந்திட பணித்தான், காரணம் மாத்ரியின் மூலம் பிறந்த நகுல, சகாதேவர்கள் இருவரையும் தன் பிள்ளைகளாகவே கருதினான் சல்லியன், ஆகவே குந்தியை தன் சகோதரியாக பாவித்ததோடு, தன் நண்பன் பாண்டுவின் பிள்ளைகளான பாண்டவர்களை ரட்சிக்கும் பொறுப்பை ஏற்க துணிந்தான் சல்லியன், குந்தியை அவள் புத்திரர்களோடு மத்ர தேசம் வர பணித்தான், ஆனால் குந்தி அக்கோரிக்கையை மறுத்து அஸ்தினாபுரம் சென்றாள்.

காலங்கள் உருண்டோடின,

சூதாட்டம் – வனவாசம் – அஞ்ஞானவாசம்

பாண்டவர்கள் வனவாசம் முடிந்தது பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு காந்துறையும் அஞ்ஞாத வாசமும் முடித்துக் கொண்டு வெளிப்பட்டனர்.

துரியோதனன் சொன்னபடி, நாடு தர மறுத்துவிட்டமையால்,குருஷேத்திர யுத்தம் தடுக்க முடியாததாகி விட்டது.




இருதரப்பினரும் போருக்குப் படை திரட்டலாயினர். பாண்டவர் உயலாவியம் என்னுமிடத்திலிருந்து படை திரட்டினர்.

சல்லியன், நகுலன் /சகாதேவன் இருவருக்கும் தாய் மாமன். பாண்டவர் தந்தை பாண்டு மன்னனுக்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. அவளுக்குத் தர்மன், பீமன், அர்ஜுனன் என மூவர் புதல்வர். இரண்டாம் மனைவி மாத்திரி. அவளுக்கு நகுலன், சகாதேவன் என இரு புதல்வர்.

மகாபாரதத்தில் அர்ஜுனன், கர்ணனை விட அதிக சக்திவாய்ந்த வீரர் யார் தெரியுமா? | What made King Shlaya more powerful than Arjuna - Tamil BoldSky

மாத்திரியின் உடன் பிறந்தவன் சல்லியன். அவன் பேராற்றல் படைத்தவன். வில்லாண்மையாலும் வாளாண்மையாலும் வேலாண்மையாலும் அவனை யாரும் வெல்ல இயலாது.

அந்த சல்லியன், தன் மருமக்களுக்குப் போரில் உதவுவதற்காக உபலாவியம் நோக்கித் தன் பெரும்படைகளுடன் வந்து கொண்டிருந்தான்.

துரியோதனனின் தந்திரம் செய்தி அறிந்த துரியோதனன், எப்படியாவது சல்லியனைத் தனக்கு உதவியாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினான்.

சல்லியன் நெடுந்தூரம் வந்தமையால், அவனும் அவன் படைகளும் சோர்ந்து போயினர். நடுவில் பெரிய பாலை நிலம் குறுக்கிலிட்டது. ஒரே வெய்யில் வெப்பக்காற்று வேறு, புழுதிப்புயல் கண்ணை மறைத்தது.

படைவீரர்கள் தாகத்தாலும் பசியாலும் துடிக்கலாயினர். நா உலர்ந்து நடை தளர்ந்தனர். நிழலே அருகில் எங்கும் தென்படவில்லை. தன் படைகள் சோர்ந்து போவது கண்டு, சல்லியன் வேதனையுற்றான். இன்னும் பாலை எவ்வளவு தூரம் உள்ளதென்றே தெரியவில்லை.




எப்படியோ மேலும் சிறிது தூரம் முன்னேறினான். என்ன அதிசயம் வழியில் ஒரு பெரிய பந்தல் தென்பட்டது. அளவு கடந்த தன் படைகளுடன் தங்குவதற்கு ஏற்றபடி விசாலமாக அந்தப் பந்தல் இருந்தது. சிலர் வந்து சல்லியனையும், அவன் படைவீரர்களையும் முகமன் கூறிப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றனர்.

முதலில், தாகத்துக்கு இளநீரும், மோரும் தந்தனர். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தண்ணீரும் கரும்பும், அறுகம் புல்லும் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுநேரத்தில் அறுசுவையுண்டி பரிமாறப்பட்டன. அனைவரும் உணவருந்தி விட்டு, குளிர் நிழலில் இளைப்பாறினர்.

சல்லியன் பரவசம் :

நடுப்பாலையிலே நண்பகலிலே கிடைத்த விருந்து உபசாரம் கண்ட சல்லியன் வியப்பாலும் மகிழ்வாலும் பரவசமானான்.

இத்தகைய அறச்செயலைக் காலத்தினால் செய்த அறவோன் யார்? அவன் எதன் பொருட்டு இந்த அறச்செயலை மேற் கொண்டான்? என்று சல்லியன் சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த அறவோனை அவன் மனமும் வாயும், வாழ்த்திக் கொண்டே இருந்தது.

“இந்த அறச்செயல் செய்த அறவோனுக்கு என் உடல், பொருள். ஆவி அனைத்தும் உதவினாலும் கைம்மாறு ஆகாது!” என்று அவன் வாய் அவனை அறியாமல் உரக்கக் கூறிவிட்டது.




வாய்மையா ? கடமையா ?

உடனே அதுகாறும் மறைந்திருந்த துரியோதனன், சல்லியனுக்கு முன்னே நின்றான்.

“மாமா! தங்கள் மருமகனாகிய நானே தங்களை உபசரிக்கும் இப்பேறு பெற்றேன். தாங்கள் தங்கள் உடல், பொருள், ஆவியும் எனக்கே தருவேன் என்றீர்கள் அல்லவா? வரப்போகும் போரில் எனக்குத் துணையாக நின்றால், அந்த உதவியே போதும். அதுவே நான் எதிர்பார்க்கும் கைம்மாறு” என்றான் துரியோதனன்.

விருந்துண்ட மகிழ்ச்சியில், தன்னை மறந்து கூறிய சொல், சல்லியனது கடமைக்கு மாறாக அமைந்துவிட்டதே!

மருமக்களுக்கு உதவுவதே மாமன் கடமை. இப்போது அக்கடமையைச் செய்ய முடியாமல், தன் வாய்மை தடுத்துவிட்டதே.

கடமையா ? வாய்மையா ? என்ற பட்டிமண்டபம் நெடுநேரம் சல்லியன் மனத்தில் நிகழ்ந்தது. இறுதியில் வாய்மையே பெரிது என்று அவன் மனம் தீர்ப்பளித்து விட்டது.

நகுலன், சகாதேவனுக்கு தாய்மாமன் ஆனபோதும்தூரியோதனின்  தந்திரத்தால் குரு சேத்திரப் போரில் கௌரவர்கள்  தரப்பில் போரிட நேர்ந்தது.தன் பெரும் படையுடன் துரியோதனனுக்குப் போரில் உதவி செய்ய அத்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டு விட்டான்.




குருஷேத்திரப் போர்

குருஷேத்திரப் போரில் தயக்கத்துடன் கலந்து கொண்டாலும், பல பெரும் வீரர்களைக் கொல்கிறான். அபிமன்யுவின் மைத்துனனும், விராட நாட்டு இளவரசனுமானஉத்திரனுடன்  போர் புரிந்து, தனது ஈட்டியால் கொல்கிறான். இதனையறிந்த அர்ஜுனன் கோபம் கொண்டு, சல்லியனின் சகோதரன் மற்றும் மகனைக் கொல்கிறான். தவிர சக்கரவியூகம் அமைத்து, சல்லியனையும் போரில் பங்கேற்க விடாது ஓரிடத்தில் கட்டுப்படுத்துகிறான்.

கர்ணனுக்கு தேரோட்டியாக

சல்லியன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து அர்ஜுனனுடன் அவன் சண்டை போடும்போது அர்ஜுனனின் திறமைகளைப் பாராட்டி, கர்ணனின் குறைகளை மேம்படுத்தி கர்ணனின் குவியத்தைக் கெடுக்கிறான்.

கௌரவ சேனைக்குத் தலைமை

கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள், கௌரவ சேனைக்குத் தலைமையேற்கிறான் சல்லியன். போரில் தோற்கப்போவது உறுதியான நேரத்தில், தருமனின் ஈட்டிக்கு இரையாகிறான்.

இதன் பின்னர் கௌரவ சேனை தலைவர் எவருமின்றி போர்க்களத்திலிருந்து ஓடத் துவங்கியது.

சல்லியனின் வாய்மை வென்றது

சல்லியன் வாய்மை காத்த செயல்கண்டு உலகமே போற்றியது. மருமகன் தருமன் முதலியோரும் தங்களுக்கு எதிராகப் போரிட்ட அவனை வெறுக்கவில்லை அவளைக் கொண்டாடவே செய்தனர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!