gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/சகுனி- துரியோதனன் திட்டம்

சகுனிக்கு அப்படியொரு செருக்கு இருந்தது – “எனக்கிருக்கும் கூர்மதியும் முன்யோஜனையும் இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது! புகை நுழைய முடியாத இடத்தில் கூட என் மூளை நுழைந்து விடும்.” அவர் தன் யோஜனையைச் சொல்கிறார், “உலகம் முழுவதும் இருக்கும் மூளையை ஒன்றுசேர்த்தால், ஒண்ணரை ரூபாய் மூளை தேறும். அதில் ஒரு ரூபாயோ என்னிடம் இருக்கிறது. நாலணா கிருஷ்ணரிடம் இருக்கிறது. மீதி நாலணாவில் இந்த உலகம் முழுவதும்!”

Mahabharat : WAR between Krishna and Duryodhan | 22nd May 2014 FULL EPISODE - YouTube

துரியோதனன் சொன்னார், “அது தானே பிரச்சனையே? அந்த நாலணாவை எப்படி நம் பக்கம் கொண்டு வருவது? பாண்டவர்கள் தரப்பில் இவர் ஒருவர் மாத்திரமே சாதுரியமுடையவர்! இவர் தான் எல்லாக் கிளர்ச்சிக்கும் அச்சாணி! என்ன செய்தால் அது நடக்கும்?”

“அட, பிள்ளைப் பிராயத்தில், இவர் பால்-தயிர்-வெண்ணெய்-மிஸ்ரியை, லபக்-லபக்கென்று, திருடித் திருடிச் சாப்பிட்டார்! இவர் ஒரு சாப்பாட்டுராமன்! எனக்குத் தோன்றுகிறது – ஒஸ்தியாக எதுவும் இவருக்கு சாப்பிடக் கிடைக்கவில்லை! அருமை-அருமையான, அழகழகான பட்சணம்-பதார்த்தங்களை செய்து வை. அவரை உட்கார வைத்துப் பரிமாறு. அவர் சாப்பிட்டார் என்றால், உடனே, உன் பக்கம் சரிந்து விடுவார்!”

துரியோதனன் சொன்னார், “பூ! இதென்ன பிரமாதம்! அமர்க்களமாக ஏற்பாடுசெய்து விடுகிறேன்!”




36 என்ன – 56 என்ன – 3600, 5600 என்று அவருடைய அரண்மனையின் போஜனசாலையில் வகைவகையாக அற்புதப் பட்சணங்கள் சமைக்கப்பட்டிருந்தன. அவ்வளவு பட்சணங்கள் செய்யப்பட்டிருந்தன – வாசனை ஊரையே தூக்கிக் கொண்டிருந்தது – கமகமத்துக் கொண்டிருந்தது அரண்மனை!

துரியோதனன் சொன்னார், “ஹே கிருஷ்ணா, நீங்கள் வெறும் பாண்டவர்களுடைய சாந்தி-தூதர் மாத்திரமில்லை – நீங்கள் என்னுடைய சம்பந்தி!”

(ஸ்ரீகிருஷ்ணருடைய புத்திரன் சாம்பனுடைய விவாஹம் துரியோதனனுடைய மகள் லக்ஷ்மணாவோடு ஆகியிருந்தது. துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய சொந்த சம்பந்தி! சம்பந்தியிலும் பெண்-வீட்டுக்காரரில்லை – மாப்பிள்ளை-வீட்டு சம்பந்தியாகிறார் கோவிந்தன்! பெண்-வீட்டுக்காரர் துரியோதனன்.)




WHO WAS A BETTER MACE FIGHTER?... - Mahabharat: Star Plus | Facebook

துரியோதனன் சொன்னார், “நீங்கள் உங்கள் சம்பந்தி-வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக வேண்டி, அருமையருமையான பட்சணப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனைக்கு வாருங்கள். வந்து, ஒரு பிடி பிடியுங்கள்.”

பகவான் சிரிக்க ஆரம்பித்து விட்டார், “துரியோதனா, இந்த சமயம், நான் சம்பந்தி-ரூபத்தில் வரவில்லை. நான் பாண்டவர்களுடைய சேவகனாகி வந்திருக்கிறேன்! அவர்களுடைய தூதனாகி வந்திருக்கிறேன்! இந்த சமயம், நான் சொந்தம் என்று ஆனந்தம் கொண்டாட வரவில்லை! நான் உங்களிடத்தில் போஜனம் செய்ய மாட்டேன்!”

“ஏன்? எங்களிடம் என்ன குறை வந்து விட்டது?”

“இரண்டு நிலைமைகளில், போஜனம் சாத்தியமாக முடியும்.”

“என்ன?”




Mahabharat - Watch Episode 3 - Duryodhan rejects Krishna's plans on Disney+ Hotstar

“ஒன்று – எனக்குள் பசி இருக்க வேண்டும் – அல்லது, உங்களுக்குள் பிரேமை இருக்க வேண்டும்! (ஒருவருக்கு பசியில்லையென்றாலும், மற்றவருடைய மனசில் அதிகம் பிரேமை இருந்தது என்றால், ஒரு வாய் – இரண்டு வாய் சாப்பிட்டுக் கொண்டு விடுகிறார்! பசியே இல்லையென்றாலும், சாப்பிட்டுக் கொண்டு விடுகிறார் – இல்லையானால், வீட்டுக்காரருக்கு மனசு கஷ்டமாக இருக்கும்!) உங்களிடமோ பிரேமையில்லை! எனக்குள் பசியில்லை! சொல்லுங்கள் – எப்படி நான் போஜனம் செய்வது?”

சங்கடத்தில் விழுந்திருக்கும் மனிதரும், எங்கேயும் போஜனம் செய்துக் கொண்டு விடுகிறார்! பிராணனைக் காப்பாற்ற போஜனம் செய்ய வேண்டியிருக்கிறதே!

பகவான் மஹாபாரதத்தில் சொல்கிறார்,

“என் மேல் எந்த நெருக்கடியுமில்லை! நான் ஏன் சாப்பிடுகிறேன் உங்களிடம்?”

கோவிந்தன் சாப்பிடவில்லை.

விதுரருடைய வீட்டுக்கு வந்து பகவான் உப்புசப்பில்லாத கீரை-மசியலைச் சாப்பிட்டார்!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!