Cinema Entertainment

நடிகை பானுமதி-6

தமிழில் ரத்னகுமார் படத்தில் பி. யூ. சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார். 1947இல் வெளிவந்த ரத்னமாலா திரைபடம் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். பின்னர் 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர்.

யாராக இருந்தாலும், நேருக்கு நேர் பேச வேண்டும். முதுகுக்கு பின் பேசுவது அவருக்கு பிடிக்காது. எதுவும் தனக்கு பிடித்திருந்தால் தான் செய்வார்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கலே தான். இவருக்கு அருகில் சென்று பேச, பெரிய நடிகர்களே தயங்குவர். அந்த அளவுக்கு, தைரியமான பெண்.

இந்த நிலையில்தான் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருடன் முதன் முதலாக  ஜோடி சேர்ந்தார். அதுவரை எம் ஜி ஆர் காணாத மிகபெரிய வெற்றியை அந்த படம் உருவக்கி தந்த காரணத்தால் பானுமதியுடன் நடித்த  ராசி என்ற வழக்கமான சென்டிமண்ட் எம் ஜி ஆருக்கும் பலித்துவிட்டதாக அன்றைய திரையுலகினால் கருதப்பட்டது . தொடர்ந்து சிவாஜி படங்களிலும் ஒப்பந்தம் ஆனார். இத்தனைக்கும் சிவாஜியை விட மூன்று வயது மூத்தவராக இருந்த போதும் சிவாஜி அவர்கள் பானுமதியுடன்,மக்கள் பெற்ற மகராசி, மணமகன் ,தெய்வம், அம்பிகாபதி, அறிவாளி  போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததிலிருந்தே அன்று பானுமதிக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சிவாஜி, எம்.ஜி.ஆர்  ஆகியோர் நாயகனாக நடிக்க வருவதற்கு முன்பே அவர் ஒரு சூப்பர் ஸ்டாரக  இருந்து ஸ்டூடியோ முதலாளியகாவும் ஆகிவிட்டதால் அவரிடம் இயல்பாகவே புதுமுக நாயகர்களான எம்.ஜி.அர், சிவாஜி ஆகியோரிடம் ஒரு அலட்சியம் இருந்தது




 திரையுலகில், எம்.ஜி.ஆர்., பெயரைச் சொல்லி, யாரும் கூப்பிட மாட்டார்கள்; ‘சின்னவர்’ என்றே அழைப்பர். ஆனால், பானுமதி அப்படியெல்லாம் இல்லை; ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்று தான் அழைப்பார்.  பெரும்பாலும், காலை நேர படப்பிடிப்புக்கு சிறிது தாமதமாக தான் வருவார்,




ஆனாலும் எம்.ஜி.ஆர் அவரோடு தொடர்ந்து ராஜா தேசிங்கு, மதுரை வீரன் மற்றும் அலிபாபவும் நாற்பது திருடர்களும் என தொடர்ந்து நடிக்க அனைத்துமே மிகபெரிய வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முதல் ராசி ஜோடி என பெயர் பெற்றது.

இந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆரின் கனவு திரைப்படமான நாடோடி மன்னன் படத்தை தயாரிக்க முன் வந்த போது பானுமதியை நாயகியாக ஒப்பந்தம் செய்தார். அவர் ஒப்பந்தம் செய்யும் போது படத்தின் இயக்குனராக ராம் நாத் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் உடல் நலகுறைவு காரணமாக படத்திலிருந்து விலக எம்.ஜி.ஆரே ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார்.

இதில் பானுமதிக்கு ஒப்பமில்லை. ஆனாலும் வெளிக்காட்டாமல் நடித்து வந்தார் .  ஒருநாள் எம்.ஜி.ஆர் பானுமதியிடம் ‘அம்மா, நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து விடுங்கள்…’ என்று,  கேட்டுக் கொண்டதால், அவருக்கு முன்னரே, வாகினி ஸ்டுடியோவுக்கு வந்து விட்டார்.

படப்பிடிப்பு துவங்கவில்லை. காரணம், படத்தின் இயக்குனர் மற்றும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்., வரவில்லை. வசன பேப்பரும் கைக்கு வரவில்லை.’எவ்வளவு நேரம் காத்திருப்பது, நான் வந்த தகவல் சொல்லி விட்டீர்களா…’ என்று, தயாரிப்பு நிர்வாகியை கேட்டதும், ‘சொல்லி விட்டேன்…’ என்றார்.




எம்.ஜி.ஆரின் கார் உள்ளே நுழைகிறது. காரை விட்டு இறங்கி, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தார். உட்கார்ந்திருந்த பானுமதி, ‘என்ன மிஸ்டர் ராமச்சந்திரன், என்னை சீக்கிரம் வரச்சொல்லிட்டு, நீங்க, ‘லேட்டா வர்றீங்க…. நடிப்புதானே உங்க தொழில்  ஒழுங்கா நடிக்கறதை விட்டு எதுக்கு டைரக்‌ஷன் அது இதுன்னு இழுத்து போடுகிட்டு எங்க டைமை வேஸ்ட் பண்றீங்க என காட்டமாக கேட்டுவிட்டார்.ஆனால் எம்.ஜி.ஆருக்கு அது பிடிக்கவில்லை. அவரால் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையில் பானுமதிக்கு எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த இயக்குனர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் எம்.ஜி.ஆர் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை இயக்கியுள்ளார்.




அதன் பிற்பாடு இந்த மோதல்  தமிழ் சினிமாவின் அடுத்த  நட்சத்திரமான சரோஜா தேவியின் வருகைகாகவே இயற்கையால் எழுதப்பட்ட திட்டமிட்ட திரைக்கதை போல் நடக்கும்போது யாரால் என்ன தடுக்க முடியும்.எம் ஜி ஆர் பானுமதியிடம் பதிலுக்கு கோபப்படாமல் தன் முதல் படம் என்பதால் சில சங்கடங்கள்  நிகழ்வதை தடுக்க முடியவில்லை என்றும்   உங்களால் முடியவிட்டால் பரவாயில்லை இப்படத்திலிருந்து விலகிக்கொள்லுங்கள் என சொல்ல  பானுமதியும் விலகிக்கொண்டார் . அதுவரை நடித்தமைக்கு பணம் செட்டில் பண்னிய கையொடு நாடோடி மன்னனின் திரைக்கதையில் பானுமதி பாத்திரம் இறந்துவிட்டதாக திருத்தி எழுதினார். இரண்டாம் பாகத்தில் ஒரு புதுமுக நாயகி அறிமுகம் ஆவதாக  எழுதியவர் அந்த நாயகியை தேடி அலைந்த வரலாறு தனிக்கதை

தொடர்ந்து தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி ஆதிக்கம் விஸ்வரூபமெடுக்க பானுமதி பிற்பாடு தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்ததுவங்கினார். ஆனாலும் அவ்வோது தமிழிலும் முக்கிய பாத்திரங்கலில் நடித்து வந்தார். இறுதியாக ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் அவர் நடித்த செம்பருத்தியில் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!