Cinema Entertainment

நடிகையர் திலகம் சாவித்திரி-13

நடிகர் திலகம சிவாஜி கணேசனிடம் பாராட்டுக்களை பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி, நல்ல நேரமாக இருந்தபோது பெரிய வரவேற்பையும், கெட்ட நேரம் வந்தபோது பலரிடம் அவப்பெயரையும் பெற்றதாக க்ளாசிக் சினிமா இயக்குனர் கலைஞானம் தெரிவித்துள்ளார்.




டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பேசியுள்ள அவர், 1964-ம் ஆண்டு ஏ,பி.நாகராஜ் இயக்கத்தில் சிவாஜி மற்றும் சாவித்ரி இணைந்து நடித்த படம் நவராத்திரி. இந்த படத்தில் நாடக காட்சி ஒன்றில், முதலில் சிவாஜி வேஷம்போட்டுக்கொண்டு வந்தேனே என்ற பாடலுடன் திரைக்கு பின்னால் இருந்து வெளியில் வருவார். அதேபோல் சாவித்ரியும், சிவாஜிக்க சமமமான நடிப்புடன் அதேமாதிரி மேடையில் தோன்றுவார்.

இந்த நாடகத்தில் சாவித்ரியின் நடிப்பை பார்த்த பிரமித்த சிவாஜி கணேசன் நாடகம் முடிந்த பின் சாவித்ரியை தட்டிக்கொடுத்து பாராட்டினார். பொதுவாக சிவாஜி சாதாரணமாக யாரையும் பாராட்டிவிட மாட்டார், அப்படி அவரே பாராட்டியுள்ளார் என்றால், சாவித்ரிக்கு திறமை இருந்ததால் தான் அவ்வாறு செய்துள்ளார். இப்படி நல்ல நிலையில் இருந்த சாவித்ரிக்கு ஒரு கட்டத்திற்கு நேரம் சரியில்லை.




நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து கரம் பிடித்தார். அவரது வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஜெமினி சணேசனின் முதல் மனைவி புஷ்பவள்ளி. அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ரேகா என்ற மகள் உள்ளார். அதன்பிறகு ஜெமினி கணேசனுக்கு அவரது சொந்தத்தில் ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதிலும் அவருக்கு குழந்தைகள் இருக்கிறது.

இந்த இரு திருமணம் குறித்தும் சாவித்ரிக்கு தெரியும். ஆனாலும் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் மோகத்தால் சாவித்ரி விழுந்துவிட்டார். இந்த மோகத்தின் காரணமாக ஜெமினி கணேசனுக்கு எத்தனை மனைவி எத்தனை பிள்ளைகள் என்று சித்திக்காமல் அவரை திருமணம் செய்துகொண்டார். நடிகையர் திகலம் என்ற நடிகை சற்றும் சிந்திக்காமல் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டார்.




அன்றைக்கு சென்னையில் பெரிய வீடு கட்டியதும், வீட்டிற்குள் நீச்சல் குளம் வைத்து கட்டியதும் சாவித்ரி ஒருவர் மட்டும் தான். அதேபோல் தங்கத்தின் முதன் முதலாக கொளுசு போட்டவரும் அவர் தான். அதேபோல் சாவித்ரி வீட்டில் வாரம் இருமுறை விருந்து நடக்கும். ஜெமினி கணேசன் தனது நண்பர்கள் என பலரையும் அழைத்து மதுவிருந்து விடிவிடிய நடத்துவார். இதற்காக அப்போதே ஒரு நாளைக்கு ரூ50 முதல் 60 ஆயிரம் வரை செலவாகும். இவை அனைத்தும் சாவித்ரி செலவுதான். இந்த விருந்தில் அனைவரும் குடிக்கும்போது சாவித்ரியும் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சாவித்ரிக்கு பட வாய்ப்பு குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக சொந்தப்படம் எடுக்கும் முடிவுக்கு வருகிறார். ப்ராப்தம் என்ற படத்தை தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்து அவரே இயக்கவும் செய்கிறார். சிவாஜி தான் இந்த படத்தின் நாயகன். ஆனால இந்த படம் தோல்வியை தழுவி சாவித்ரியின் வாழ்க்கையை சீர்குலைத்துவிட்டது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!