health benefits News Samayalarai

குளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்களை பார்க்கலாமா?

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அனைவரும் சூடான உணவுகளை விரும்பு சாப்பிடுவோம். குறிப்பாகச் சூப் வகைகள் மிகவும் உகந்தவை. குளிர்காலத்திற்கான டாப் 5 சூப் வகைகளை இந்தப் பதிவில் காணலாம்.

குளிர்காலத்தில் சூடான டீ, காஃபி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக புத்துணர்ச்சியை தருபவை சூப் வகைகள். சூப்பை கண்டவுடனேயே நாம் சுறுசுறுப்படைய போகிறோம் என்ற மனநிலைக்கு வந்து விடுவோம். காய்கறி சூப், தக்காளி சூப், மட்டன் சூப் எனக் குளிர்காலத்தில் புத்துணர்ச்சி பெறுவதற்கு ஏராளமான சூப் வகைகள் உள்ளன. சூப் வகைகள் பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.




 

தக்காளி சூப் :

தக்காளி சூப் என்பது அனைவரும் விரும்பிப் பருகக்கூடிய பிரபலமான சூப் வகைகளில் ஒன்றாகும். இதன் தயாரிப்புக்குத் தரமான தக்காளிகள், வெங்காயங்கள், பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு போதுமானவை. இதனுடன் சேர்க்கப்படும் கிரீம், கடுகு மற்றும் பீட்ஸாவுக்கு பயன்படுத்தப்படும் ஓரிகனோ தக்காளி சூப்பிற்கு தனி சுவையைத் தரும்.




சிக்கன் சூப் :

சிக்கன் சூப்பை ஊட்டச்சத்துகளின் களஞ்சியம் என்று அழைக்கலாம். நீங்கள் அசைவப் பிரியர் என்றால் இந்தச் சூப்பை விரும்பிப் பருகுவீர்கள். இதன் தயாரிப்புக்குச் சிக்கன், காய்கறிகள், உறைந்த சோளம் மற்றும் பட்டாணி போதுமானவை. இவற்றை அனைத்தையும் பிளெண்டரில் போட்டுக் கலந்த பிறகு சிறிது எலுமிச்சைசாறை சேர்க்கவும்.

சிக்கன் டார்ட்டில்லா சூப் :

அசைவப் பிரியர்களுக்கு இந்தச் சிக்கன் டார்ட்டில்லா சூப் மிகுந்த மகிழ்ச்சியை தரும். குறிப்பாக இந்தச் சூப் புரதம் நிறைந்ததாகும். இதைப் பருகுவதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உடலுக்குக் கிடைக்கும். சிக்கன் டார்ட்டில்லா சூப் தயாரிப்புக்குச் சிக்கன் துண்டுகள், சில்லி பீன்ஸ் மற்றும் டார்ட்டில்லா சிப்ஸ் தேவைப்படும். இறுதியாக இவை அனைத்தையும் ஒரு ஜாரில் போட்டுக் கலந்தால் உங்களுக்கான ஆரோக்கியமான சிற்றுண்டி ரெடி.




ப்ரோக்கோலி சூப் :

இயல்பாக ப்ரோக்கோலி ருசிக்காது, ஆனால் சூப் தயாரிப்புக்குப் பயன்படுத்தும்போது அற்புதமான சுவையைத் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் இந்தச் சூப்பை தவறாமல் பருக வேண்டும். ப்ரோக்கோலி சூப் தயாரிக்க கொழுப்பு நீக்கப்பட்ட பால், ப்ரோக்கோலி, குழம்பு, சாஸ் மற்றும் பூண்டு தேவைப்படும்.

காய்கறி சூப் :

இரவு நேரத்தில் சாலட் சாப்பிட்டு உங்களுக்குப் போர் அடித்து விட்டது என்றால், அதற்கான சிறந்த மாற்றாகக் காய்கறி சூப் இருக்கும். பிடித்தமான காய்கறிகள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டுக் கலந்த பின்னர் தண்ணீரில் கொதிக்க விட்டுத் தேவையான மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களைச் சேர்த்திடுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!