தோட்டக் கலை

கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் இந்த திசையில் வைத்தால் பணப்பிரச்சனை எதுவும் ஏற்படாது

கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாகும். மேலும் இது உலகளவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகையும் கூட. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டில் முன் நட்சத்திரங்களை தொங்க விடுவதோடு, வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, பலவண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.




இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைப்பது மிகவும் மங்களரமானது மற்றும் இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கச் செய்கிறது. இதனால் வீட்டில் சந்தோஷமும், அமைதியும் நிலைத்திருக்கும்.

அதே வேளையில் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைப்பதால், அந்த வீட்டின் வாஸ்து தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்துமல் மரம் ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இதை வீட்டில் வைத்து குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அலங்கரிக்கும் போது, குடும்ப உறுப்பினர்களிடையே எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.




எந்த திசையில் வைக்க வேண்டும்? கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றன. அதுவும் இந்த மரத்தை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். முக்கியமாக கிறிஸ்துமஸ் மரம் முக்கோண வடிவில் இருக்க வேண்டும். வாஸ்துப்படி முக்கோண வடிவம் நெருப்பின் வடிவமாக கருதப்படுகிறது.

எங்கு வைக்கக்கூடாது? ஃபெங் சூயி படி, கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் தெற்கு பகுதியில் வைக்கக்கூடாது. ஏனெனில் வீட்டில் தெற்கு பகுதியில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தால், வீட்டில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் தான் கிடைக்கும்.

 




மெழுகுவர்த்தி ஏற்றவும் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைத்தால், அந்த மரத்தைச் சுற்றி மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்படி மெழுகுவர்த்தி ஏற்றும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதுவும் வண்ணமணமான மற்றும் நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஏற்றினால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.

வேறு எந்த பொருட்களால் அலங்கரிக்க வேண்டும்? கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள் மற்றும் ரிப்பன்களால் அலங்கரிக்கப்படுவதோடு, மணிகளும் ஆங்காங்கு தொங்கவிடப்படுவதுண்டு. ஃபெங் சூயி படி, மணியில் இருந்து வரும் ஒலியானது நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். அப்படிப்பட்ட மணியை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டும் போது, வீட்டினுள் அது எழுப்பும் ஒலியால், வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். இது தவிர கிறிஸ்துமஸ் மரத்தில் சிவப்பு ரிப்பனில் 2 நாணயங்களைக் கட்டி தொங்கவிட்டால், அந்த வீட்டில் பணப்பிரச்சனை எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!