Entertainment Serial Stories கடல் காற்று

கடல் காற்று-17

( 17)

” செண்பகமும் , கருணாமூர்த்தியும் நல்லவர்களில்லை .அவர்களோடான உன் தொடர்பை முழுதுமாக முறித்துக் கொள்வதே உன் எதிர்காலத்திற்கு நல்லது ” ஈரப்பசை சற்றுமின்றி வெட்டுக் கத்தியென வந்து விழுந்தன வார்த்தைகள.

“உத்தமன் யாரோ அவன் கல்லெறியுங்கள்  ன்னு சொன்னார் ஏசுநாதர் “பயமின்றி அவன் கண்களை உறுத்தபடி கூறினாள் .

கண்களை இறுக மூடி திறந்தான் யோகன் .” நிச்சயம் நான் நல்லவனில்லை சமுத்ரா .எனக்கு சில ஆகாத பழக்கங்கள் கூட உண்டு .ஆதாரத்தோடு நீயே பார்த்திருக்கிறாய் .” அன்று அந்த ஒரு மாதிரி பெண்ணோடு ஹோட்டலில் பார்த்ததை குறிப்பிடுகிறான் என  உணர்ந்தாள் .

” ஆனால் அது எதையும் மறைத்து நான் நல்லவன் வேடம் போடவில்லை .முக்காட்டிற்குள் தவறு செய்யும் அவசியம் எனக்கில்லை .என் பாதை இதுதான் .தடையின்றி போய் கொண்டேயிருப்பேன் “

“ஆமாமா  சாவித்திரி கூப்பிடுகிறாள் போகிறேன் என அப்பா , அம்மா , அக்காவிடமே சொல்லி விட்டு செல்லும் தைரியசாலியாயிற்றே ” நக்கலாக கூறினாள் .

” என்னை கட்டுப்படுத்தும் யோக்யதை இந்த வீட்டில் யாருக்கும் இல்லை ” சீறினான் .

” என்னடா இது வானத்து தேவர்களெல்லாம் மனமுவந்து கீழிறங்கி வந்து அறிவுரை மழை பொழிகிறார்கள் ” கைகளை நெற்றிக்கு மேலே வைத்து வானில் தேடுவது போல் பாவனை செய்தாள் சமுத்ரா .

அவன் பற்களை இறுக கடித்து கோபத்தை அடக்குவது நன்கு தெரிந்த்து .” நல்லவனென்ற போர்வையில் வேடமிடுபவர்கள் மிகவும் அபாயமானவர்கள் சமுத்ரா .அதனால் நீ அந்த கருணாமூர்த்தி , செண்பகத்தை முற்றிலும் ஒதுக்க வேண்டும் ” விடாது பொறுமையாக எடுத்துரைக்க

ஆட்டி பேசிய அவன் கைகளில் அவளுடைய போன் இருந்த்து .கோபத்தில் அதனை அவனிடமே விட்டு வந்திருந்தாள். எட்டி அவன் கையிலிருந்து அதனை பிடுங்கினாள் .

போனை ஆன் செய்து அழைக்கவே கூடாது என நினைத்திருந்த செண்பகத்தை தானே அழைத்தாள் .” அத்தை எப்படி இருக்கீங்க ? …கொஞ்சம் பிஸி அதுதான் போன் பண்ண முடியலை .அதான் இப்போ பேசிட்டேனே ” அக்கறையாக பேசியபடி அவனை கவனிக்க அவன் வெறுமை பார்வையோடு பாக்கெட்டிலிருந்து சிகரெட் எடுத்து பற்ற வைத்தான் .

” சொல்லுங்க …சொல்லுங்க …நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் …” என்றபடி அவனை அலட்சியம் செய்து வீட்டினுள் நடந்தாள் .

தனது அறைக்குள் நுழைந்து செண்பகத்தின் வளவளாக்களுக்கெல்லாம் ‘ உம் ‘ கொட்டிவிட்டு , போனை அணைத்து எறிந்துவிட்டு , கட டிலில் படுத்து கண் மூடிக்கொண்டாள் .




” ஐந்து நிமிடம் கூட இங்கே இருக்க கூடாது. இப்போ நீயா வெளியில் போகவில்லையென்றால் நானே கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டி வரும் ” யோகேஷ்வரன் குரல்தான்  கோவில் மணியென சமுத்ராவின் மூளைக்குள் மோதியது .

இதென்ன இப்படி திடீரென வெளியே போக சொல்கிறான் யோசித்தபடி கண்களை கஷ்டப்பட்டு விரிக்க முயற்சித்தாள் .இரவு ரொம்ப நேரம் தூக்கமே வரலையே அதான் இப்போ எழுந்திரிக்கவே முடியவில்லை என எண்ணும்போதே ” வேண்டாம் தம்பி ் விட்டுவிடு …” எனும் செல்வமணியின் குரல். கேட்டது .

இவர்களா …? தம்பி வெளியே போக சொன்னால் வேகமாக என் பெட்டியை எடுத்து வீசுவார்களே …இவர்களெப்படி வேண்டாமென்கிறார்கள் ….குழப்பத்தோடு ஒட்டிக் கிடந்த இமைகளை விரித்து விட்டு தலையை உதறினாள் .

விழித்த விழிகளில் தெரிந்த மேற்கூரை கண்டது கனவென்றது .ஆனால் குரல்கள் கேட்டதே ….இதோ இப்போது கூட கேட்கிறதே…..அவசரமாக எழுந்து அறைக்கதவை திறந்து வந்தாள் .

கண்ணீரோடு நின்றிருந்தாள் செல்வமணி…. இந்த அம்மா தான் கண்ணீர் விடுவாரா ? அடுத்தவரையல்லவா கண்ணீர் வடிக்க வைப்பார் .ஏளனமாக நினைத்தபடி திரும்பிய போது அவள் கண்ணீருக்கான காரணம் எதிரில் நிதானமின்றி தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்த்து .அவள் கணவன் …பாதங்களை தரையில் ஊன்றவே முடியவில்லை அவனால் …அவ்வளவு போதை .

அவனைத்தான் வெளியே போகுமாறு விரட்டிக் கொண்டிருந்தான் யோகேஷ்வரன் .முகம் முழுவதும் அருவருப்பு நிறைந்திருந்த்து அவனுக்கு .அட்டா ….ஒரு புத்தர் பிரான் ….ஒரு ஏசு பிரானை விரட்டுகிற விநோத த்தை பாருங்களேன் என கிண்டலித்தபடி அவர்களை கவனித்தாள் சமுத்ரா .

” நான் …ஏன் போக வேண்டும் ..? எனக்கு உரிமை இருக்கிறது …..” தடுமாற்றத்துடன் மார் தட்டியபடி அங்கிருந்த ஊஞ்சலில் ஏறி அமர முயன்றான் அவன் .

” உரிமையா ? …உனக்கா ….?” யோகன் பற்களை கடித்த வேகத்தில் அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான் .

” என்னங்க ….” பதறி  ஓடி வந்தாள் செல்வமணி .

” செல்லா ….” திரும்பி அவளை யோகன் முறைக்க அப்படியே நின்று அவஸ்தையுடன் கைகளை பிசையலானாள் அவள் .” உள்ளே …படுக்க வைக்கலாம்னு ….” திக்கி வந்தன அவள் வார்த்தைகள் .

” சீச்சி இது இரவில் பெண்கள் மட்டுமாக இருக்குமிடம் இங்கே இது போன்ற ஆண்களுக்கு அனுமதியில்லை .”
டிரைவரை அழைத்தவன் , ” இந்தாளை அவுட்ஹவுசில் ” கொண்டு போய் போடுங்கள் .” உத்தரவிட்டான் .

கீழே விழுந்து எழ மாட்டாது ஏதேதோ உளறியபடி இருந்த சாமியப்பனை , டிரைவரும் , கணக்குபிள்ளையுமாக சேர்ந்து தூக்கி போனார்கள்.

” தெளிந்ததும் தானாக எழுந்து போகட்டும் .நீ அதற்குள் போய் எதுவும் பதி சேவை செய்ய வேண்டாம் ” சகோதரியை உறுதியாக எச்சரித்தான் .கண்ணீரை அடக்கி தலையாட்டினாள் அவள் .

அன்றைய காலை உணவு ஒரு விதமான அமைதியுடனேயே கழிந்தது.தம்பிக்கு பயந்து  தண்ணீரை  ஊற்றி உணவை விழுங்கிக கொண்டிருந்தாள் செல்வமணி .சிறு அவஸ்தையுடன் சற்று தள்ளி நின்றிருந்தாள் புவனாதேவி .யோகனுடன் பேச விரும்புவது அவள் கண்களில் தெரிந்த்து .அதை உணர்ந்தும் யோகன் அவளை அலட்சியப்படுத்தி தட்டில் கவனமாயிருந்தான் .நகர்த்தும் பாத்திரங்களின் ஓசை கூட இல்லாது ஜாக்கிரதையாக பறிமாறிக்கொண்டிருந்தாள் மேகலா .

” இன்று எந்த பகுதிக்கு போக போகிறாய் ? ” வெண்ணை நுழையும் கத்தியாய் அவன் கேள்வி சமுத்ராவிற்கு .

சொல்லமுடியாது என்று சொல்லிவிடத்தான் ஆசை சமுத்ராவிற்கு .ஆனால் அவள் நிலைமை சரியில்லையே ….

” ஆசிரியர் ஆந்திர மீனவர்கள் பற்றி விசாரிக்க சொன்னார் ” தண்ணீர் டம்ளர் விளிம்பை  வரைந்தபடி பதிலளித்தாள் .

” ம் ….நான் சொல்லும் இடத்தில் இறங்கிக் கொண்டு காரை இன்று திருப்பி அனுப்பி விடு .துணைக்கு  யாராவது பெண்ணை வரச் சொல்கிறேன் “

சரியென தலையசைத்து நிமிர்ந்த போது அவன் பார்வை தன் முகத்திலேயே நிலைத்திருக்க கண்டாள் .” கண்ணில் படும்  கண்ட  கழுதைகளிடம் பேசுவதை தவிர்த்துவிடு ….” கிட்டதட்ட உத்தரவு குரலில் …

இது அமல்ராஜ் குறித்த எச்சரிக்கையென உணர்ந்து , ” என்னைப் பார்த்து கொள்ள எனக்கு தெரியும் ” வெடு வெடுத்தாள்.

” நீ வானத்தையே பார்த்து நடக்கிறவளாச்சே …” நேற்று அவள் வானத்து தேவர்களை தேடிய பாவனையை கிண்டல் செய்கிறான் .

பதில் பேச அவள் வாயை திறக்குமுன் ” கொஞ்சம தரையையும் பார்த்து நடந்தால் அங்கிருக்கும் அசிங்கங்களும் கண்ணில் தட்டுபடும் .காலை சுத்தமாக வைத்து கொள்ளலாம் பார் .அதற்கு சொன்னேன் ” சாதாரண அறிவுரை போல் தோன றுமாறு பொடி வைத்து பேசிவிட்டு சாப்பிட்ட தனது தட்டை எடுத்து கொண்டு எழுந்தான் .

யோகனிடம் இருந்த சில நல்ல பழக்கங்களுல் இதுவும் ஒன்று .தான் உண்ட தட்டை , பருகிய தம்ளர்களை தானே எடுத்து விடுவான் .சமுத்ரா சந்தித்த ஆண்களில் பெரும்பாலோர் அவ்வாறு செய்வதை அசிங்கமாக கருதினர் .கருணாமூர்த்தி , தனசேகரனெல்லாம் தட்டிலேயே கையை கழுவும் ரகம் .மலையரசனை அவள் அண்ணா இது கெட்ட பழக்கம்னா என சொல்லி சொல்லி எழுந்து சென்று கை கழுவ வைத்திருந்தாள் .அப்போதும் அவன் தட்டு அங்கேயேதான் கிடக்கும் .இப்போது யோகன் ….

தன் போக்கில் எண்ணங்களை ஓட விட்டு விட்டு …ஆமா இவன் பெரிய உத்தமன்னு இவனை பற்றி நினைக்கிறேன் பார் …தலையை உலுக்கிக் கொண்டாள் .

கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது புவனா , யோகன் முன் தயங்கியபடி நிற்பது தெரிந்தது.

” என்ன ….?” எவ்வளவு  கோபம் குரலில் …

” அப்பாவ இன்னக்கி ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகனும் ..”

” சமுத்ரா இறங்கியதும் காரை திருப்பி அனுப்புவாள் ….” நடந்தபடி கூறியவன் இன்னும் புவனா அங்கேயே நிற்பதை உணர்ந்து நின்று திரும்பி புருவங்களை நெரித்தான் .

” வ…வந்து …அ…அவர்..என்ன இருந்தாலும் இந்த வீட்டு மாப்பிள்ளை அவரை ….” திணறினாள் .

” ஏய் …வேலு ..உனக்கு கொடுத்திருக்கிற வேலையை மட்டும் செய் .என் விசயத்தில் தலையிட்டால் இருக்கிற இடத்திற்கும் ஆபத்து வந்திடும் .” வாசலில் கூடைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் அந்த ஆளை பார்த்து திடீரென கத்தினான் .ஒன்றும் புரியாமல்  அந்த ஆள் தலையை ஆட்ட தொங்கிய முகத்துடன் உள்ளே திரும்பினாள் புவனா .

இந்நம்மா நிலைமையே இங்கே ஊசலாடுகிறதே ..பிறகு ஏன் என்னிடம்  அப்படி பேச வேண்டும் குழம்பினாள் சமுத்ரா .வாசலில் இறங்கி காரை  நோக்கி நடந்தாள் .

” எதுவும்  தேவெயென்றால் என் நம்பர் உன்னிடம் இருக்கிறதல்லவா …? அதற்கு ….”

” கூப்பிட மாட்டேன் ….” அவன் புறமே திரும்பாமல் பதலளித்தபடியே நடந்தாள் .தோள்களை அலட்சியமாக குலுக்கிக் கொண்டு ஜீப்பிலேறி அவளுக்கு முன் வெளியேறிவிட்டான் அவன் .




” நாங்களெல்லாம் கடல் பழல்குடிகள் தாயி ” தலையில் கட்டியிருந்த தலைப்பாகை அவிழ்த்து முகம் துடைத்தபடி பேசனார் அப்பெரியவர் .

” உசுருக்கு சவாலான தொழிலு இது .இதுக்கு ஆதரவு கொடுக்கலைன்னாலும் அரசாங்கம் ஆணிவேரையாவது பிடுங்காமல் இருக்கலாம் .மீன் பிடிக்க தடை போட்டால் நாங்க எங்க போவோம் தாயி “

” ஆனால் இனப்பெருக்கத்திற்கு வழியில்லாமல் நீங்கள் எல்லா மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறீர்கள் என்றுதானே அரசாங்கம் மீன்பிடி தடைக்காலம் என்று ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது “

” ம் …சரித்தான் …ஆனாக்க அதுக்கு பதிலாக இந்த இரட்டை மடி வலை முறையை எடுக்கலாமே …?பெரிய பெரிய போட்டை கொண்டுட்டு போயி மீன்களை கலைப்பதை நிறுத்தலாமே …? குஞ்சுகளை கூட விடாமல் அள்ளிட்டு போற பெரிய முதலாளிங்களை கண்டிக்கலாமே …?” இன்னொரு மீனவர் ஆவேசமாகிறார் .

இதற்கான பதில் சமுத்ராவிடம் இல்லை .மௌனமாகிறாள் அவள் .

” செய்ய மாட்டாங்க …ஏன்னா அந்த பணக்காரங்க அரசாங்கத்துக்கு முக்கியம் .அதனால எங்க வவுத்துல அடிக்கறாங்க ” குமுறுகின்றனர் .சிலர் கண்களில் நீரே துளிர்த்து விட்டது .

” சாப்பிட்டு வருகிறேன் …” அவர்களிடம் விடை பெற்று நடந்தாள் .அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் கையாலாகாமல் இருக்கிறோமே என்ற வருத்தத்துடன் இருளாயி வீட்டை நோக்கி  நடந்தாள் .

அன்று அவளுடன் இருக்கும்படி இருளாயியைத்தான் பணித்திருந்தான் யோகன் .அவள் வீடுதான் சமுத்ரா பேட்டி எடுக்க வந்த இடத்திற்கு அருகில் இருந்த்து வரும்போதே மிக சோர்வாகவே வந்தாள் இருளாயி .உடல்நலம் சரியில்லையென்றாள் .போய் ஓய்வெடுக்க சொன்னால் ் விடாமல் அவள் பின்னேயே வந்து கொண்டிருந்தாள் .அவள் முதலாளி கூறிவிட்டானாம் …

” இருளாயி எனக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது .நீ இப்போது உனது வீட்டிற்கு போய் எனக்காக சமைத்து வைப்பாயாம் .உன் ஸ்பெசல் நெத்திலி மீன் கருவாட்டு குழம்பு வைத்து வைப்பாயாம் .நான் என் வேலை முடித்து வந்து சாப்பிடுவேனாம் .” ஏதேதோ பேசி கஷ்டப்பட்டுத்தான் அவளை அனுப்பியிருந்தாள் .அப்படியாவது இந்த வெயிலின்றி  வீட்டில் சற்று ரெஸ்ட் எடுக்கட்டிமென நினைத்தாள் .

இவளென்ன எனக்கு காவலா …? இல்லை என்னை வேவு பார்க்கிறானா ? இருக்கட்டும் இன்று முகத்திலடத்தாற் போல் அவனிடமே கேட்கிறேன் .மனதிற்குள் யோகனுடன் சண்டையிட்டபடி வீட்டினுள் நுழைந்தவள் அதிர்ந்தாள் .

அங்கே தரையில் படுத்தபடி புழுவாக துடித்துக் கொண்டிருந்தாள் இருளாயி .

” என்னம்மா ? என்னாச்சு ….? ” பதட்டத்துடன் அவள் கைகளை பிடித்தாள்.

” வ…வயறும்மா …ரொம்ப …வலிக்குது …தாங்க முடியலை …” அப்படியே  தரையில் உருண்டவளை தாங்கி பிடித்தாள் .முடியவில்லை .உடம்பை முறுக்கி உருண்டாள் அவள் .வாசலில் வந்து எட்டி பார்த்தாள் .யாரையும் காணவில்லை .

என்ன செய்ய …? பதட்டமாக உள்ளே வந்தவள் பதறினாள் .உள்ளே தரை முழுவதும் ரத்த திட்டுகள் .குருதியில் நிறம் மாறக் கொண்டிருந்த்து இருளாயி சேலை .

அவசரமாக போனை எடுத்தாள் .விரல்கள் தானே யோகனின் நம்பரை அழுத்தியது .எடுத்தவுடனேயே  ” எங்கிருக்கிறாய் …?” என்றான் .

” இருளாயி வீட்டில் ….அவளுக்கு “

” உடனே வருகிறேன் ….” பத்து நிமிடத்தில் யோகனின் ஜீப் வாசலில் நின்றது .

அவனுக்கு இன்று சென்னையல்  வேலையென்று  அறிவாள் .அத்ற்குள் இங்கெப்படி ….

” இங்கே ஒரு அவசர வேலை வந்து விட்டது .அதனால் லேட்டாகவட்டது ….அவளது கேள்வி பார்வைக்கு பதலளித்தபடி உள்ளே வந்தவன் ஐயோ வென அதிர்ந்தான் இருளாயியை பார்த்து….

” அந்த பக்கம் பிடி சமுத்ரா …சென்னைக்கே கொண்டு போய் விடலாம் ” இருருமாக இருளாயியை தூக்கிக் கெண்டு  கிளம்பினர் .

 




 

What’s your Reaction?
+1
10
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!