Entertainment News

இந்தியாவின் அமைதியான நகரமாக அறியப்படும் ‘ஐஸ்வால்’: என்ன காரணம்?

இந்தியாவில் பணக்கார நகரம், குல்ஃபி நகரம், மாந்திரீக நகரம் என பல தனித்துவமான நகரங்கள் இருக்கின்றன.

அந்த வரிசையில் இந்தியாவின் அமைதியான நகரமாக கருதப்படும் ஐஸ்வால் பற்றி தான் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மிசோரமின் தலைநகரான ஐஸ்வால், இந்தியாவின் மற்ற முக்கிய தலைநகரங்களுடன் ஒப்பிடும் போது இந்த தனித்துவத்தை பெறுகிறது. இந்தியாவின் ஒரே அமைதியான நகரம் என ஐஸ்வால் கருதப்படுவது ஏன்?

வழக்கமாக பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்நாளில் பாதியை நகரப் போக்குவரத்தைச் சமாளிப்பது போல் உணர்கிறார்கள். முந்திச் செல்வது, ஹார்ன் அடித்து எரிச்சலூட்டுவது, சாலை விதியை மதிக்காதது என அன்றாடம் போக்குவரத்து நெரிசலை கடப்பது ஒரு கடினமான சவாலாக உள்ளது.




ஆனால் ஐஸ்வால் நகரத்தில் அன்றாட போக்குவரத்து நெரிசலில் பாதையை பராமரிப்பது, ஒருவரையொருவர் முந்திச் செல்லாமல் இருப்பது, ஹார்ன் அடிக்காமல் இருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் மரியாதையுடன் நடந்துகொள்வது என பீக் ஹவர்ஸில் கூட மக்கள் இதனை கடைப்பிடிக்கிறார்களாம்!

ஐஸ்வாலில் உள்ள இடது பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி கோடுகள் உள்ளன. இடது மற்றும் வலது பாதைகளை பிரிக்க பெரிய டிவைடர்கள் கூட இல்லை. வெள்ளை கோடு மட்டுமே உள்ளது ஆனாலும் அதனை சரியாக மதித்து வாகன ஓட்டிகள் பின்பற்றுகிறார்கள்.




ஒருவர் அவசரப்பட்டு, முன்னால் செல்லும் வாகனத்தைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முன்னால் செல்லும் வாகனத்திற்குத் தெரியப்படுத்துவதற்காக, சிறிது சிக்கனல் கொடுப்பது வழக்கம். இந்த வகையான சைகைக்கு ஈடாக வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர்.

இடைவிடாமல் மற்றும் வேகமாக மற்ற வாகனங்களை முந்திச் செல்வது ஒரு சங்கடமான செயல் என்று அவர்கள் பொதுவாக உணர்கிறார்கள்.

ஐஸ்வாலில் அமைதி என்பது சத்தம் இல்லாதது மட்டுமல்ல; இது நகரத்தின் தனித்துவமான கலாச்சார மற்றும் சமூக நெறிமுறைகளின் பிரதிபலிப்பாகும்.

இது நிச்சயமாக ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்!




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!