Cinema Entertainment விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் விதார்த். தற்போது கதாநாயகன் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இருக்கப்பற்று படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து விதார்த் நடிப்பில் தற்போது ஆயிரம் பொற்காசுகள் படம் நேற்று  வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் விதார்த் மற்றும் சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் அருந்ததி நாயர், வணக்கம் கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிவல் ராஜா, பவன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோஹன் சிவனேஷ் இந்த படத்திற்கு இசையமைக்க ராமலிங்கம் தயாரித்துள்ளார்.

Aayiram Porkaasukal Movie Review in Tamil Vidharth Saravanan | ஆயிரம் பொற்காசுகள் படம் எப்படி இருக்கு திரை விமர்சனம் | Movies News in Tamil




கதை:

ஒரு சிறிய கிராமத்தில் சரவணன் எந்த வேலைக்கும் போகாமல் அரசின் இலவச அரிசியை வாங்கி கொண்டு பக்கத்து வீட்டில் சுற்றி திரியும் கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.  இவருடைய அக்கா பையனான விதார்த் சில நாட்கள் அவருடன் அந்த ஊரில் தங்கும் நிலை ஏற்படுகிறது. மத்திய அரசின் இலவச கழிப்பறை திட்டம் அந்த ஊருக்கு வருகிறது. சரவணன் மற்றும் விதார்த் அவரது வீட்டில் கழிப்பறைக்காக குழி தோண்டும் போது ஆயிரம் பொற்காசுகள் அவர்களுக்கு கிடைக்கிறது. இதனை ஜார்ஜ் மரியான், சரவணன், விதார்த் மூன்று பேரும் பங்கு போட திட்டமிடுகின்றனர்.  ஆனால் இந்த விஷயம் ஊரில் உள்ள ஒவ்வொருவருக்காக தெரிய வருகிறது, இறுதியில் அந்த ஆயிரம் பொற்காசுகளும் யார் கையில் சென்று சேர்ந்தது என்பதே படத்தின் கதை.

சுவாஸ்யமான திரைக்கதை கொண்ட இந்த படத்தை ஏவி முருகையா எழுதி இயக்கி உள்ளார்.  இந்த படம் ஒரு எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. விதார்த் மற்றும் சரவணன் ஒரு கிராமத்து மக்களாக எந்தவித பில்டப்புகளும் இல்லாமல் நடித்துள்ளனர்.  குறிப்பாக பருத்தி வீரன் படத்திற்கு பிறகு சரவணனுக்கு இந்த படம் ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது.

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் – Full On Cinema

விதார்த் வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பை படம் முழுக்க கொடுத்துள்ளார்.  இவர்களைத் தாண்டி ஜார்ஜ் மரியான்,  வணக்கம் கந்தசாமி, பாரதி கண்ணன் போன்றவர்களும் படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களது காமெடிகளும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.




ஆயிரம் பொற்காசுகள் படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் ஒன்று சேரும் இடம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வயிறு குலுங்க ரசிகர்கள் சிரிக்கின்றனர்.

படம் முழுக்க ஆங்காங்கே வரும் சின்ன சின்ன ட்விஸ்டுகளும் நன்றாக இருந்தது.  கேமரா மேன் பானு முருகன், இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷ், எடிட்டர் ராம் & சதீஷ் அவர்களது வேலையை சிறப்பாக கையாண்டுள்ளனர்.

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல பணத்திற்காக அனைவரும் என்ன என்ன செய்வார்கள் என்று நகைச்சுவையான கதையை கூறி உள்ளார் இயக்குனர்.  ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் ஏன் இப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை, அதை மட்டும் சற்று மாற்றி அமைத்து இருக்கலாம்.  அதேபோல படத்தில் பலர் புதிய முகங்களாக இருப்பதால் அவர்களுக்கு நடிப்பதில் சிரமம் உள்ளது.  மேலும் சில லாஜிக் மீறல்களும் உள்ளன.  குடும்பத்துடன் நிச்சயம் பார்க்க கூடிய படம் ஆயிரம் பொற்காசுகள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!