Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Bigg Boss Tamil 7: ஜோவிகாவை மூஞ்சிக்கு நேராக வச்சு செய்த அனன்யா

பிக் பாஸ் தமிழில் தினமும் மார்னிங் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ( நவ. 30) மார்னிங் டாஸ்க்காக இந்த வீட்டில் நீங்கள் யாராக இருக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? என சொல்ல வேண்டும் என்றார்.

அப்போது ஜோவிகாவாக தான் மாற வேண்டும் என அனன்யா கூறினார். அதற்கு விளக்கம் கொடுத்த அனன்யா, “ எனக்கு மார்னிங் எழுந்து இருக்கும் பழக்கம் பிடிக்காது. முன்பு எழுந்துவிடுவேன்.

Jovika Vijaykumar Wikipedia, Age, Biography, Net Worth - Aitechtonic

ஆனால் இப்போது பிடிக்கவில்லை. நான் ஜோவிகாவாக இருந்தால் இந்த வீட்டில் தூங்கி கொண்டே இருக்கலாம். ஏனென்றால் அவர் காலையில் பாடல் போட்டு முடிந்தும் 10 நிமிடம் வரை தூங்குவார். அதனால் ஜோவிகாவாக நான் மாற விரும்புகிறேன் “ என்றார்.




பிக் பாஸ் 7 ஆவது சீசன் வீட்டில் மிகவும் இளம் வயது போட்டியாளர் என்றால் அது ஜோவிகா தான். வனிதா விஜயகுமாரின் மகளான இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த நிகழ்ச்சியொல் கலந்து கொண்டு இருக்கிறார்.டாஸ் விளையாடி வெற்றி பெறுகிறோமோ இல்லையோ பிக் பாஸ் வீட்டின் போட்டியாளருக்கு வகை, வகையாக சமைத்து கொடுத்து சக போட்டியாளர்களை அசத்தி கவர்ந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் எந்த அணியிலும் சேராமல் தணித்து விளையாடி ஸ்டார்ங் போட்டியாளர் பட்டியலில் இருந்தார். ஆனால் இப்போது இவரும் புல்லி கேங் அணியில் சேர்ந்துவிட்டார். அதனால் எதிர்மறையான பெயர்கள் வந்து இருக்கிறது.




அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாகவே, ஜோவிகா அமைதியாக இருப்பதாக பேசப்படுகிறது. முதல் வாரத்தில் வெளியான ப்ரொமோ வீடியோக்களில் ஜோவிகா நிச்சயம் இருப்பார். குறிப்பாக பிரதீப்பை தட்டிக் கேட்டது எல்லாம் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு புல்லி கேங்குடன் சேர்ந்த பிறகு ஜோவிகாவின் இமேஜ் முற்றிலும் மாறிப்போனது.

பிக் பாஸ் வீட்டில் இப்போது எல்லாம் ஜோவிகா சாப்பிடுவது, தூங்குவது, எப்போது பார்த்தாலும் ஓடி சென்று விழுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இதை எல்லாம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வீடியோவாக ஷேர் செய்கிறார்கள். இதை எல்லாம் மனதில் வைத்து தான் ஜோவிகா பற்றி வைல்டு கார்டு போட்டியாளர் அனன்யா இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வனிதா தன் மகளுக்கு அனுப்பிய டிஷர்டில், சிங்கம் சிங்கிளாக தான் இருக்கும் என வாசகம் அடங்கிய டி-ஷர்டை அனுப்பி இருந்தார். இதன் மூலம் தனியாக விளையாடச் சொல்லி மகளுக்கு அவர் ரகசிய குறி சொல்லுகிறார் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!