Big Boss Tamil 7 Cinema

Big Boss Tamil 7: அர்ச்சனாவைத் தூண்டிவிடும் விஷ்ணு…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு- அர்ச்சனா இடையே வார்த்தைப் போர் முற்றி இருக்கிறது. தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருவரும் எபிசோடு முழுக்கத் தகராறு செய்து கொண்டிருக்க சக போட்டியாளர்கள் அவர்களைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது. இந்த முறை சண்டை வலுத்திருப்பது விஷ்ணு -அர்ச்சனாவுக்கு இடையில்தான். பிக் பாஸ் லிவ்விங் ஏரியாவில் நிக்சனின் கேப்டன்சியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்த விஷ்ணு, அர்ச்சனாவை பார்த்து, ‘பொளீர் பொளீர்னு நம்ம டயலாக்லயே வச்சு செய்யலாம்’ என சொன்னதும் கடுப்பான அர்ச்சனா, ’எங்க அடிங்க பார்ப்போம்’ என எகிறி குதித்து விஷ்ணுவிடம் மல்லுக் கட்டினார்.

ஒருக்கட்டத்தில் இருவரும் நடுவீட்டில் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டனர். சுற்றி இருக்கும் சக போட்டியாளர்கள் யாரும் இவர்களைப் பெரிதாக தடுக்க முயலாமல் பின்னால் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.




இந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள புரோமோவில், ‘சுவரேறி எகிறி குதிச்சு ஓடிவிடு’ என அர்ச்சனாவிடம் விடாமல் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. அர்ச்சனாவும் பதிலுக்கு பதில் அவரிடம் மல்லுக்கட்டுகிறார். ‘குப்பைத்தொட்டி, தண்டம்’ என தகாத வார்த்தைகளில் இருவரும் திட்டிக் கொள்கிறார்கள்.

’அக்‌ஷயாவை சண்டையிழுத்து அவரை வெளியில் அனுப்பியது போல அர்ச்சனாவையும் அனுப்பி விடலாம் என்று விஷ்ணு நினைக்கிறார் போல! ஆனால், அவர் செய்வது கோமாளித்தனம்’, ‘திடீரென அந்நியன் போல சண்டை போடுகிறார். திடீரென ரெமாவாக மாறி பூர்ணிமாவிடம் ரொமான்ஸ் செய்கிறார்’ என விஷ்ணுவைத் திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!