gowri panchangam Sprituality

லியோ மேடையில் தெரிந்த அப்பட்டமான அரசியல்..

சில பல பிரச்சனைகளுக்கு ஆளானாலும் விஜய்யின் லியோ 540 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அதனாலேயே அதன் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் பட குழுவினர் நடத்தினார்கள். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

ஏனென்றால் சக்சஸ் மீட் என்று சொல்லிவிட்டு அதற்கான விஷயத்தை செய்யாமல் தன்னுடைய அரசியலுக்கான மேடையாக அதை விஜய் பயன்படுத்திக் கொண்டார். அதாவது இது போன்ற சக்சஸ் மீட் நடத்தும் போது படத்தில் பணிபுரிந்தவர்கள் பற்றியும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, பரிசு கொடுப்பது போன்ற அம்சங்கள் தான் முக்கியமாக இருக்கும்.




ஆனால் லியோ சக்சஸ் மீட்டில் விஜய் சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கான ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார். ஆனால் அதன் பிறகு கமா போட்டு அப்பாவை போல் வரவேண்டும் என்று மகன் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசி அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்தார். அது மட்டுமின்றி அவர் சொன்ன குட்டி கதையில் காக்கா, பருந்து என சொல்லிவிட்டு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தது வேண்டுமென்றே ரஜினியை குத்தி காட்டியது போல் இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக காவி நிற சட்டை, நெற்றியில் குங்குமம் என அவருடைய தோற்றம் அரசியலுக்கான படியாக இருந்தது. இது நிச்சயம் மக்களை ஏமாற்றும் வேலை என சினிமா விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி 2026-ல் வரும் தேர்தலை குறிப்பிட்டு பேசியது, கப்பு முக்கியம் பிகிலு என சொன்னது அனைத்தும் வலுக்கட்டாயமாக திணித்தது போல் இருந்தது.




மேலும் லியோவில் இடம்பெற்று இருந்த சிகரெட் பிடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது போன்ற சர்ச்சையான விஷயங்களை அவர் சப்பைக்கட்டு கட்டி பேசியது எல்லாம் அப்பட்டமான அரசியல் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இப்படியாக வெற்றி விழா கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பல சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளார் விஜய்.

இதற்கு சோசியல் மீடியாவில் இப்போது பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அது மட்டுமின்றி இது சக்சஸ் மீட் கிடையாது, டிசாஸ்டர் மீட் என்ற கருத்துகளும் பரவிக் கொண்டிருக்கிறது. இப்படியாக சுய லாபத்திற்காக ஒரு மேடையை அமைத்து விஜய் செய்த இந்த ஐந்து தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதபடி இருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!