தோட்டக் கலை

மாடித் தோட்டத்தில் பப்பாளி வளர்ப்பு

இன்று சந்தையில் விற்கப்படும் பப்பாளி பழங்கள் பெரும்பாலும் ரசாயனங்கள் நிறைந்தவை. உங்களுக்கு இயற்கை உணவின் மீது தீராத பற்று இருந்தால் நீங்களே சொந்தமாக வீட்டில் பப்பாளி மரம் வளர்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்கள் இரண்டு மட்டும்தான். ஒன்று பழைய டிரம். இன்னொன்று நல்ல மண்.

பப்பாளி மரம் வளர்ப்பு! - PACHAI BOOMI




மாடித் தோட்டத்தில் பப்பாளி வளர்ப்பு:

மரக்கன்று நடுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமுள்ள கண்யெனர் அல்லது டிரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மண், கோகோபீட், கரிம உரம் மற்றும் ஈரமான மணல், அனைத்தையும் சம விகிதத்தில் நிரப்பவும்.

பொதுவாக பப்பாளி பெரிய பூச்சி தாக்குதலை சந்திக்காது. ஆனால் அப்படி ஏதேனும் நேர்ந்தால், வேப்பம் பிண்ணாக்கில் செய்யப்பட்ட இயற்கை பூச்சிக் கொல்லிகளை தெளிக்கவும்

மரக்கன்றுகளுடன் டிரம்மை, காற்று வீசாத இடத்தில் வைக்கவும். பப்பாளி மரம் காற்றைத் தாங்காது, மேலும் அதன் வேர்களை சேதப்படுத்தும்.

போதுமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் அவற்றை வைக்கவும்.

மாதத்திற்கு ஒருமுறை மரக்கன்றுகளுக்கு இரண்டு கைப்பிடி அளவு உரம் இடவும். அது மண்புழு உரமாக இருக்கலாம், மாட்டு சாணம் அல்லது வேறு எந்த கரிம உரமாகவும் இருக்கலாம்.




பப்பாளி இலைகளை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் பப்பாளி இலைகளை மாட்டு கோமியத்தில், ஒரு மாதம் ஊறவைக்கலாம். அதை தண்ணீரில் கரைத்து இலைகளின் மேல் தெளிக்கவும்.

இலைகளில் எறும்புகள் மற்றும் சிறிய பூச்சிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள், வாரத்திற்கு ஒரு முறை செடியை கவனமாகப் பாருங்கள்.

அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்கள் அல்லது தோட்ட நர்சரிகளிடமிருந்து மரக்கன்றுகள் வாங்கவும். முடிந்தால், சமையலறைக் கழிவுகள் மற்றும் உலர்ந்த இலைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே உரம் தயாரிக்கவும். இது அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு சிறந்த உரமாகும்.

மேலே உள்ள குறிப்புகளை பயன்படுத்தி இன்றே உங்கள் வீட்டில் பப்பாளி மரக்கன்றை நடவு செய்யுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!