Cinema Entertainment விமர்சனம்

மனிதரில் இத்தனை நிறங்களா: திரைப் பார்வை

தமிழ் சினிமா எத்தனையோ கதைகளை மக்களிடத்தில் கொடுத்திருக்கிறது. அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. அப்படி ஒரு அனாதை இளம் பெண் பொது மக்களிடத்தில் சிக்கினால் எப்படி இந்த சமூகம் அவர்களை பார்க்கும் நடத்தும் என்பதை கூறிய திரைப்படம் தான் மனிதரில் இத்தனை நிறங்களா!.

இயக்குனர் ஆர்.சி சக்தி இயக்கி கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் இது. இதில் ஒரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவிக்கு ஜோடி கிடையாது.




மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படம் | Manidharil Ithanai Nirangala Super Hit Tamil 4K Full HD Movie - YouTube

மதயானை ஸ்ரீதேவி பிழைப்பு தேடி மெட்ராஸ் நகருக்கு செல்கிறார் அங்கே சிலரால் பாதிக்கப்பட்டு பாலியல் வழக்கில் சிக்கிக் கொள்கிறார். அதற்குப் பிறகு தனது சொந்த கிராமம் திரும்பி தோழியின் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் தோழியின் கணவர் தான் கமல்ஹாசன். இந்தத் திரைப்படத்தில் இலகிய மனம் கொண்ட முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இந்த கிராமத்திற்கு வரும் போஸ்ட் மாஸ்டர் ஒருவர் ஸ்ரீதேவியின் மீது காதல் கொடுத்தார்.

பாலியல் வழக்கில் சிக்கிக் கொண்டு தப்பித்த ஸ்ரீதேவியின் பழைய கதை நிகழ் காலத்தோடு போராட வருகிறது. பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் ஒற்றைப் பெண்ணாலே ஸ்ரீதேவியை படுத்தும் பாடு மிகவும் அழகாக இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். ஒரு அனாதை இளம் பெண் எப்படி இத்தனை அவலங்களையும் சரி செய்கிறார் என்பது தான் இந்த திரைப்படத்தின் முழு கதை ஆகும்.




இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த திரைப்படத்திற்கு ஷ்யாம் என்பவர் இசையமைத்திருந்தார். மழை தருமோ என்மேகம் என்ற பாடல் இன்று வரை வளர்வது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது.

அந்த அளவிற்கு இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒளித்தன. பாடல்களின் வரிகள் அனைத்தும் கண்ணதாசனால் இயற்றப்பட்டது. அவல நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை பல திசைகளில் இருந்து மனிதர்கள் எப்படி தாக்குகிறார்கள் என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதற்காகவே தான் இந்த தலைப்பை இந்த திரைப்படத்திற்கு கொடுத்திருப்பார்கள் எனக் கூறலாம். மனிதரில் இத்தனை நிறங்களா என்று நமக்கே ஆச்சரியப்படும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தை சுற்றி அத்தனை வேலைகள் நடக்கும்.

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தனிமனித போராட்டத்தையும் புரிந்து கொள்ள எத்தனையோ திரைப்படங்கள் உள்ளன அப்படிப்பட்ட வரிசையில் இந்த திரைப்படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!