gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் / பீஷ்மர் மற்றும் கண்ணன் : பலரும் அறியாத ரகசிய கதை

மகாபாரதம், எந்த காலத்திற்கும் பொருந்துள் வகையிலான வாழ்வியல் தர்மத்தை உலகிற்கு எடுத்து உரைத்த மகா காவியம். மகா பாரதம் மட்டுமல்ல அதன் கிளை கதைகளும் தர்மத்தையும், இறைவனின் குணநலன்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்தது. குருஷேத்திர போரில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு கதை பின்னணி மற்றும் ஒரு சம்பவத்திற்கான காரணமானவே அமைந்தது.

மகாபாரதத்தில் பலரும் அறியாத பல கிளைக் கதைகளும், கதாபாத்திரங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மூலக் கதையுடன் ஏதோ ஒரு விதத்தில் மிக முக்கியமான பங்காக அமைந்துள்ளன. அப்படி பலரும் அறியாத ஒரு கதையை தான் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Pin by AK 28 on Mahabharat Star Plus | Cute animal drawings kawaii, Cute animal drawings, Krishna images

மகாபாரத கதை :

மகாபாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது கண்ணனை சந்தித்த தர்மன், “தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகமானவர்கள் இறந்து விட்டார்கள். இந்த பாவத்திற்கு நானும் ஒரு வகையில் காரணமாகி விட்டேன். இந்த பாவம் தீர என்ன வேண்டும்? வழி காட்டு வாசுதேவா” என கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளிக்க பீஷ்மரே சரியான நபர். வா அவரிடமே செல்லலாம் என கூறிய கிருஷ்ணர், தர்மனை பீஷ்மரிடம் அழைத்துச் சென்றார். பீஷ்மரிடம் விபரத்தை சொன்னார் கண்ணன். இதற்கு பதிலளிக்க துவங்கிய பீஷ்மர், ” இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறாய்? உனது அருகில் கண்ணன் உனக்கு தெய்வமாக தெரியவில்லையா தர்மா? அவனின் பெருமைகளை இன்னுமா நீ உணரவில்லை?”




Mahabharatham - மகாபாரதம் - கங்கை மைந்தர் பீஷ்மர் பதிவு - 4 தன் தம்பி விசித்திரவீரியனுக்கு அம்பையின் தங்கைகள் அம்பிகா அம்பாலிகா இருவரையும் ...Mahabharat - Watch Episode 1 - Bhishma surrenders to Krishna on Disney+ Hotstar

பீஷ்மர் சொன்ன கண்ணனின் குணம் :

” அவனின் குணநலன்கள் எப்படிப்பட்டது என சொல்கிறேன் கேள். பத்தாவது நாள் போரின் போது நான் கெளரவ படைகளை தலைமை தாங்கி புறப்பட தயாரானேன். அப்போது என்னை வந்து சந்தித்த துரியோதனன், உங்களை அனைவரும் பெரிய பலசாலி என்கிறார்கள். பெரிய வீரனான உங்களைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்கள். ஆனால் உங்களால் பாண்டவர்களை ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை? ஐந்து பேரில் ஒருவரை கூட உங்களால் வீழ்த்த முடியவில்லை? எனக்கு எதிராக ஏதாவது சூழ்ச்சி செய்து, எனக்கு துரோகம் செய்கிறீரா? என கேட்டான்.

நீங்கள் பாண்டவர்கள் மீது பரிவு காட்டுகிறீர்கள். போரில் இன்றைய நாள் நான் தோல்வியை சந்தித்ததற்கு நீரே காரணம் என பல விதமாக என்னிடம் கோபித்து கொண்டான். வீண் பழிகளை சுமத்தினான். அஸ்தினாபுரத்தை காப்பேன் என எனது தந்தைக்கு அளித்த சத்தியத்தை இன்று வரை காத்து வரும் எனக்கு இப்படிப்பட்ட பழிச்சொல்லா என நினைத்து மனம் வருந்தினேன்.




X 上的SourabhRaajJain OFC:「Lord #Krishna going to kill bhishma wid Chariot wheel ~ capture pic #MahabharatWar @saurabhraajjain http://t.co/58glJP9HTO」 / X

பீஷ்மர் செய்த சபதம் :

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த நான், அவனிடம் ஒரு சபதம் செய்தேன். இன்று நடக்கும் யுத்தத்தில் நடக்க போவதை மட்டும் பார். இன்று நான் செய்ய போகும் யுத்தத்தை பார்த்து, குருஷேத்திர போரில் எந்த நிலையிலும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சபதம் செய்த கண்ணனையே ஆயுதம் ஏந்த செய்வேன் என்றேன். அதே போல் போர்களத்திற்கு வந்த வேகத்தில், கடும் கோபத்துடன் போர் புரிந்தேன்.

எதிரில் தேரில் வந்த கண்ணன் மற்றும் அர்ஜூனன் மீது அம்பு மலை பொழிந்தேன். தீரவி விஷ்ணு பக்தனான நான், கண்ணன் மீது காயம் ஏற்படும் படி நடந்து கொண்டேன். ஆனால் கண்ணனோ கோபம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருந்தான். நான் வீசிய அம்பில் காண்டீபம் நழுவி, அர்ஜூனன் மழக்கமடைந்தான். இந்த காட்சியை கண்ட கண்ணன், தேரில் இருந்து குதித்து, தேர் சக்கரத்தையே ஆயுதமாக ஏந்தி என்னை தாக்க வந்தான்.




Mahabharat StarPlus on X: "Bhishma Comes infront of Vasudev Krishna with Hands Fold. Stills from Yesterday's Episode. #Mahabharat @StarPlus http://t.co/XKmPLfYBfV" / X

மோட்சம் கொடு கிருஷ்ணா :​

துரியோதனன் செய்வதற்கு தர்மத்திற்கு புறம்பானது, பாவம் என தெரிந்தும் அவனுக்கு துணையாக நின்று நானும் பாவம் செய்தவன் ஆகி விட்டேன். உனது கையில் இருக்கும் சக்கரத்தால் எனக்கு மோட்சம் கொடு என நான் வணங்கி நின்றேன். அப்போது மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜூனன், கையில் சக்கரத்துடன் என்னை தாக்க வந்த கண்ணனை கண்டு பதறினான். போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என சத்தியம் செய்து விட்டு, நீயே சத்தியத்தை மீறலாமா என கண்ணன் செய்த சத்தியம் பற்றி அர்ஜூனன் நினைவு படுத்தினான்.

அப்போது கண்ணன் சொன்னான், என் சத்தியம் இருக்கட்டும் அர்ஜூனா. நான் கண்ணனின் பாதத்தில் சரணடைந்து விட்டேன். அவன் என்னை காப்பான் என நீ என் மீது வைத்த நம்பிக்கை, சத்தியத்தை நான் காப்பாற்ற வேண்டாமா? உன் சத்தியத்தை காக்க, நான் செய்த சத்தியத்தை மீறுவதில்லை தவறில்லை என்றான். அர்ஜூனனும், கண்ணனும் பேசிக் கொள்வது என காதில் விழுந்தது. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை விளங்கியது.




பக்தனுக்காகவே கண்ணன் :

அர்ஜூனனின் சத்தியத்தை காப்பதற்காகவும், அவனின் உயிரை காக்க வேண்டும் என்பதற்காகவும் தனது சத்தியத்தை மீறி கண்ணன் ஆயுதம் எடுக்கவில்லை. துரியோதனனிடம் நான் செய்த சத்தியத்தை காப்பதற்காகவே அவன் தனது கையில் ஆயுதம் ஏந்தினான். காலையில் துரியோதனனிடம் சபதம் செய்த போது, இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கை மைந்தன் இல்லை என்றேன்.

பக்தனுக்காக தான் கண்ணன். தனது பக்தனான எனது வார்த்தை பொய்யாகி விடக் கூடாது என்பதற்காக தான் அவன் தான் செய்த சத்தியத்தை மீறி ஆயுதத்தை கையில் எடுத்தான். பாவங்கள் நீ செய்ததாகவும், பல உயிர்கள் போனதற்கு நீயும் காரணம் என நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் அனைத்திற்கும் காரணம் அவனே. காரணமும் அவனே, காரணத்தின் விளைவும் அவனே” என்றார் பீஷ்மர்.




What’s your Reaction?
+1
4
+1
5
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!