gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/குருஷேத்திர போர் பற்றிய சில தகவல்கள்……

குருஷேத்திர போர் பற்றிய சில தகவல்கள்……

இப்போர் மகாபாரதக் காவியத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.




மஹாபாரதத்தில் மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன், பகவான் கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட மூன்று கேள்விகள் என்ன? அதற்கு கிருஷ்ணர் கூறிய ...

குருஷேத்திர போர் நடந்த காலம்:

குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், குருச்சேத்திரப் போர் கி. மு., 1500-இல் நடைபெற்றதாக கூறுகிறார்கள்…

போரில் நடுநிலை வகித்தவர்கள்:
பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி…

அக்குரோணி படை கணக்கீடு :

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்….




100+] Krishna Arjun Wallpapers | Wallpapers.com

போர் விதிமுறைகள் வகுத்தல்

1.கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.

2.ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.

3.போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.

4.மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.

5.போரிடாத வீரனை தாக்கக் கூடாது.




6.கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.

7.போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.

8.காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.

9.மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.

10.போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்தப் போர் விதிகளை,  அபிமன்யுவின்  வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!