Samayalarai Uncategorized

சுவையான ஸ்வீட் கார்ன் கொல்லுக்கட்டை

கொழுக்கட்டை என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆதி மூலம் என்று அழைக்கப்படும் விநாயகர் தான். விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று. அதனால் தான் கொழுக்கட்டையை இன்று வரை விநாயகருக்கு படைத்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது.

கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள்  இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பூரண கொழுக்கட்டை ஒன்றாகும்.

இன்று நாவிற்கு ருசியான ஸ்வீட் கார்ன் கொழுக்கட்டை எப்படி செய்வது, என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.




தேவையான பொருட்கள் 

கொழுக் கட்டை மாவு – 1 கப்

ஸ்வீட் கார்ன் – 2

பொடித்த வெல்லம் – 1 கப்

தேங்காய் துருவல் – 1 கப்

ஏலத்தூள் – சிறிதளவு

நெய் – 2 ஸ்பூன்




செய்முறை விளக்கம் 

முதலில் ஸ்வீட் கார்ன் எடுத்து அதை குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்து உதிர்த்து தனியாக வைக்கவும்.  இப்போது உதிர்த்த  ஸ்வீட் கார்னை பாத்திரத்தில் போட்டு வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.  அதை மீண்டும் பாத்திரத்தில் போட்டு ஏலத்தூள், நெய் சேர்த்து கெட்டியாக பூரணம் கிளறவும்.

பச்சரிசி மாவு எடுத்து அதில் பூரணத்தை சிறு உருண்டையாகப் பிடித்து உள்ளே வைக்கவும். இப்போது இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் கொழுக்கட்டை ரெடி.



வீட்டு குறிப்புகள்

  • ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

  • காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

  • கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

  • காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

  • சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!