health benefits lifestyles

கிரீன் டீ Vs பிளாக் காபி எது பெஸ்ட்?

கிரீன் டீ அல்லது பிளாக் காப்பி இதில் எதை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் நம்மில் பலருக்கு ஏற்படும். இந்நிலையில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் கிரீன் டீ , பிளாக் காபி குடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்ட தகலை தெரிந்துகொள்வோம்.




குளுக்கோஸ் மெட்டபாலிசம்: கிரீட் டீ, பிளாக காபி தொடர்ந்து குடித்தால், இன்சுலின் செயல்பாட்டை உடல் ஏற்றுக்கொள்ளும் அளவு அதிகரிக்கும். கிரீன் டீ-க்கு கூடுதலாக ஒரு பண்பும் இருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

ஆண்டி ஆக்ஸிடண்ட்: இரண்டு பானங்களும் ரத்ததில் உள்ள ஆண்டி ஆக்ஸிண்ட் அளவை அதிகரிக்கிறது. கிரீன் டீ, பிளாக் காப்பியை விட ஆண்டி ஆக்ஸிடண்டை அதிகரிப்பதில் அதிகமாக செயல்படுகிறது.




கிரீன் டீ-யில் கடிசின்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடல் எடை குறையும், மூளை சிந்தித்து செயல்படும் ஆற்றலை அதிகரிக்கிறது. இதில் உள்ள காஃபைன் மற்றும் எல்- தியனின் காம்பினேஷன் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. மனநிலையை சீராக்குகிறது.

உடல் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடலுக்கு தேவையான திரவங்களின் அளவை சீராக்கும்.

பிளாக் காப்பி: இதில் உள்ள காஃபைன் கடுமையான சோர்வை நீக்கும். பிளாக் காப்பியை தொடர்ந்து குடித்து வந்தால், கல்லீரல் மற்றும் நரம்புகளை பாதிக்கும் நோய்களை தடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒட்டுமொத்த உடல் இயக்கத்தை ஊக்குவித்து, பசியை குறைக்கும். இதனல உடல் எடை குறையும். இந்நிலையில் நீங்கள் ஆண்டி ஆக்ஸிடண்ட், குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை வைத்து ஒப்பிட்டால், கிரீன் டீ-யை தேர்வு செய்வது சரியாக இருக்கும். ஆனால் இரண்டையுமே சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!