Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil7:இது அது இல்ல ? பிக் பாஸ் 7 போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும்.. யாரு யாரை மாதிரி இருக்கா ?

தமிழ் தொலைக்காட்சியின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 வரை வந்துவிட்டது. அது இல்லாமல், அல்டிமேட் சீஸனும் வந்தது. அந்த வகையில், மற்ற அனைத்து சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் வித்தியாசமானது. இத்தனை சீசன்களிலும் ஒரு வீடு பல போட்டியாளர்கள். ஆனால், இந்த முறை இரண்டு வீடு பல போட்டியாளர்கள். வீடு மாறியுள்ளது, அனால் சில போட்டியாளர்கள் நடந்துகொள்வதை பார்த்தல் எங்கேயோ இதே போல ஒன்றை பார்த்தது போலவே இருந்திருக்கும். அப்படியான ஒப்பீடுதான் இந்த தொகுப்பு. பிக் பாஸ் 7 போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும்..





​ஜோவிகா விஜயகுமார்

தாயை போல பிள்ளை நூலை போல சேலை. இந்த பழமொழி யாருக்கு ஒத்துபோகுமோ இல்லையோ ஜோவிகா மற்றும் வனிதாவுக்கு ஒத்துப்போகும். யாருக்குமே பயமில்லை. தான் கூறவேண்டிய கருத்தை பயப்படாமல் கெத்தாக கூறுவார் வனிதா. அதனால் ஏற்படும் விளைவுகளையும் அசால்டாக சமாளிப்பார். அதேபோலத்தான் அவரது மகள் ஜோவிகாவும் இருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். விசித்ராவுடனான வாக்குவாதத்திலும் சரி வீட்டில் நடக்கும் பிற விஷயங்களிலும் சரி அவரது பாயிண்டை சொல்லிவிட்டு கெத்தாக நகர்ந்துவிடுகிறார் ஜோவிகா.

​விசித்ரா

ஜோவிகாவை பற்றி பேசினால் கண்டிப்பாக விசித்ராவை பற்றியும் பேசவேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்து பெரும் ரசிகர்களை ஈட்டினார் விசித்ரா. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரும்பாலான இளைய போட்டியாளர்கள் இவரை மம்மி எனவும் அம்மா எனவும் அழைத்தார்கள். பாசமான அம்மா என கூறினார். சட்டென நம் நினைவிற்கு அன்புதான் ஜெயிக்கும் என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்குமே. ஆமாம், விசித்ரா ஜோவிகாவின் படிப்பை பற்றி பேசும்போதும் அம்மா போல நினைத்து கூறினேன் என கூறியிருப்பார். உடனே நெட்டிசன்கள் அர்ச்சனாவோடு ஒப்பிட்டு பேசிவிட்டாரகள்..

ப்ரதீப் ஆண்டனி

இவரை பற்றி கூறவே வேண்டாம். ஒட்டுமொத்த வீடுமே அவருக்கு எதிராக இருந்தாலும் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிடுகிறார். ஆனாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த விஷயத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே. ஆமாம், ஆரி அர்ஜுனனை இப்படித்தான் வீட்டில் பங்கமாக எதிர்த்தார்கள் அனால் டைட்டிலையே தட்டி சென்றுவிட்டார். ப்ரதீப் எவ்வளவு தூரம் போகிறார் பார்க்கலாம்.




மாயா

மாயா மாயா… அட நம்ம மீரா மிதுன். நினைவிருக்கிறதா ? மாயா செய்யும் காரியங்களை உற்றுநோக்கும் நெட்டிசன்கள் சீசன் 3யின் மீரா மிதுனின் மருவுருவம் மாயா என கூறிவருகிறார்கள். மாயா மீராவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்றால் அதில் சந்தேகமில்லை. மீரா மிதுனை போலவே, எக்கச்சக்க ட்ராமாக்களை காட்டிவிடும் மாயா கன்ஃபெஷன் ரூமுக்குக்கு அடிக்கடி செல்லுவார் என விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

விஷ்ணு விஜய்

இவருக்கு பெயர் மட்டும் இரண்டு இல்லை. குணமும் இரண்டு போட்டியாளர்களின் குணம் என்கிறார்கள் நெட்டிசன்கள். அசீம் பாதி பாலாஜி பாதி கலந்து செய்த கலவைதான் விஷ்ணு விஜய் என்கிறார்கள். ஆக்ரோஷமாக அடிதடி என இருந்த அசீமையும், கோவமாக ரகடாக இருந்த பாலாஜியையும் ஒன்றாக சேர்த்து அவரை காட்டுகிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். என்னதான், இருவரும் கப்பை அடித்திருந்தாலும், விஷ்ணு விஜய் ஜெய்கிறாரா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!