Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7: மணிக்கு டிஸ்லைக் கொடுத்த ரவீனா. பரபரப்பாகும் பிக்பாஸ் 7!

கடந்த சில நாட்களாக சுணக்கமாகப் போய்  கொண்டிருந்த இந்த  சீசன், இப்போ  எமோஷனலான எபிசோடின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது எனலாம். ஆம், இந்த நாளில் சில பல சுவாரசியமான உணர்ச்சி மோதல்கள், தரமான சம்பவங்கள் நிகழ்ந்தன.நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் எவ்வாறெல்லாம் உண்மையும் புனைவுமாக எதிர்வினையாற்றுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.




கோல்டன் ஸ்டார் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசும் வீடியோ காட்டப்படும். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியாது என்பதுதான் சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவர், இரண்டு சக போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து காரணங்களைச் சொலலி அவர்களின் குடும்ப வீடியோவைப் பார்க்கலாம். அதில் சொல்லப்படுகிற விஷயங்களோடு ஒப்பிட்டு ஒற்றுமை எத்தனை சதவீதம் இருக்கிறது, முரண் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்பதைப் பொறுத்து சம்பந்தப்பட்டவருக்கு லைக் அல்லது டிஸ்லைக் பட்டனை குத்த வேண்டும். அதிக லைக் வாங்குபவர் வெற்றியாளர்.

முதலில் வந்த பிரதீப், சுரேஷ் மற்றும் ஜோவிகாவின் குடும்ப வீடியோக்களைப் பார்க்க ஆசைப்பட்டார். இவருக்கு வனிதாவை ரொம்பவும் பிடிக்குமாம். (பார்றா!). வீடியோ பார்த்து விட்டு திரும்பிய பிரதீப், ஜோவிகாவிற்கு லைக் பட்டனும், சுரேஷிற்கு டிஸ்லைக் பட்டனும் தந்து அதற்கான காரணங்களைச் சொன்னது அருமை. சுரேஷ் தனது குடும்பத்தைப் பற்றி சொன்னது போல் வீடியோவில் இல்லையாம். பெருமையாகத்தான் பேசினார்களாம். ஆனால் ஜோவிகாவின் தங்கை உணர்வுபூர்வமாக பேசியது நன்றாக இருந்தது என்று விவரித்தார் பிரதீப். பொதுவாக முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாத ஜோவிகா, இதைக் கேட்டு கண்கலங்கினார்.




‘அப்பா.. கப் ஜெயிச்சுட்டு வாங்கப்பா’ன்னு சுரேஷோட பையன் வீடியோல சொன்னான்.. அதக் கேட்டதும் உள்ளுக்குள்ள எனக்கு சிரிப்பா வந்துச்சு.. எப்படியும் அது நடக்கப் போறதில்ல’ என்று பட்டவர்த்தனமாக உடைத்துப் போட்டு பிரதீப் பேசியது அருமையான, நேர்மையான நகைச்சுவை. இதுதான் பிரதீப்.

அடுத்ததாகச் சென்றவர் ரவீனா. இவர் மணியின் குடும்ப வீடியோவைத் தேர்ந்தெடுத்திருக்கவே வேண்டாம். அதன் விளைவுகளை பின்னர் அனுபவித்தார். பிரதீப் மற்றும் மணியின் வீடியோக்களைப் பார்த்த ரவீனா, பிரதீப்பிற்கு லைக்கும் மணிக்கு டிஸ்லைக்கும் அளித்தார். இதற்காக அவர் சொன்ன காரணங்கள் மிக மிகப் பொருத்தமாக இருந்தன. ரவீனாவின் குழந்தைத்தனமான பிம்பத்திற்குள் இன்னொரு அறிவாளிப் பெண் ஒளிந்திருப்பதை இப்போது கண்டுகொள்ள முடிந்தது.




சும்மாவே ஆடும் மணி, சலங்கையை கட்டி விட்டால் ஆடாமல் இருப்பாரா? தனக்கு டிஸ்லைக் பட்டனை தந்தது தொடர்பாக விதம் விதமாக ரவீனாவை வறுத்தெடுத்தார். `ஆக்சுவலி. உன் வீடியோதான் பிடிச்சது.. பிரதீப்பிற்கு யாரும் லைக் தர மாட்டாங்க.. அதனாலதான் நான் தந்தேன்’ என்று ரவீனா சமாளிக்க முயன்றாலும் மணியின் இம்சை அடங்கவில்லை.

அடுத்ததாக மணிக்கு வாய்ப்பு. ரவீனா மற்றும் விக்ரமின் குடும்ப வீடியோக்களைப் பார்த்து விட்டு வந்த மணி, ரவீனாவிற்கு லைக் பட்டனும் விக்ரமிற்கு டிஸ்லைக் பட்டனும் தந்தார். இதற்காக அவர் சொன்ன காரணங்கள் பொருத்தமாக இருந்தன. ‘நான் ஒண்ணும உன்னை மாதிரி இல்லை’ என்று காட்டுவதற்காகவே ரவீனாவிற்கு லைக் பட்டனை மணி அளித்திருக்கலாம் என்றே தோன்றியது.

நாளை என்ன தான் நடக்குமோ பொறுத்திருந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!