Big Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7: பிக் பாஸ் வீட்டுக்குள் போக தயாராகிறாராகும் சின்னத்திரை பிரபலம்?

கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, சீரியல் நடிகர் விஷ்ணு உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் தேதி தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.

கடந்த வாரம் முதல் எவிக்‌ஷன் நிகழ்ந்து அனன்யா வெளியேறினார். தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை உடல் நலன் சரியில்லை எனச் சொல்லவே, அவரும் வெளியேற்றப் பட்டார். ஆக 18 போட்டியாளர்களின் இருவர் வெளியேறி விட்டனர்.

நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் இருப்பதும் நாமினேட் செய்யப்பட்டு இரண்டாம் வீட்டுக்கு வருபவர்கள் டாஸ்க் எதிலும் கலந்துகொள்ள முடியாது என்பதும் தெரிந்ததே.




இந்நிலையில் நேற்றைய தினம் வினுஷா தேவி, அக்‌ஷயா இருவரையும் விளையாட்டில் ஆர்வமாக இல்லாமலிருப்பதாகச் சொல்லி பிக் பாஸே ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்.

முந்தைய சீசன்களில் ஒரு போட்டியாளரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமெனில் சக போட்டியாளர்கள்தான் புகார் அளித்துப் பரிந்துரைப்பார்கள். முதன்முறையாக பிக் பாஸ் தானாகவே முடிவெடுத்து சிறைக்கு அனுப்புகிறார் என்பது இங்கே கவனிக்கப் பட வேண்டியது.

இரண்டு பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட, இருவர் சிறைக்குச் சென்றுவிட, மீதி இருப்பவர்களில் பாதி பேர் இரண்டாவது வீட்டில் இருக்க, மொத்தத்தில் இந்த சீசனில் விளையாட்டைச் சிறப்பாக விளையாட பிக் பாஸ் வீட்டில் ஆளே இல்லாமல் போய் விட்டதா என்கிற ஒரு கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டதால், அதைச் சரி செய்ய வேறு சில புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் இறக்கப்படுவார்களா என்கிற எதிர்பார்ப்பும் தெரிய, இந்நிகழ்ச்சி பற்றி செய்தி தான்  பரவி வருகின்றது.

‘’முதல்ல ஒரு செட் போட்டியாளர்களை அனுப்பிட்டாலும் அடுத்த ஒரு சில நாட்கள்லயோ அல்லது ஒரு வார்த்துலயோ புதிய போட்டியாளர்களை அனுப்பறது இதுக்கு முன்னாடி நடந்துருக்குதான். இந்த முறை அதுமாதிரி ஒருசில போட்டியாளர்கள் வரலாம்னு தெரியுது. ‘ராஜா ராணி’ அர்ச்சனா உள்ளிட்ட சிலருடைய பெயர்கள் ஏற்கெனவே அடிபட்டது.

அவங்க இன்னும் போகலை. அதேநேரம் அர்ச்சனாவுக்கு புரொஃபைல் ஷூட்லாம் முடிஞ்சிட்டதா செய்திகள் தெரிய வருது. எனவே அவங்களை அடுத்த சில நாட்கள்ல அனுப்பற திட்டம் பிக் பாஸுக்கு இருக்கலாம்ங்கிற பேச்சு கேக்குது’’ என்கிறார்கள். ‘ராஜா ராணி’ தொடரிலிருந்து பாதியில் நின்ற இவர், பிக் பாஸுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாகச் செல்வாரா? இல்லையா?என்று  பொறுத்து இருந்து பார்போம் .




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!