Samayalarai

வீட்டிலேயே பெருங்காயப் பொடி எப்படி செய்வது?

கட்டி பெருங்காயம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதை சிலருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. பெரும்பாலோர் பெருங்காய பொடியைத்தான் பயன்படுத்துவார்கள்.

ஆனால், கடையில் பெருங்காயம் பொடி வாங்கும்போது, இதனுடன் வேறு சில பொருள்களை சேர்த்து விடுவார்கள். இதனால் இதன் நறுமணம் வேறு மாதிரியாக இருக்கும்.

கவலை வேண்டாம்… பெருங்காயத்தை எப்படி வீட்டிலேயே பொடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் –




Kitchen Hacks: How to identify adulterated Asafoetida | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி? | Health News in Tamil

 

 

 

 

தேவையான பொருட்கள்

 

கட்டி பெருங்காயம் – 100 கிராம்

உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

முதலில் கடினமாக கட்டி பெருங்காயத்தை உரலில் இடித்து கொள்ள வேண்டும்.

இரும்பு கடாயில் மிதமான தீயில் உடைத்த கட்டி பெருங்காயத்தை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பெருங்காயம் லேசான மஞ்சள் நிறமாக மாறும்போது, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் வரும். அப்போது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.




வாணலியில் உப்பை சேர்த்து இலேசாக வறுத்து, பிரித்த பெருங்காய துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கினால் பெருங்காய பொடி ரெடி. அதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் நல்லது.

பெருங்காயத்தின் பயன்கள்: மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.

அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும்.வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.






What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!