Cinema Entertainment

லியோ ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தின் விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் காஃபி ஷாப் நடத்திக் கொண்டு அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் என்ற விஜய். அவருடைய காஃபி ஷாப்புக்குள் திடீரென புகுந்த 5 பேர், அங்கு வேலை செய்யும் பெண் மற்றும் தன்னுடைய மகள் ஆகியோரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் அவர்களை கொன்றுவிடுகிறார்.




அந்த சம்பவத்தால் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் பிரபலமாகிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு பலமுனையிலும் பிரச்னைகள் வருகின்றன. சேலம், தெலங்கானா என பல இடங்களில் இருந்து பலரும் இவரை தேடி வருகின்றனர். அவரின் குடும்பத்தினரை கொல்ல பார்க்கிறார்கள், பார்த்திபனை லியோ என்கிறார்கள், அவர்களுக்கும் பார்த்திபனுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே லியோ!

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜயுடன், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான முதல் வாரத்தில் மட்டும் 461 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜயின் வசூல் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ள நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில்,  நவம்பர் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என இணையத்தில் வதந்தி பரவி வருகின்றது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!