தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் வெண்டை…!

வெண்டை ஒரு குறுகிய கால காய்கறி பயிர் ஆகும். செடி நடவு செய்த 40-வது நாள் முதல் வெண்டையை அறுவடை செய்யலாம். இதை மாடித்தோட்டத்தில் எப்படி பயிரிடுவது என்பதை பார்க்கலாம்.

தொட்டி :

ஒன்றரை அடி உயரம் மற்றும் ஒரு அடி நீளம் மற்றும் அகலம் இருக்கின்ற தொட்டிகள் அல்லது பைகள் இதற்கு ஏற்றதாகும். விதையை 5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். தொட்டியில் தரமான மண்ணை பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும்.




உரங்கள் :

அடி உரமாக தொழு உரம் இட வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, ஏயுஆ மற்றும் வெல்லம் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலக்க வேண்டும். பிறகு மூன்று நாள் ஈரத்துணியில் மூடிவைக்க வேண்டும். விதை விதைத்த மூன்றாம் நாள் இந்த உரத்தை இடுவதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும்.




பயிர் பாதுகாப்பு :

வெண்டைக்கு வளர்ச்சி ஊக்கியாக வாரம் ஒரு முறை ஜீவாமிர்தம் மற்றும் பழக்கரைசலை தெளிக்கலாம் .

வேப்பெண்ணெய், கோமியம், கற்றாழைச் சாறு ஆகியவற்றை கலந்து வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பங்கஸ் மற்றும் மஞ்சள் வைரஸ் நோயினை தவிர்க்கலாம்.

வெண்டை செடி பு+க்கள் வைக்க ஆரம்பிக்கும் பொழுது தேமோர் கரைசல் வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் நீண்ட மற்றும் கவர்ச்சியான காய்களை பெற முடியும்.

வெண்டையை அதிகம் தாக்கும் ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் வண்ண அட்டைகளில் கிரீஸ் தடவி வைப்பதன் மூலம் பச்சை மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.




அறுவடை :

வீட்டு உபயோகத்திற்கு 12 செடிகள் நடவு செய்தால் போதுமானதாக இருக்கும். வெண்டை நான்காவது இலை வரும் போதே மொட்டு வைத்து புக்க தொடங்கி விடும். விதைத்து இரண்டாவது மாதத்திலேயே நமக்கு வெண்டைக்காய் கிடைக்கும்.

ஒரு செடி 7 அடி உயரம் வரை வளரும். ஒரு செடியில் 20 முதல் 25 காய்கள் வரை கிடைக்கும். 12 செடியில் இருந்து ஒரு வாரத்திற்கு 400 முதல் 500 கிராம் வரை மகசுல் கிடைக்கும்.

12 செடியில் இருந்து 5 முதல் 6 கிலோ வரை  கிடைக்கும். 45-வது நாளில் இருந்து 140-வது நாள் வரை காய்களை அறுவடை செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!