gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் (மானசீகமாக வழிபடும் பெருமை)

நம்ம புராணங்களில் கதைகள் மிக மிக நன்றாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்புலக் கதையையும் சொல்வார்கள். அதை தற்காலத்துக்கு இணைத்தால் வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

அப்படி மனதால் மானசீகமாக வழிபடுவதின் பெருமை குறித்து மகாபாரதக் கதை ஒன்றைக் கூறுவர். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒருசமயம் பாண்டவர்களில் வில்வித்தையில் சிறந்தவனான அர்ச்சுனன் கயிலாயத்தைக் கடந்து சென்றான்.




அப்போது சிவகணங்கள் பூமியில் வழிபாடு செய்பவர்கள் இறைவனுக்கு இட்ட நிர்மாலியத்தை வாரிக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

பல்வகையான பூக்களும் வில்வமும் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அர்ச்சுனன் ‘இது நம்முடைய பூசையின் நிர்மாலியம்’ என்று நினைத்தான்.

சிவகணங்களிடம் “இது யார் செய்த பூசையின் நிர்மாலியம்?” என்று கேட்டான்.

“பூமியில் இருக்கும் பஞ்சபாண்டவர்களில் ஒருவன் வழிபாட்டில் பயன்படுத்தியது” என்றனர்.

“அவன் பெயர் என்ன?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

“அவன் பெயர் பீமன். இந்த மலைபோல் அந்தப் பக்கமும் பூக்கள் குவிந்து கிடக்கின்றன.” என்றனர்.

“பீமனா? பீமன் அண்ணன் உட்கார்ந்து சிவபூஜை செய்ததைப் பார்த்ததேயில்லையே” என்று எண்ணினான்.

பிறகு சிவகணங்களிடம் “அர்ச்சுனன் செய்த பூசையின் நிர்மாலியம் எங்கே?” என்று கேட்டான்.

அது அளவில் மிகப்பெரியது என்ற பதிலை எதிர்நோக்கிய அர்ச்சுனனிடம் சிவகணங்கள் “அதுவா? இதோ இந்த கூடையில் இருக்கிறது” என்று சிறிய கூடையைக் காட்டினர்.




பீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க | Unknown Facts About the Three Sons of Bhima - Tamil BoldSky

அதனைக் கேட்டதும் அர்ச்சுனன் அதிர்ச்சியில் “பீமன் சிவபூசை செய்து பார்த்ததில்லையே” என்றான்.

அதற்கு சிவகணங்கள் “அவன் இறைவனை மனத்தால் வழிபடுகிறான். ஒரு நந்தவனத்தைக் கண்டால் அதிலுள்ள பூக்கள் அனைத்தையும் மனத்தால் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவான். அது இங்கே மலையாகக் குவிந்துவிடும்.” என்றனர்.

அப்போது அர்ச்சுனனுக்கு மனத்தால் மானசீகமாக வழிபடுவதன் சிறப்பு விளங்கியது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!