Samayalarai

குழந்தைகளுக்கு பிடித்த ஜெல்லி மிட்டாய் செய்வது இவ்ளோ ஈசியா ?

இந்த மிட்டாய் பார்க்கும் போது நமக்கு சிறு வயது ஞாபகம் தான் வரும். இன்றைய காலகட்டத்தில் இந்த மிட்டாய் அவ்வளவாக எளிதில் கிடைப்பதில்லை. மிக அரிதாகத் தான் சில கடைகளில் விற்கப்படுகின்றது. நாம் அனைவரும் சிறு வயதில் ருசித்த அந்த ஜெல்லி மிட்டாயின் சுவை தற்போது கிடைக்கும் மிட்டாயில் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சரி, இந்த ஜெல்லி மிட்டாயை நம் வீட்டில் செய்து சாப்பிடுவோமா?




Recipes > Condiments > How To make Jellies

தேவையான பொருட்கள் : . 

கருப்பு நிற திராட்சை பழங்கள் – 200 கிராம்,

சர்க்கரை – 2 ஸ்பூன்,

கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்.

செய்முறை  விளக்கம் : .

  • முதலில் திராட்சை பழங்களை நன்றாகக் கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து திராட்சைப் பழத்தில் இருந்து ஜூஸ் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • திப்பியை வடிகட்டி தனியாக எடுத்து விட வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, முதலில் திராட்சை பழ சாரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

  • அந்த சாறுடன் 2 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவையும் சேர்த்து கட்டிப் படாமல் கலக்கி வைத்து அதன் பின்பு அடுப்பை பற்ற வையுங்கள்.




  •  அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த கலவையை கலந்து விட்டுக் கொண்டே வர வேண்டும்.

  • தண்ணீர் பதத்தில் இருக்கும் இந்த கலவை, நன்றாக கெட்டு பதம் வரும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

  • ஒரு ஜெல் பதம் வர வேண்டும். இதற்கு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை எடுக்கும்.

  • இப்போது ஃப்ரீசரில் வைக்கக் கூடிய ட்ரே, அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் குழியான தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி, இந்த ஜெல்லை அந்த ட்ரைவில் ஊற்றி கொஞ்சம் நேரம் ஆறிய பின்பு, அப்படியே ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.

  • அதன் பின்பு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் கழித்து வெளியே எடுத்துப் பாருங்கள். ஜெல்லி நன்றாக டிரேவில் செட் ஆகியிருக்கும்.

  • இதை கத்தியைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, சர்க்கரையில் பிரட்டி எடுத்தால் நாம் எல்லோரும் சிறு வயதில் ருசித்து சாப்பிட்ட ஜெல்லி மிட்டாய் தயார்.




குறிப்பு :

  • உங்களுக்கு வண்ணங்கள் நிறைய தேவை என்றால் அதற்கு ஏற்றார் போல் பல வகையான பழங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

  • மாதுளம் பழம், ஸ்ட்ராபெரி, மாம்பழம் இப்படிப் பட்ட பழங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!