Entertainment News

இந்த பண்டிகை காலங்களில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல் இதோ

பண்டிகைக் காலங்களில் மக்களிடையே பொருட்களை வாங்குவதற்கான எண்ணம் அதிகரிக்கும். அதற்கேற்ப நிறுவனங்களும் பண்டிகைக் காலங்களில் சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை வழங்கி வருகின்றன. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் ஸ்டோர்கள் மூலமாக பொருட்களை வாங்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

உள்ளூரில் செயல்படும் ஆன்லைன் ஸ்டோர்கள் தொடங்கி, நாடு தழுவிய அளவில் செயல்படும் ஆன்லைன் ஸ்டோர்கள் வரையில் மக்களுக்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றில் மக்கள் எதனை அதிகமாக உபயோகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா..? இதற்கு விடைத்தேடும் வகையில் கடந்த தீபாவளி அன்று அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Amazon & Flipkart Sales: சிவப்பாவது, பச்சையாவது.. அனைத்து நகரங்களிலும் ஆரம்பித்த அமேசான், பிளிப்கார்ட் சப்ளை.. எல்லாமே உண்டு | Amazon, Flipkart accepts non-essentials ...

ஃபிளிப்கார்ட் (Flipkart) : சந்தேகமே வேண்டாம். இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆன்லைன் ஸ்டோர்களின் ஃபிளிப்கார்ட் தான் முதல் இடத்தில் இருக்கிறது. எண்ணற்ற பொருட்கள், அவற்றின் தரத்தை பிரித்து பார்க்க உதவியாக உள்ள ரேட்டிங் போன்றவை இந்த ஆப்பின் சிறப்பு அம்சமாகும். இது பெங்களூருவில் இருந்து இயங்குகிறது.

ஷாப்ஸி (Shopsy) : கடந்த ஆண்டு தீபாவளியின்போது அதிக அளவில் இந்த ஆப் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் தான் இந்த ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது.




Meesho: Online Shopping App - Apps on Google Play

மீஷோ (Meesho) : கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சில்லறை விற்பனை ஆன்லைன் ஸ்டோர் ஆகும். இந்த ஆப் பயன்படுத்தி நீங்கள் பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில், அந்தப் பட்டியலை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறவுகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

அமேசான் (Amazon) : இந்தியாவில் இயங்கும் மாபெரும் அளவிலான ரீடெயில் ஸ்டோர்களில் இதுவும் ஒன்று. மொபைல், லேப்டாப் முதல் அழகு சாதான பொருட்கள், சமையலறை பொருட்கள் என அனைத்துமே இந்த தளத்தில் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil




ஏஜியோ (Ajio) :  இது ரிலையன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆப் ஆகும். நம்முடைய அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஃபேஷன் பொருட்கள் போன்றவை இதில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆடவர் மற்றும் மகளிருக்கான ஆடைகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன.

ஜியோ மார்ட் (Jio Mart) :  மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்த ஆப் இயங்கி வருகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கும் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் என ஏராளமான வர்த்தகம் நடைபெறுகிறது.

AJIO Life - YouTubeFlipkart's Shopsy Will Now Offer Groceries On Its Platform

டாடா என்.இ.யு (Tata Neu) : ஆன்லைன் வர்த்தகத்திற்கு என்று டாடா குழுமத்தால் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஆப் இதுவாகும். இதில் பல்முனை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மார்க்கெட்டில் சமீபத்திய வரவாக இது அறிமுகம் செய்யப்பட்டாலும் நல்ல போட்டியை ஏற்படுத்தி வருகிறது.




மிந்த்ரா (Myntra) :  இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007 – 2008 நிதியாண்டில் தொடங்கப்பட்டது ஆகும். எனினும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் இதனை 2014ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது.

ஓ.எல்.எக்ஸ் ( Olx) :  வாடிக்கையாளரே கூட தங்கள் பொருட்களை விற்பனைக்கு பட்டியலிடக் கூடிய தளமாக இது செயல்பட்டு வருகிறது. பழைய பொருட்களை கூட நாம் விற்பனைக்கு பட்டியலிட முடியும் என்பது இதன் பிளஸ் ஆகும்.

பர்பிள் (purplle) :  அழகுசாதன பொருட்களை விற்பனை செய்வதற்கு என்றே தனித்துவமான ஆப்-ஆக இது இயங்கி வருகிறது. பல்வேறு டாப் பிராண்ட் நிறுவனங்களின் பொருட்கள் இந்த தளத்தில் கிடைக்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!